தாயின் ஆரோக்கியமே குடும்பத்தின் நிம்மதி: தாய்மார்களுக்கான சூப்பர் உணவுகள்
அம்மாவின் ஆரோக்கியமே குடும்பத்தின் மகிழ்ச்சிக்கு ஆணிவேர்... குடும்பத்தின் நிம்மதிக்கு அடித்தளமாகும் தாய்மார்களுக்கான சூப்பர் உணவுகள்
புதுடெல்லி: ஆரோக்கியமே, நிம்மதியான வாழ்க்கைக்கு அடிப்படை ஆகும். அதிலும், குடும்பமே, பெரும்பாலும் தாயை மையமாக கொண்டு செயல்படும் இந்தியா போன்ற நாட்டில் தாயின் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டியது அவசியமாகிறது.
ஆனால், துரதிருஷ்டவசமாக, இந்தியாவில் தாயின் ஆரோக்கியத்திற்கும், அவர் உண்ணும் உணவுகளுக்கும் பெரிய அளவில் முக்கியத்துவம் கொடுக்கப்படுவதில்லை என்பது சோகமான விஷயம்.
குடும்பத்திற்கான தேவைகளை பார்த்துப் பார்த்து செய்யும் தாய், தனது ஆரோக்கியத்தில் கவனம் கொடுப்பதில்லை. ஆனால், ஒரு தாயின் உடல்நிலை மோசமானால், அது அவரது முழு குடும்பத்தின் நல்வாழ்வையும் பாதிக்கிறது.
இந்த உணவுகளை சேர்த்துக்கொள்வது, ஒரு தாயாக குடும்பத்திற்கு நீங்கள் செய்யும் சிறந்த செயலாக இருக்கும்.
தாயின் உடல்நலனுக்கு தேவையான உணவுகள் தொடர்பான இந்த ஆலோசனைகளை தருகிறார். டாக்டர் ஸ்வாதி ரெட்டி (PT), ஆலோசகர் பிசியோதெரபிஸ்ட் மற்றும் சான்றளிக்கப்பட்ட உணவு ஆலோசகர். இவர் MIAP, மதர்ஹுட் மருத்துவமனைகள், பெங்களூருவில் பணிபுரிகிறார்.
பச்சை காய்கறிகள் மற்றும் பழங்கள்
காய்கறிகள் மற்றும் பழங்கள் நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் தாதுக்களின் சிறந்த ஆதாரங்களாக இருக்கின்றன, அவை செரிமான சுகாதார பிரச்சினைகளுக்கு உதவுகின்றன, மலச்சிக்கலைத் தடுக்கின்றன.
உடலில் தாது சமநிலையை பராமரிக்கும் காய்கறிகள் மற்றும் பழங்களை தாய் தினசரி எடுத்துக் கொள்ள வேண்டும்.
ரசாயன முறையில் பழுக்கவைக்கப்பட்ட பழங்களை சாப்பிடுவதற்கு பதிலாக ஆர்கானிக் பழங்களை சாப்பிடுவது நல்லது. கீரை போன்ற காய்கறிகளில் வைட்டமின் ஏ, கால்சியம், இரும்புச்சத்து, வைட்டமின் சி மற்றும் இதயத்திற்கு நல்ல ஆரோக்கியமான ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன.
எனவே வாரத்தில் 4 நாட்கள் உங்கள் உணவில் இலைக் காய்கறிகளைச் சேர்த்துக்கொள்ளுங்கள்.
தேங்காய்
தேங்காய் எண்ணெய் அஜீரணம் ஏற்படாமல் ஆரோக்கியத்தை பாதுகாக்கும். தேங்காயை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்வது, ஆற்றல் அளவை அதிகரிக்கிறது.
இளநீரில் உள்ள மீடியம் செயின் ட்ரைகிளிசரைடுகள் செரிமானத்தை மேம்படுத்துகிறது மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வைட்டமின் ஈ சத்தும் இதில் உள்ளது.
உடல் எடையை குறைக்கும் முயற்சியில் உள்ள தாய்களுக்கு தேங்காய் எண்ணெய் ஏற்றது. உண்மையில் தேங்காய் எண்ணெயில் உள்ள கொழுப்பு, உடலுக்கு நன்மை பயப்பது ஆகும்.
மேலும் படிக்க | உணவுடன் இனிப்பு சாப்பிட்டா என்ன ஆகும்: ஸ்வீட் சாப்பிட பெஸ்ட் டைம்
முழு தானியங்கள்
முழு தானியங்களில் கார்போஹைட்ரேட் நிறைந்துள்ளது. பழுப்பு அரிசி, பார்லி மற்றும் ஓட்ஸ் போன்ற முழு தானியங்களில் உள்ள சிக்கலான கார்போஹைட்ரேட்டுகள் உங்கள் சர்க்கரை அளவை உறுதிப்படுத்துகிறது மற்றும் கூடுதல் கலோரிகளைச் சேர்க்காமல் ஆற்றலை அதிகரிக்க உதவுகிறது.
பால் பொருட்கள்
உங்கள் உணவில் முட்டை மற்றும் பால் போன்ற பால் பொருட்களை சேர்ப்பதன் மூலம் உங்கள் உடலுக்கு தேவையான புரதங்கள் மற்றும் கூடுதல் கால்சியத்தைப் பெறலாம்.
அசைவ உணவு உண்பவர்கள் இறைச்சிகளை உட்கொள்ளலாம் என்றால், சைவ உணவு உண்பவர்கள், பருப்பு வகைகள், முளைகட்டிய பயறுகளை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
ஆரோக்கியமான தாய் என்றால் ஆரோக்கியமான குடும்பம்
நீங்கள் ஆரோக்கியமாக இருந்தால் மட்டுமே மற்ற அனைவரையும் நீங்கள் கவனித்துக் கொள்ள முடியும் என்பதை மறந்துவிட வேண்டாம். சத்தான உணவை உட்கொள்வது, ஆரோக்கியமாகவும் சுறுசுப்பாகவும் இருக்க உதவுகிறது.
உங்கள் உணவில் இந்த சூப்பர்ஃபுட்களை சேர்த்துக்கொள்வது நீங்கள் எடுக்கும் சிறந்த முடிவாக இருக்கும். ஆரோக்கியமான தாய் என்றால் ஆரோக்கியமான குடும்பம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ஜீ மீடியா இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | உங்கள் சிறுநீரகம் சுத்தமாக உள்ளதா: தெரிந்துகொண்டு சுத்தப்படுத்துவது எப்படி
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR