சிறுநீரகம் சீராக இருக்க என்ன செய்ய வேண்டும்? என்ன செய்ய கூடாது?
Kidney Health: உடலில் முக்கிய உறுப்பான சிறுநீரகத்தை சீராக வைத்திருக்க உட்கொள்ள வேண்டிய உணவுகள், தவிர்க்க வேண்டிய உணவுகள் குறித்து இதில் காணலாம்.
Maintaining Kidney Health: ஒவ்வொரு உடல் உறுப்புகளுக்கும் உடலில் மேற்கொள்ளப்பட வேண்டியதற்கு தனிச்தனிச் செயல்பாடுகள். அந்தந்த உறுப்புகளின் செயல்பாடுகள் முறையாக நடந்துகொள்ளும்பட்சத்தில் உடல் ஆரோக்கியமாக இருக்கும். இதில், நாம் ஒவ்வொரு உறுப்பையும் தனித்தனியே கவனிக்க முடியாது. நமது உணவு முறையையும், வாழ்க்கை முறையையும் ஒரு ஒழுங்கில் கவனித்துக்கொண்டாலே அனைத்து உறுப்புகளையும் கவனித்துக்கொள்ளலாம்.
உணவு முறை என்று வரும்போது உப்பு மற்றும் சர்க்கரை என்பது நமது வாழ்வில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. குறிப்பாக, உயர் ரத்த அழுத்தம் மற்றும் நீரிழவு நோய் நமது உடலில் உள்ள பல உறுப்புகளில் பாதிப்புகளை ஏற்பட வாய்ப்புள்ளது. அதில், அதிக முக்கியத்துவம் கொடுப்பது அவசியமாகிறது.
சிறுநீரகம் உடலில் மிகவும் முக்கியமானது, ஏனெனில் அதன் உதவியுடன் நமது ரத்தம் சுத்தப்படுத்தப்பட்டு உடலில் இருந்து நச்சு பொருட்கள் வெளியிடப்படுகின்றன. ஆனால் நீரிழிவு சிறுநீரகத்தை சேதப்படுத்தும். சிறுநீரக பாதிப்பை தடுக்க ரத்த சர்க்கரையை கட்டுப்படுத்துவது அவசியம். எனவே, சிறுநீரகத்தை சீராக வைத்திருக்க என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து இதில் காணலாம்.
மேலும் படிக்க | சுகர் பிரச்சனை பாடாய் படுத்துகிறதா? அப்போ இந்த ஒரு இலை மட்டும் போதும்
நீரிழிவு சிறுநீரகத்தை எவ்வாறு பாதிக்கிறது?
ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுப்பாட்டை மீறினால், படிப்படியாக சிறுநீரகத்தில் இருக்கும் இரத்த நாளங்களின் குழுவைக் கெடுக்கும். இந்த இரத்த நாளங்கள் பலவீனமடையும் போது, சிறுநீரகம் இரத்தத்தை சரியாக சுத்தம் செய்ய முடியாது. இதன் காரணமாக, உயர் ரத்த அழுத்த பிரச்சனை தொடங்குகிறது மற்றும் சிறுநீரக பாதிப்பும் ஏற்படலாம்.
சர்க்கரை அளவை கட்டுப்படுத்தவும்
சுகாதார நிபுணர்களின் கூற்றுப்படி, சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்ட நோயாளியின் சர்க்கரையை கட்டுக்குள் வைத்திருப்பது அவசியம். இதற்காக, அவர்கள் தங்கள் வாழ்க்கைமுறையில் பல மாற்றங்களைக் கொண்டு வர வேண்டும்.
என்னென்ன செய்ய வேண்டும்?
- உணவு மற்றும் பானங்களில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.
- கோபம், மனஅழுத்தம் ஆகியவற்றை தவிரிக்க வேண்டும்.
-தொடர்ந்து உடற்பயிற்சி செய்யுங்கள்
- தினசரி யோகா செய்யுங்கள்.
சிறுநீரக பிரச்சனையில் இந்த உணவுகளை தவிர்க்கவும்
- அதிக உப்பு உட்கொள்ள வேண்டாம்.
- அதிக பொட்டாசியம் உள்ள காய்கறிகளில் இருந்து விலகி இருங்கள். (எ.கா- உருளைக்கிழங்கு, தக்காளி, கிவி, ஆரஞ்சு, வெண்ணெய்)
- பால், தயிர் மற்றும் பாலாடைக்கட்டி ஆகியவற்றில் இருந்தும் தள்ளியிருங்கள். ஏனெனில் இதில் பாஸ்பரஸின் அளவு அதிகமாக உள்ளது.
- பதப்படுத்தப்பட்ட பொருட்களை சாப்பிட வேண்டாம்.
- ஊறுகாய், கருவாடு மற்றும் குளிர்பானங்கள் சாப்பிட வேண்டாம்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்ளும் முன் மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE NEWS அதை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | எச்சரிக்கை! சரியான முறையில் சாப்பிடலைன்னா ... பழங்களால் ஒரு பயனும் இருக்காது!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ