நம் உடலில், மீண்டும் வளரக் கூடிய ஒரேயொரு உள்ளுறுப்பு என்றால் அது கல்லீரல் மட்டுமே. கல்லீரல் என்பது செரிமான அமைப்பின் ஒரு முக்கியமான உறுப்பு ஆகும். கல்லீரல் ஆரோக்கியமாக இருந்தால் உடலில் பல செயல்பாடுகள் ஆரோக்கியமாக இருக்கும்.
வாழ்க்கை முறை மோசமாக இருக்கும் போது அல்லது உணவில் அலட்சியம் காட்டுவது போன்றவற்றால், கல்லீரலில் பாதிப்பு ஏற்படுகிறது. கல்லீரலில் நோய் ஏற்பட்டால் அது உடலின் இயக்கத்தைப் பாதிக்கிறது.
உடலில் புரதங்கள், கொலஸ்ட்ரால் மற்றும் பித்த உற்பத்தி முதல் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் கார்போஹைட்ரேட்டுகளை சேமித்து வைப்பது வரை பல முக்கிய செயல்பாடுகளைச் செய்யும் ஆற்றல்மிக்க உறுப்பு கல்லீரல். எனவே, ஆரோக்கியமான கல்லீரலுக்கு என்ன உணவுகளை தவிர்க்க வேண்டும் என்பதை அறிந்து கொள்வது மிகவும் அவசியம்.
அதிக அளவிலான இனிப்பு உணவுகள் கல்லீரலை அதிக அளவில் சேதப்படுத்தும். சர்க்கரை ஆல்கஹாலை போலவே கல்லீரலை சேதப்படுத்தும்.
துரித உணவுகள் நீண்ட நேரம் கெட்டுப் போகாமல் இருக்க அவற்றில் அஜினோமோட்டோ பயன்படுகிறது. இதனை பயன்படுத்துவதினால் உங்கள் கல்லீரலின் செயல் திறன் பலவீனமடைகிறது.
அளவிற்கு அதிகமான வலி நிவாரணிகள் உட்கொண்டால் கல்லீரல் பாதிப்பு ஏற்படும். மருத்துவரின் ஆலோசனையின்றி எந்த மருந்தையும் உட்கொள்ளும் தவறை செய்யாதீர்கள்.
குளிர் பானங்கள் மற்றும் சோடா கல்லீரலில் பிரச்சனையை ஏற்படுத்தும். இவற்றில் அதிக அளவு சர்க்கரை மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் உள்ளன. அவை கல்லீரலுக்கு பெரும் தீங்கு விளைவிக்கும்.
மைதா மாவில் செய்யப்பட்ட உணவுகள் சுவையானது தான். ஆனால் தாதுக்கள், நார்ச்சத்து மற்றும் வைட்டமின்கள் இல்லாத மைதா கல்லீரலுக்கு பெரிதும் பாதிப்பை ஏற்படுத்தும்.
உப்பில் சோடியம் உள்ள நிலையில் அதிக உப்பை உண்பதால் உடலில் கூடுதல் நீர் தேங்குகிறது. இதனால், கல்லீரலில் வீக்கம் ஏற்படும் அபாயம் உள்ளது. கொழுப்பு கல்லீரல் மற்றும் கல்லீரல் ஈரல் அழற்சி இருந்தால் உப்பு தவிர்க்கப்படுவதற்கு இதுவே காரணம்.
அதிகப்படியான ஆல்கஹால் உங்கள் கல்லீரலை சேதப்படுத்தும். இதனால் ரத்த வாந்தி, மஞ்சள் காமாலை, புற்றுநோய் போன்ற பிரச்னைகள் ஏற்படும்.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்ளும் முன் மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.