முடி கொட்டும் புகார் தற்போது சர்வ சாதாரணமாகி வருகிறது. மாறிவரும் வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கவழக்கங்களால் பெரும்பாலானோர் முடி கொட்டும் பிரச்சனையை எதிர்கொள்கின்றனர். இத்தகைய சூழ்நிலையில், முடி வளர்ச்சியை அதிகரிக்க அனைத்து வகையான நடவடிக்கைகளையும் மேற்கொண்ட பிறகும், நீங்கள் எந்த பலனையும் பெறவதில்லை, ஆனால் இந்த பிரச்சனைக்கு தீவாக உங்கள் உணவில் சில சத்தான விதைகளை சேர்த்துக்கொள்ளலாம் அவை உங்களுக்கு உடனடி பலனைத் தரும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த விதைகளை பச்சையாகவோ அல்லது சமைத்தோ உண்ணலாம்
பூசணி விதைகள் மற்றும் வெந்தய விதைகள் முடி வளர்ச்சிக்கு உதவும் மிகவும் பிரபலமான விதைகள் ஆகும். இதனுடன், ஆரோக்கியமான உணவு மற்றும் நல்ல வாழ்க்கை முறையை பராமரிப்பது முடி வளர்ச்சியை விரைவாக அதிகரிக்க ஒரு வழியாகும். நீங்கள் வேகமாக முடி வளர விரும்பினால், உங்கள் உணவில் ஊட்டச்சத்து நிறைந்த சில விதைகளைச் சேர்க்கவும். இந்த விதைகளை பச்சையாகவோ அல்லது சமைத்தோ சாப்பிடலாம்.


மேலும் படிக்க | Neeri-KFT சிறுநீரக நோயாளிகளுக்கு வரப்பிரசாதமாகுமா; மருத்துவர் கூறுவது என்ன..!!


இந்த விதைகள் முடி வளர்ச்சியை அதிகரிக்கும்
* எள் விதைகள் உங்கள் முடி வளர்ச்சியையும் அதிகரிக்கும். இதை காய்கறியில் சேர்த்தும் அல்லது வேறு எந்த வகையிலும் சாப்பிடலாம். இதனால் உங்கள் முடி வேகமாக வளரும்.


* சூரியகாந்தி விதைகள் முடி வளர்ச்சியை அதிகரிக்கும் என்பது பலருக்கு தெரியாது. அவை ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் துத்தநாகத்தையும் கொண்டிருக்கின்றன, அவை ஆக்ஸிஜனேற்ற வைட்டமின் ஈவை ஊக்குவிக்கின்றன.


* பூசணி விதைகளும் முடி வளர்ச்சியைத் தூண்டும். துத்தநாகம், செலினியம், தாமிரம், மெக்னீசியம், இரும்புச்சத்து, கால்சியம், வைட்டமின்கள் ஏ, பி, சி போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன.


* வெந்தய விதைகளைப் பற்றி பலருக்குத் தெரியும், ஆனால் அது முடி வளர்ச்சியையும் அதிகரிக்கும் என்பது சிலருக்குத் தான் தெரியும். எனவே உங்கள் உணவில் வெந்தய விதைகளைப் பயன்படுத்த முயற்சிக்கவும்.


(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொதுவான தகவலுக்காக மட்டுமே. இது எந்த வகையிலும் வேறு வித  சிகிச்சைக்கான மாற்றாக இருக்க முடியாது. இதனை பின்பற்றும் முன், மேலும் விவரங்களுக்கு எப்போதும் உங்கள் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறவும்.)


மேலும் படிக்க | முகத்தின் அழகை சீர்குலைக்கும் ‘கருவளையங்களை’ விரட்ட சில எளிய டிப்ஸ்!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR