Happy Pongal 2023: பெரும்பாலானோர் பொங்கல் பண்டிகை முன்னிட்டு கரும்பு சாப்பிடுவது வழக்கம்தான். தைப் பொங்கலுக்கு முன்பிருந்தே அமோகமாக கரும்பு விற்பனையாகும். முன்பெல்லாம் வீட்டில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை கரும்பு சாப்பிடுவதை விரும்புவார்கள். ஆனால், தற்போது அந்த பழக்கம் குறைந்துவிட்டதாக கூறப்படுகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இருப்பினும், சிலர் பேர் கரும்பை நேரடியாக கடிக்க விரும்பாமல், கத்தி, அரிவாளால் வெட்டி அதனை துண்டு துண்டாக சாப்பிடுவதை விரும்புகின்றனர். கரும்புச்சாறு ஆண்டு முழுவதும் கிடைத்தாலும், பொங்கலை முன்னிட்டு வரும் செங்கரும்பை கடித்துச்சாப்பிடுவதுதான் தனிச்சுவை. 


வீட்டில் வாங்கிவரும் ஒரு கட்டு கரும்பையும் அசராமல் கடித்து சாப்பிட்டு முடித்துவிட்டு, பெட்டிக் கடையில் துண்டாக துண்டாக சில்லறைக்கு விற்கும் கரும்பை சாப்பிடும் காலம் போய், மொத்தமே இரண்டு மூன்று கரும்பை வாங்குவதும், அதையும் முழுவதுமாக சாப்பிடாமல், கரும்புச்சாறு கடையில் கொடுத்து ஜூஸ் குடிப்பதும் தற்போதைய வழக்கமாக மாறிவிட்டது. 


மேலும் படிக்க | சர்க்கரை நோய் இருப்பவர்கள் சர்க்கரை பொங்கல் சாப்பிடலாமா?


அந்த வகையில், கரும்பை சாப்பிட்டுவிட்டு உடனே தண்ணீர் குடித்தால் அடுத்த 5, 6 நாள்களுக்கு வாயில் புண் ஏற்படும் என்பதையும் தற்போது பலரும் மறந்துவிட்டனர். தற்போது அது ஞாபகத்தில் இருந்தாலும் ஏன் வாயில் புண் வருகிறது என குழந்தைகளுக்கு கேட்டால், அதற்கு பதில் சொல்ல தெரிய வேண்டும் அல்லவா... எனவே, ஏன் கரும்பு சாப்பிட்டு தண்ணீர் குடித்தால் வாயில் புண் வருகிறது என்பதை இங்கு தெரிந்துகொள்ளுங்கள். 


பெரிய ஆபத்து 


கரும்பு சாப்பிட்ட உடன் தண்ணீர் குடிக்க கூடாது. ஒருமணி நேரம் கழித்துதான் தண்ணீர் பருக வேண்டும். கரும்பில் கால்சியம், போட்டாஸியம் போன்ற சத்துகள் அதிமிருக்கின்றன. அந்த சத்துகள் உங்கள் வாயில், அதாவது வயிற்றில் இருக்கும்போது தண்ணீர் குடித்தால், அந்த சத்துகளும், தண்ணீரும் வேதியல் வினைபுரிய தொடங்கிவிடும். 


ஒருவேளை கரும்பை சாப்பிட்டுவிட்டு தண்ணீர் குடித்தால், வயிற்றுப் புண்கள், வாய் புண்கள் மட்டுமின்றி வயிற்று வலி, வீக்கம், மார்பு இறுக்கம்,  மற்றும் தலைவலி போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம். எனவே, மிக கவனமுடன் இருங்கள்.   


சிலர், தெரிந்தோ தெரியாமலோ, சாலடுகள், எள், நீர்ச்சத்து அதிகம் உள்ள பழங்கள், இனிப்புகள் மற்றும் வேர்க்கடலை போன்ற உணவுகளை உட்கொண்ட பிறகு தண்ணீர் குடிக்கிறார்கள். மேலும், இதனா் மாரடைப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, மேற்கூறிய உணவுகளை எடுத்துக் கொண்டாலும், தவறுதலாக தண்ணீர் குடிக்க வேண்டாம்.


மேலும் படிக்க | Kidney Health: சிறுநீரக கல் பிரச்சனைக்கு தீர்வைத் தரும் 3 வகை ஜுஸ்கள்!


(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்ளும் முன் மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE NEWS இதற்கு பொறுபேற்காது.)


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ