சர்க்கரை நோய் இருப்பவர்கள் சர்க்கரை பொங்கல் சாப்பிடலாமா?

Happy Pongal 2023: தைப்பொங்கல் வெகு விமரிசையாக கொண்டாடப்படும் நிலையில் சர்க்கரை நோய் இருப்பவர்கள் மற்றும் இதயக்கோளாறு உள்ளவர்கள் சர்க்கரை பொங்கல் சாப்பிடலாமா? என்பதை இங்கே தெரிந்து கொள்வோம்.    

Written by - S.Karthikeyan | Last Updated : Jan 15, 2023, 01:01 PM IST
சர்க்கரை நோய் இருப்பவர்கள் சர்க்கரை பொங்கல் சாப்பிடலாமா? title=

Happy Pongal 2023: தமிழர் திருநாளாம் பொங்கல் அன்று பெரும்பாலான வீடுகளில் சர்க்கரை பொங்கல் என்பது தவிர்க்க முடியாத உணவாக உள்ளது. அரிசி, பருப்பு, வெல்லம் ஆகியவற்றால் சமைக்கப்படும் சர்க்கரை பொங்கல், பொங்கல் பண்டிகையையே தித்திக்கவைக்கும் உணவில் ஒன்றாகும். தமிழ்நாட்டில் ஆண்டு முழுவதும் சிறப்பு நாள்களில் சர்க்கரை பொங்கல் செய்யப்பட்டாலும் பொங்கல் அன்று செய்யப்படுவதற்கு தனிச்சிறப்பு உண்டு. 

மேலும், பொங்கல் தினத்தன்று வீடுகளின் வெளியே ஓலை அடுப்பில் சர்க்கரை பொங்கல் விடுவது வழக்கமாகும். எனவே, அனைவரும் தங்கள் வீடுகளில் மட்டுமில்லாது உறவினர்கள், அக்கம்பக்கத்தினர், நண்பர்கள் வீடுகளில் சர்க்கரை பொங்கலை தொடர்ந்து சாப்பிடுவார்கள். மேலும், பொங்கலை அடுத்து சுமார் 3 நாள்களுக்கு அந்த சர்க்கரை பொங்கல் நம்மைச் சுற்றி சுற்றி வரும் நிலையில், அதை தவிர்ப்பது என்பதகு சற்று கடினம்தான். 

மேலும் படிக்க | வயிற்றில் இந்த உணர்வுகள் இருக்கிறதா? கேன்சராக கூட இருக்கலாம்!

ஆனால், சர்க்கரை பொங்கலில் என்னவெல்லாம் இருக்கிறது, அதனால் கிடைக்கும் சத்துகள், கலோரிகள், எவ்வளவு அதனை சாப்பிட வேண்டும் போன்ற தகவல்களை தெரிந்துகொள்ளுங்கள். அதனை தெரிந்துகொள்வதன் மூலம், அதனை அளவாக சாப்பிட்டு, உங்களின் உடல்நிலையை பாதுகாத்து கொள்ள முடியும். 

சர்க்கரை பொங்கலில் உள்ள நன்மைகள்

சர்க்கரை பொங்கலில் போடப்படும் மஞ்சள் பாசிப்பருப்பு உங்கள் உடலில் கெட்ட கொழுப்புகளை தேங்கவிடாமல், உங்களின் இதயத்தை பாதுகாப்பாக வைத்திருக்கும். மேலும், அதில் இருக்கும் புரதம், இரும்புச்சத்து போன்றவை உங்கள் சருமத்தை பாதுகாக்க உதவும். ஃபைபர், போட்டாசியம், மேக்னிஸியம் போன்றவை பாசிப்பருப்பில் நிறைந்திருப்பதால், அவை ரத்த அழுத்தத்தை சீராக வைத்திருக்க உதவும். 

சர்க்கரை பொங்கலில் பச்சரிசி இருக்கும் என்பதால் அதில் கிடைக்கும் கார்போஹைட்ரேட்ஸ் உடலுக்கு அதிக சக்தியை கொடுக்கும். இதில், ஃபைபர் குறைந்து காணப்படுவதால் வயிற்று போக்கால் பாதிக்கப்பட்டவர்கள் இதனை உட்கொள்ளலாம். அரிசியில் அதிக கிளைசெமிக் குறியீடு உள்ளதால், அவை உடல் எடையை குறைக்க உதவாது. மேலும், பச்சரிசி இதய கோளாறு நோயாளிகள், நீரிழிவால் பாதிக்கப்பட்டார்களுக்கு சற்று கேடானது. இவை, ரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைத்திருக்கவும் உதவாது. 

சர்க்கரை பொங்கலில் உள்ள தீமைகள்

வெல்லம்: வெள்ளை சர்க்கரையை விட பனை வெல்லம் இயற்கையான இனிப்பை வழங்கக்கூடியது. இதில், கலோரிகள் பெரிதாக கிடையாது. வெள்ளை சர்க்கரை பல நோய்களுக்கு வழிவகுக்கும் என்பதால், வெல்லத்தை பலரும் உட்கொள்வார்கள். ஆனால், வெல்லத்தையும் குறைவாக எடுத்துகொள்ள வேண்டும்.  இதய கோளாறு நோயாளிகள், உடல் எடையை குறைக்க விரும்புவோர் இதனை குறைத்துகொள்ள வேண்டும். 

வெல்லம், நெய் அதிகம் இருப்பதால் நீரிழிவால் பாதிக்கப்பட்டவர்கள், இதய கோளாறுகள், அதிக எடைக்கொண்டவர்களுக்கு சர்க்கரை பொங்கலை எடுத்துக்கொள்ள வேண்டாம். அதில் இருந்து கொஞ்சம் தள்ளியே இருங்கள். அதற்காக இதனை சாப்பிடவே கூடாதா என்றால் இல்லை, அளவாக சாப்பிடலாம். 

மேலும் படிக்க | சர்க்கரை பொங்கல் சாப்பிட்டால் சுகர் அதிகமாகுமா... உண்மை என்ன?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News