புதுடெல்லி: உணவின் சுவையை மேம்படுத்த பயன்படுத்தப்படும் இஞ்சி பல்வேறு மருத்துவ குணங்களைக் கொண்டது. சிறப்பான ஆன்டி-ஆக்ஸிடன்ட் பண்புகளை அதிகளவில் கொண்ட இஞ்சியில், ஜிஞ்சரால் மற்றும் ஷோகோல் எனப்படும் சிறப்புக் கூறுகள் உள்ளன, இவை உடலுக்கு பல வழிகளில் நன்மை பயக்கும். அதுமட்டுமல்ல, இஞ்சியில் துத்தநாகம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. நமது ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் இஞ்சியை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், உடலில் பல நல்ல மாற்றங்கள் ஏற்படும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இஞ்சி+ வெந்நீர் காம்போ


இஞ்சியை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து அந்த தண்ணீரை குடித்தால், கீல்வாதம், வயிற்று பிடிப்பு, முதுகு வலி, மூச்சுக்குழாய் அழற்சி, கழுத்து விறைப்பு, சீதளம், சிறுநீரகம் மற்றும் கல்லீரல் வீக்கம் போன்ற பிரச்சனைகள் நீங்கும். நம் உடலில் உள்ள ரத்தத்தை சுத்தீகரிக்கும் பணியை இஞ்சி மிகவும் சிறப்பாக செய்கிறது. நமது அன்றாட உணவில் இஞ்சியை அதிகமாக சேர்த்து வந்தால் இரத்தத்தில் தொற்றுகள் ஏற்படாது, இரத்த ஓட்டம் அதிகமாகும்.


உடல் எடை குறைப்பில் இஞ்சி
இஞ்சியில் இருக்கும் நார்சத்து, பசியை அடக்குகிறது. அதனால் உடல் எடையை குறைக்க விரும்புகிறவர்களுக்கு இஞ்சி சரியான உணவாக இருக்கின்றது.


பல்வேறு பிரச்சனைகளை போக்கும் இஞ்சி


இயற்கை வைத்தியத்தில் இஞ்சி ஒரு அருமருந்து என்றே சொல்லலாம். நரம்புகளை பலப்படுத்தி, தலைவலி, பித்தம், வாந்தி, மயக்கம் போன்ற பிரச்சனைகளை தீர்த்து உடலுக்கு புத்துணர்ச்சியை வழங்கி, தசைகளை உறுதிபடுத்துகிறது. தினசரி சுத்தமான இஞ்சியை சாப்பிட்டு வந்தால் கேன்சர் செல்கள் அழிந்துவிடும் என்றும் கூறப்படுகிறது.


மேலும் படிக்க | உடல் பருமனை ஓட ஓட விரட்டும் பழங்கள் இவைதான்... ஜிம், டயட் எதுவும் தேவையில்லை!!


சர்க்கரைக்கு மூலிகை மருந்தாய் மாறும் இஞ்சி
நீரிழிவு நோய் உள்ளவர்கள் தினமும் இஞ்சி சாற்றுடன் வெங்காய சாற்றையும் சேர்ந்து குடித்து வந்தால், ரத்த சர்க்கரை அளவை கட்டுபடுத்தலாம். இஞ்சி சாற்றோடு தேன் கலந்து குடித்து வர செரிமான மண்டலம் சீராவதுடன், வயிற்றில் இருக்கும் கொழுப்பு குறையும். ஏற்கனவே கூறியது மாதிரி இது உடல் பருமன் குறைய நல்ல தீர்வு.  அதுவும் இஞ்சியோடு புதினாவை சேர்த்து துவையல் செய்து சாப்பிட்டால் அஜீரணம், பித்தம் நீங்கும், வாயில் ஏற்படும் துர்நாற்றமும் அடங்கும்.


வயிற்றுப் புண்ணை குணமாக்கும் இஞ்சி 


வயிறு தொடர்பான பிரச்சனைகளைத் தடுப்பதில் இஞ்சி மருந்தாகப் பயன்படுகிறது. லேசான வயிற்றுவலி அல்லது குடல்புண் எதுவாக இருந்தாலும், இஞ்சியை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், இந்தப் பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம். வயிற்றில் காணப்படும் எச்.பைலோரி பாக்டீரியா வயிற்றில் புண்களை உண்டாக்குகிறது, இஞ்சியை உட்கொண்டு வந்தால், அல்சரில் அதிக நிவாரணம் கிடைக்கும்.


மூட்டுவலியில் இருந்து நிவாரணம் கொடுக்கும் இஞ்சி
இஞ்சியில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் நம் உடலில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்க பெரிதும் உதவுகிறது. இஞ்சியின் வழக்கமான நுகர்வு கீல்வாதத்தினால் ஏற்படும் பயங்கரமான வலியை சமாளிக்க உதவுகிறது. இதனுடன், நமது எலும்புகளை வலுப்படுத்தும் சில கூறுகளும் இஞ்சியில் காணப்படுகின்றன.


அல்சைமர் நோயில் நன்மை பயக்கும் இஞ்சி


அல்சைமர் போன்ற தீவிர நோயைக் குணப்படுத்த இஞ்சி பெரிதும் உதவுகிறது, இஞ்சி சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்தை மட்டுமல்ல, மன ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது. இஞ்சியில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் மூளையில் ஏற்படும் வீக்கத்தைக் குறைத்து அல்சைமர் போன்ற கடுமையான பிரச்சனைகள் ஏற்படாமல் பாதுகாக்கின்றன.


மாதவிடாய் வலியில் இருந்து நிவாரணம்
பெண்கள் இஞ்சியை தண்ணீரில் கொதிக்க வைத்து குடித்தால், மாதவிடாய் வலியில் இருந்து நிவாரணம் கிடைக்கும். பீரியட்ஸ் வலியிலிருந்து நிவாரணம் பெற, சுக்குப் பொடியையும் பயன்படுத்தலாம். மாதவிடாயின் போது தாங்க முடியாத வலியிலிருந்து நிவாரணம் பெற, இஞ்சி தண்ணீரை ஒரு நாளைக்கு 2-3 முறை குடித்தால், அது உங்களுக்கு மிகவும் நன்மை பயக்கும்.


(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்கலிய உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | காலையில் வெறும் வயிற்றில் காபி குடிப்பதால் இவ்வளவு ஆபத்துகளா? 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ