ஆஸ்துமா நோயாளிகளுக்கு சுவாசிப்பதில் சிரமம் இருப்பது இயல்பான விஷயமாகும். இந்த நோயில், காற்று போகும் குழாய் குறுகலாகிறது. ஆஸ்துமா நோயாளிகள் சுவாசிக்க சிரமப்படுவதற்கு இதுவே காரணம். வானிலை மாற்றத்தாலும் ஆஸ்துமா நோயாளிகளுக்கு பல வகையான சிரமங்கள் ஏற்படுகின்றன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தாங்கள் உட்கொள்ளும் உணவு மற்றும் பானங்களை சரியாக கவனித்துக்கொண்டால் அதிக அளவில் பெரிதும் பயனடையலாம். உணவு மற்றும் பானம் தவிர, ஆஸ்துமா நோயாளிகள் (Asthma Patients) வேறு பல விஷயங்களையும் கவனித்துக் கொள்ள வேண்டும்.


சில உணவுப் பொருட்களை ஆஸ்துமா (Asthma) நோயாளிகள் அதிகம் உட்கொள்ளாமல் தவிர்ப்பது நல்லது. இவற்றை முற்றிலும் உட்கொள்ளக்கூடாது என்று இல்லை, ஆனால், முடிந்தவரை தவிர்க்கலாம். குறைவாக உட்கொண்டால் சிறந்ததாக இருக்கும்.


ஆஸ்துமா நோயாளிகள் இந்த விஷயங்களிலிருந்து விலகி இருக்க வேண்டும்


-உளுந்து, பட்டாணி, கொண்டைக்கடலை மற்றும் காபூலி சன்னா


-எரிச்சலை உண்டாக்கக்குடிய உனவு வகைகள்


-உணவில் அதிக எண்ணெய்


-மீன், கோழி மற்றும் பிற அசைவ உணவு வகைகள்


-மிகவும் குளிர்ச்சியான உணவு, பழமைய உணவு


-அசுத்தமான நீர்


ALSO READ: Health News: நின்றுகொண்டே சாப்பிடுவதால் இத்தனை பிரச்சனைகள் வருமா?


ஆஸ்துமா நோயாளிகள் இந்த விஷயங்களை மனதில் கொள்ள வேண்டும்


-புகைபிடிக்காதீர்கள்


-புகைபிடிக்கும் (Smoking) நபர்களிடமிருந்து விலகி இருங்கள்


-அதிகமாக உடற்பயிற்சி (Exercise) செய்ய வேண்டாம்


-மழை, குளிர் உள்ள இடங்களுக்கோ, தூசி நிறைந்த இடங்களுக்கு போவதைத் தவிர்க்கவும்


-குளிர்ந்த மற்றும் மிகவும் ஈரப்பதமான சூழலில் வாழ வேண்டாம்


-குளிர்காலத்தில் பனியில் செல்வதைத் தவிர்க்கவும்


-ஒரே நேரத்தில் அதிகப்படியான உணவைத் தவிர்க்கவும்


-உணவை நன்றாக மென்று மெதுவாக சாப்பிடுங்கள்


-இரவு உணவிற்குப் பிறகு சிறிது நேரம் நடக்கவும்


-முழுமையான உறக்கம் தேவை. இரவில் சரியான நேரத்தில் தூங்குங்கள்.


ALSO READ: கண்களைச் சுற்றி இருக்கும் கருவளையம் மறைய எளிய வழிகள்


ஆஸ்துமா நோயாளிகள் இந்த விஷயங்களை உணவில் சேர்க்கவும்


-பயறு வகைகள்


-காய்கறிகள்: சுண்டைக்காய், பூசணி, பாகற்காய், கீரை, காலிஃபிளவர், கேரட், கத்திரிக்காய், சர்க்ககரைவள்ளி கிழங்கு, தக்காளி மற்றும் பருவகால பச்சை காய்கறிகள்


-பழங்கள்: பப்பாளி, ஆப்பிள், பெர்ரி, மாம்பழம் மற்றும் ஸ்ட்ராபெரி


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR