கண்களைச் சுற்றி இருக்கும் கருவளையம் மறைய எளிய வழிகள்

கருவளையம் நிரந்தரமா போகணுமா.. வீட்ல இருக்கிற இந்த பொருளே போதும். உடனே பயன்படுத்துங்கள்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 21, 2020, 05:03 PM IST
கண்களைச் சுற்றி இருக்கும் கருவளையம் மறைய எளிய வழிகள் title=

கண்களைச் சுற்றி கருப்பு வளையம் சில பெண்களுக்கு இருக்கும். இது பெண்களை வயதானவர் போல் காட்டும். சரியான தூக்கம் இல்லாமல் போனாலும் கண்களில் கருவளையம் தோன்றும். தினமும் குறைந்தது எட்டு மணி நேரமாவது தூங்க வேண்டும்.

முன்பு 40 வயதை கடந்த பெண்களுக்கு தான் இவை அதிகமாக இருந்தது. தற்போது ஆண்களுக்கும் கண்களுக்கு கீழ் கருவளையம் (Dark Circles) தோன்றுவது அதிகரித்துவருகிறது. பருவ வயதை அடையும் பெண்களுக்கும் முன்கூட்டியே இந்த பிரச்சனை அதிகரித்துவருகிறது. முகத்தில் அந்த இடம் மட்டும் கருப்பாக தெரியும் அளவுக்கு கருவளையம் இருந்தால் என்ன செய்யலாம் என்பதை பார்க்கலாம்.

ALSO READ | அழகான சருமத்திற்கு மஞ்சளின் மகிமை மெருகூட்டும் என்பதை நிரூபிக்கும் 6 வழிகள்

  • வெள்ளரிக்காய், உருளைக்கிழங்கு இரண்டையும் சம அளவு எடுத்து அதை நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
  • ஒரு மெல்லிய வெள்ளை துணியை பன்னீரில் நனைத்து கண்களின் மீது வைத்து, அதன் மேல் அரைத்த கலவையை வைக்க வேண்டும். அப்படியே அரை மணி நேரம் இருக்க வேண்டும். இவ்வாறு வாரத்தில் 5 நாட்கள் செய்தாலே போதுமானது. கருவளையம் இருந்த இடம் தெரியாமல் போய்விடும். 
  • வெள்ளரிக்காய்ச்சாறை முகத்தில் தேய்த்து, ஒரு மணி நேரத்திற்கு பின் கழுவி விட வேண்டும். தொடர்ந்து இதுபோல் செய்து வந்தால், கருவளையம் படிப்படியாக மறைய ஆரம்பித்து விடும்.
  • ஜாதிக்காய் பொடியை பேஸ்ட் செய்து இரவில் படுக்கும் போது கண்களைச் சுற்றி தடவி இரவு முழுவதும் ஊற வைத்தால், அதில உள்ள வைட்டமின் ஈ மற்றும் சி சத்தினால் கருவளையங்கள் நீங்கும்.
  • பாதி தக்காளியை (Tomato) அரைத்து, அதில் பாதி எலுமிச்சையைப் பிழிந்து, 1 சிட்டிகை மஞ்சள் தூள் மற்றும் சிறிது பயித்தம் பருப்பு மாவு சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, கண்களைச் சுற்றி தடவி ஊற வைத்து கழுவினால், கருவளையங்கள் மறையும்.
  • பாதாமை (Badam) பொடி செய்து, அதில் சிறிது பால் சேர்த்து பேஸ்ட் செய்து கண்களைச் சுற்றி தடவி 10 நிமிடம் ஊற வைத்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதனாலும் கருவளையங்கள் மறையும்.

ALSO READ | ஆரோக்கியமான தோல் (ம) வலுவான கூந்தலுக்கு இந்த எண்ணெயை பயன்படுத்துங்கள்...

இப்படி செய்து வந்தால் கருப்பு வளையம் நீங்கி கண்கள் அழகாகவும், முகம் பார்க்க கவர்ச்சியாகவும் இருக்கும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News