இரவு தூங்கி காலை எழுந்ததும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பழக்கம் இருக்கும், சிலருக்கு காலையில் சூடாக காபி குடிப்பது, சிலருக்கு உடற்பயிற்சி செய்வது, சிலருக்கு ஏதேனும் ஆரோக்கிய பானம் அருந்துவது என்று எதையாவது ஒன்றை முதல் வேலையாக வைத்திருப்பார்கள்.  ஆனால் இவை அனைத்தையும் விட உங்களது உடலை மிகவும் சுறுசுறுப்பாகவும், உடலுக்கு நல்லதையும் தருவது என்னவென்றால் காலி நேரத்தில் குளிர்ந்த நீரில் குளிப்பது தான்.  காலையிலேயே குளிர்ந்த நீரில் குளிப்பது என்பது பெரும்பாலான நபர்களுக்கு பிடிக்காத ஒன்று, குளிர்ந்த நீரில் குளிப்பது நமக்கு உடல் சுறுசுறுப்பு ஏற்படுகிறது, நமது மெட்டபாலிசத்தை தூண்டுகிறது மற்றும் மன அமைதியையும் தருகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


மேலும் படிக்க | Liver Detox: கல்லீரலில் உள்ள நச்சுக்களை நீக்கும் மேஜிக் ட்ரிங்க்


காலை வேளையில் சூடாக காபி அருந்துவது எப்படி உங்களை சுறுசுறுப்பாக செயல்பட வைக்கிறது என்று நினைக்கிறீர்களோ அதேபோல தான் காலை நேர குளியலும், குளிர்ந்த நீரில் நீராடுவது உங்களது மூளையை விழிப்பாக இருக்க செய்கிறது.  குறிப்பாக குளிர் காலங்களில் காலை நேரத்தில் கொஞ்சம் வெதுவெதுப்பான நீரில் குளிப்பதை தான் பலரும் விரும்புவார்கள், அந்த சமயத்தில் யாரும் குளிர்ந்த நீரில் குளிப்பதை விரும்பமாட்டார்கள்.  ஆனால் இது உங்கள் உடம்பில் நோயெதிர்ப்பு சக்தையை உண்டு பண்ணுகிறது, ரத்த ஓட்டத்தை சீராக்குகிறது என நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.



மேலும் குளிர்ந்த நீரில் குளிப்பதால் காலையில் நீங்கள் முழு ஆற்றலுடன் சுறுசுறுப்பாக செயல்படலாம், உடற்பயிற்சிகளிலிருந்து விரைவாக மீட்கவும், இரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும் மற்றும் வீக்கத்தைக் குறைக்கவும், வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும், உடலை சுத்திகரிக்கவும் உதவுகிறது.  இதுதவிர, மனநிலை மற்றும் மன உறுதியை மேம்படுத்த, நாள்பட்ட வலியைக் குறைக்கவும், மன அழுத்தத்தின் அளவைக் குறைக்கவும் உதவுகிறது.


மேலும் படிக்க | Fibromyalgia: உடல் வலியை அலட்சியம் செய்ய வேண்டாம்; தசைநார் வலி நோய் காரணமாக இருக்கலாம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ