பெண்களுக்கான பிரத்யேக காலை சிற்றுண்டி டிப்ஸ்: நாள் முழுதும் சுறுசுறுப்பாக இருக்கலாம்

Breakfast in Summer: காலையில் காலை சிற்றுண்டியை தவறாமல் எடுத்துக்கொள்வது மிக அவசியமாகும். ஏனென்றால் நம் நாள் நன்றாக, ஆரோக்கியமாக தொடங்கினால்தான், நாள் முழுவதும் சிறப்பாக இருக்கும்.
பெரும்பாலான பெண்கள் வீடு மற்றும் அலுவலக வேலைகளில் மூழ்கி, தங்கள் உடல் நலனை கவனிக்க முடியாமல் தவிக்கின்றனர். கோடையில் இந்த அலட்சியம் அதிகமாக இருப்பதால் நீர்ச்சத்து குறைபாடு, குமட்டல், வாந்தி, வயிற்றுப்போக்கு, தலைவலி, தலைசுற்றல், பலவீனம் போன்ற பிரச்சனைகளை சந்திக்க வேண்டியுள்ளது.
தங்கள் தினசரி வேலைகளில் எவ்வளவு மூழ்கி இருந்தாலும், பிறரைக் கவனித்துக்கொள்வது போல் பெண்கள் தங்கள் சொந்த உடலைப் பராமரிப்பதும் முக்கியமாகும். இதற்கு, காலையில் காலை உணவை தவறாமல் எடுத்துக்கொள்வது மிக அவசியமாகும். ஏனென்றால் நம் நாள் நன்றாக, ஆரோக்கியமாக தொடங்கினால்தான், நாள் முழுவதும் சிறப்பாக இருக்கும். கோடையில் நீங்கள் ஃபிட்டாக இருக்க உதவும் சில ஆரோக்கியமான, எளிய காலை சிற்றுண்டிகள் / பழங்கள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
பப்பாளி மற்றும் வெள்ளரிக்காய்:
பெண்கள் தங்கள் கோடை காலை உணவில் பப்பாளி மற்றும் வெள்ளரிக்காயை கண்டிப்பாக சேர்த்துக்கொள்ள வேண்டும். இந்த இரண்டும் உடலை ஆரோக்கியமாக வைத்திருப்பதோடு நாள் முழுதும் உங்களை சுறுசுறுப்பாகவும் வைத்திருக்க உதவும்.
வெள்ளரிக்காய் உடலுக்கு குளிர்ச்சியை தருகிறது. பப்பாளி மற்றும் வெள்ளரிக்காயின் சிறப்புத் தன்மை என்னவென்றால், இரண்டிலும் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இரண்டிலும் அதிக அளவு நீர்ச்சத்து உள்ளது. இவற்றை உட்கொள்வதால், உடலின் பிஎச் அளவும் சரியாகும். இதனுடன், உங்கள் வயிறு தொடர்பான பிரச்சனைகளான வயிறு உப்பசம், வாயுத்தொல்லை போன்றவற்றை எதிர்த்துப் போராடவும் இவை உதவுகின்றன. எனவே, கோடையில் இவற்றை கண்டிப்பாக காலை வேளைகளில் எடுத்துக்கொள்ளுங்கள்.
மேலும் படிக்க | Health Alert! கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரிக்க காரணமாகும் ‘5’ பழக்கங்கள்
வரகு கஞ்சி:
கோடைகாலத்தில் வரகு கஞ்சி மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதை செய்ய, வரகு, சிறிதளவு உளுந்து, வெந்தயம், பாசிப்பருப்பு, பூண்டு ஆகியவற்றை முதலில் வதக்கிக்கொள்ளவும். பின்னர் தண்ணீர் விட்டு வேகவைக்கவும். இதை உப்பு சேர்த்து, பால் அல்லது மோர் சேர்த்து குடிக்கலாம்.
இதில் அதிகப்படியான ஊட்டத்து உள்ளது. இது நாள் முழுவதும் உடலுக்கு தேவையான தெம்பையும் சக்தியையும் அளிக்கின்றது. இதன் நார்ச்சத்து மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளை குறைக்கவும் உதவுகிறது.
தயிர் மற்றும் அவல்:
கோடை காலத்தில் தயிரில் ஊறவைத்த அவல் ஒரு மிகச்சிறந்த காலை சிற்றுண்டியாக இருக்கும். அதில் குறைந்த அளவு அவலையும் அதிக அளவு தயிரையும் சேர்த்துக்கொள்ள வேண்டும். இந்த கலவையில் அதிகமான நார்ச்சத்து உள்ளது. இது உங்கள் வயிற்றை ஆரோக்கியமாக வைத்திருக்கும் உதவும். செரிமானத்தையும் மேம்படுத்தும். அவலை இப்படி சாப்பிடுவது வாயுத்தொல்லைக்கும் நல்ல தீர்வாக அமையும். வயிறு தோடர்பான எந்த வித அசவுகரியமும் ஏற்படாது.
பயத்தம்பருப்பு கிச்சடி:
பயத்தம்பருப்பு கிச்சடி பெண்களின் உடல் பலவீனத்தை நீக்குகிறது. இதனுடன் புதினா சட்னி சேர்த்து சாப்பிடுவதால் பெண்களுக்கு ஏற்படும் சோர்வு, பலவீனம் ஆகிய பிரச்சனைகளும் சரியாகிறது. மேலும் இது வயிற்றுக்கும் ஆரோக்கியமானது.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான நம்பிக்கைகளை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ஜீ மீடியா இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | முட்டை சாப்பிட்டால் நீரிழிவு வருமா?- மருத்துவர் விளக்கம்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR