Body Heat Reduce Tips: சாதாரணமாக மனிதனின் உடல் வெப்பநிலையானது 98.6ºF (37ºC) இருப்பதாக மருத்துவ நிபுணர்கள் கருதுகின்றனர். ஆனால் அது அந்தநாளின் வெப்பத்தை பொறுத்து 0.9ºF (0.5ºC) வரை மாறுபடும். அதாவது நபருக்கு உடல் வெப்பநிலையில் சிறிது வேறுபாடு இருக்கும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஒரு நபரின் உடல் வெப்பநிலை அதிகரிக்க பல காரணங்கள் உள்ளன. அதில் குறிப்பாக நோய்கள், சாப்பிடும் மருந்துகள் மற்றும் உணவுகள், தீவிர உடல் செயல்பாடு, நேரடி சூரிய ஒளியில் இருப்பது, இறுக்கமான ஆடைகளை அணிவது. எண்ணெய் அல்லது வறுத்த உணவை உண்ணுதல். காஃபின் அல்லது ஆல்கஹால் கொண்ட பானங்களை உட்கொள்வது போன்றவை உடல் வெப்பநிலை அதிகரிக்க முக்கிய காரணமாக இருக்கிறது.


அதுவும் கோடைக்காலத்தில் சொல்லவே வேண்டாம், வெப்ப அலை காரணமாக நமது உடல் அதிக சூடாகவே காணப்படும். இதனால் உடலில் எரிச்சல் ஏற்படுவதோடு, ஆற்றலை இழந்து காணப்படும். கோடைக்காலத்தில் உடல் சூட்டை எவ்வாறு குறைப்பது என்பது பற்றி விரிவாகப் பார்ப்போம்.


மேலும் படிக்க - கொளுத்தும் வெயிலில் ஹீட் ஸ்ட்ரோக் வராமல் பாதுகாக்க இதையெல்லாம் சாப்பிடுங்க


இயற்கையான முறையில் உடல் சூட்டைக் குறைப்பது எப்படி?


உடல் வெப்பத்தை குறைக்கும் மோர்


உடலில் இருந்து வெப்பத்தை குறைப்பதற்கான பயனுள்ள இயற்கை சிகிச்சைகளில் ஒன்று மோர் என்று பல ஆய்வுகள் சொல்கிறது. குறிப்பாக அதிகப்படியான வெயில் காரணமாக வெளியேறும் வியர்வையால் உடலின் அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் தாதுக்களின் இழப்பை இது ஈடுசெய்கிறது. எனவே, கோடை நாள் முழுவதும் உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க காலை உணவுடன் மோர் அருந்துவது நல்லது.


எலுமிச்சை சாறு


எலுமிச்சை பழத்தில் அதிக வைட்டமின் சி இருப்பதால், உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க உதவுகிறது. வெப்பத்தினால் ஏற்படும் நோய்களைக் கட்டுப்படுத்துகிறது. கோடை காலத்தில் ஒரு நபரை புத்துணர்ச்சியுடனும் ஆற்றலுடனும் வைத்திருப்பதோடு, உடலுக்கு நீரேற்றம் மற்றும் ஆக்ஸிஜனேற்றத்தையும் வழங்குகிறது.


இளநீர் அருந்த வேண்டும்


இளநீர் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடித்து வந்தால், அதில் உள்ள வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள், உடல் வெப்பத்தைக் குறைத்து, உடல் வறட்சி ஏற்படுவதையும் தடுக்கும். இளநீர்  உட்கொள்வது நல்லது. கூடுதலாக, இளநீர் பாதுகாப்பானது மற்றும் எளிதில் ஜீரணமாகும், இது உடலை குளிர்விப்பதற்கான உடனடி தீர்வாக அமைகிறது.


நீர்ச்சத்து உணவுகள் உட்கொள்ள வேண்டும்


ஸ்ட்ராபெர்ரி, தர்பூசணி மற்றும் பாகற்காய் ஆகியவை நீர்ச்சத்து நிறைந்த உணவுகள், நீர்ச்சத்து நிறைந்த உணவுகள் உடல் சூட்டைக் குறைக்க ஏற்றது. செலரி, வெள்ளரி மற்றும் காலிஃபிளவர் ஆகியவை உடல் வெப்பநிலையை சீராக்க வைக்க உதவும்.


மேலும் படிக்க - இந்த கோடையில் உங்கள் சருமத்தை பாதிக்கும் இந்த விஷயங்களை செய்யாதீர்கள்!


சந்தனம் பூசிக்கொள்வது நல்லது


சந்தனம் பூசிக்கொள்வது உடலில் குளிர்ச்சியை ஏற்படுத்டும். இது உடல் வெப்பத்தைத் தணிக்க சிறந்த தீர்வாக அமைகிறது. குளிப்பதற்கு முன் சந்தனப் பொடியை நெற்றி, மார்பு மற்றும் அக்குள்களில் தடவலாம்.


எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும்


தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிப்பது, உடற் சூட்டை குறைக்க மிகச்சிறந்த வழியாகும். இரவு படுக்கச் செல்லும் போது, உள்ளங்காலில் சிறிது நல்லெண்ணெய் தேய்த்துவிட்டு படுப்பது உடல் சூட்டை தணிக்கும்.


இருக்கமான ஆடைகளை அணியக் கூடாது


வெயிலில் இருக்கும் போது, அகலமான விளிம்பு கொண்ட தொப்பி, சன்கிளாஸ் அணிவது நல்லது,. வெளியில் செல்லும் போது குடை அல்லது பாராசோலை எடுத்துக்கொண்டு செல்வது நல்லது. இயற்கையான துணிகளான லினன், பருத்தி அல்லது பட்டு போன்ற தளர்வான ஆடைகளை அணிய வேண்டும்.


மருத்துவரிடம் பேசுங்கள்


தைராய்டு இருக்கும் நபருக்கு உடலில் அதிக வெப்பத்தை ஏற்படுத்தும். இதன் காரணமாக அதிக வியர்வை, இதயத் துடிப்பு அதிகரிப்பு, மஞ்சள் காமாலை மற்றும் தலைச்சுற்றல் போன்ற பிற அறிகுறிகளும் ஏற்படலாம். எனவே மருத்துவரை அணுகுவது நல்லது. வீட்டு வைத்தியம் மூலமும் உங்கள் உடல் வெப்பநிலை குறையவில்லை என்றால், மருத்துவ ஆலோசனை பெற வேண்டியது அவசியம். 


மேலும் படிக்க - உடல் சூட்டை தணிக்க சில எளிய வழிகள்! இதை படிக்கவும்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ