நமது உடலில் மிக முக்கியமான உறுப்புகளில் ஒன்று நுரையீரல். நுரையீரல் நம் வாழ்நாள் முழுவதும் இடைவிடாமல் வேலை செய்து கொண்டே இருக்கிறது. நுரையீரலின் வேலை உயிரை காத்து தேவையான விலைமதிப்பற்ற ஆக்ஸிஜனை உங்கள் உடலுக்கு வழங்குவதாகும். தூசி, புகை, மாசு மற்றும் புகைபழக்கம் ஆகியவற்றினால், நுரையீரல் ஆரோக்கியம் மோசமடைய வாய்ப்பு உள்ளது. எனவே அவற்றின் ஆரோக்கியத்தை காப்பது அவசியம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

எனவே நம்முடைய நுரையீரலை உடற்பயிற்சி மற்றும் உணவு முறைகள் மூலம் நாம் வலிமையாக வைத்திருக்க வேண்டும். அந்த வகையில் ஆயுர்வேத மூலிகைகள் சில நம் சுவாச ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் மிக முக்கியமான பங்கு வகிக்கிறது. அதைப்பற்றி அறிந்து கொள்ளலாம்.


துளசி


இந்தியாவை பொருத்த வரை துளசி எல்லார் வீட்டிலும் காணப்படும் ஒரு மூலிகை. இது அற்புதமானது. துளசி இலையில் ஆன்டி ஆக்ஸிடன்கள், துத்த நாகம், வைட்டமின் சி, போன்ற நிறைய சத்துக்கள் காணப்படுகிறது. துளசியில் பாக்டீரியா எதிர்ப்பு, வைரஸ் எதிர்ப்பு மற்றும் நிறைய அழற்சி எதிர்ப்பு பண்புகள் காணப் படுகிறது. இது சுவாச மண்டலத்தை வலுப்படுத்தவும், மூச்சுக்குழாய் அழற்சி, ஆஸ்துமா, காய்ச்சல், இருமல் மற்றும் சளித் தொல்லைகளை போக்கவும் உதவுகிறது. துளசி இலைச்சாற்றை தேனுடன் கலந்து சாப்பிட்டு வரலாம். இதனால் நுரையீரலில் உள்ள நச்சுகள் வெளியேற்றப்படுகிறது. சுவாச பிரச்சனைகளை தீர்க்கிறது.


அதிமதுரம் வேர்


அதிமதுரம் வேர் தொண்டை ஆஸ்துமா, மூச்சுக்குழாய் அழற்சி, நிமோனியா மற்றும் பல நாள்பட்ட நோய்களிலிருந்து நிவாரணம் பெற உதவுகிறது. சுருங்கியிருக்கும் மூச்சுக்குழாய் தசைகளை விரிவடைய செய்யும் செய்கை இதில் உள்ள வேதிப்பொருளுக்கு உண்டு. இதில் உள்ள கிளைசிரைசின், டானின்கள் ஆகியவை நுரையீரல் திறனை அதிகரிக்க உதவுவதோடு, நோய்த்தொற்றுகளை எதிர்த்துப் போராடவும் உதவுகிறது.


மேலும் படிக்க | குழந்தையின் மூளை கம்ப்யூட்டரை போல் இயங்க வைக்கும் ‘சூப்பர்’ உணவுகள்!


அமிழ்தவள்ளி


அமிழ்தவள்ளி அல்லது சீந்தில் என அழைக்கப்படும் மூலிகையான கிலோய் (Giloy) ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும் மூலிகை. இது பல நோய்களிலிருந்து பாதுகாக்க உதவுகிறது. அதுமட்டுமின்றி, நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தவும் பெரிதும் உதவுகிறது. இதில் உள்ள நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகள் நுரையீரலை வைரஸ் நோய்களில் இருந்து பாதுகாக்க உதவுகிறது. எனவே, உங்கள் நுரையீரலை ஆரோக்கியமாக வைத்திருக்க விரும்பினால், நீங்கள் தினமும் கிலோயை உட்கொள்ளலாம். இதனை கஷாயம் செய்து பயன்படுத்தலாம். தற்போது கிலோய் ஜூஸ் வடிவில் மருந்து கடைகளிலும் கிடைக்கிறது. 


சுக்கு


உலர் இஞ்சி அல்லது சுக்கு ஆயுர்வேத மருந்துகளில் பயன்படுத்தப்படுகிறது. இது தொண்டை தொற்றுக்கு பயனளிக்கும். நுரையீரலில் உள்ள நச்சுக்களை நீக்கும் திறன் கொண்டது. இஞ்சி வேரில் அழற்சி எதிர்ப்பு ஜிஞ்சரோல்ஸ் மற்றும் ஷோகல்ஸ் போன்ற பண்புகள் காணப்படுகிறது. இது சளி, இருமல் போன்றவற்றில் இருந்து நிவாரணம் பெற உதவுகிறது.


மஞ்சள்


சமையலறையில் இருக்கும் மஞ்சள் பல நோய்களை குணப்படுத்த உதவுகிறது. ஏனெனில் இதில் பல நோய்களை குணப்படுத்தும் ஆன்டி - செப்டிக் பண்புகள் உள்ளன. மறுபுறம், மஞ்சள் ஆன்டி-வைரல் ஆகும். இது நமது நுரையீரலை தொற்று நோயிலிருந்து பாதுகாக்கிறது. எனவே, உங்கள் நுரையீரல் ஆரோக்கியமாக இருக்க விரும்பினால், மஞ்சள் பால் தினமும் குடிக்கத் தொடங்குங்கள். அதை தொடர்ந்து உட்கொள்வதன் மூலம் நுரையீரல் வலுவடைகிறது.


(பொறுப்புத் துறப்பு: எங்கள் கட்டுரை தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே. மேலும் விவரங்களுக்கு எப்போதும் நிபுணர் அல்லது உங்கள் மருத்துவரை அணுகவும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)


மேலும் படிக்க | நொறுக்குத் தீனி சாப்பிடுவதால் சர்க்கரை நோய் வருமா? உண்மை என்ன? 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ