சிலர் அடிக்கடி தலை வலியினால் அவதிப்படுவார்கள். சிலருக்கு காலையில் எழுந்திருக்கும் போதே தலைவலி ஏற்படும். இந்த நிலையில், அன்றைய நாளையே அது பாதித்து விடக் கூடும். ஆனால், சிலர் இதனை பெரிய பிரச்சனையாக எடுத்துக் கொள்ளாமல், அலட்சியமாக இருக்கின்றனர். இதற்கு பல காரணங்கள் இருக்கலாம். அடிக்கடி தலைவலி ஏற்படுவதற்கான காரணம் என்ன என்பதை அறிந்து கொண்டால், அதற்கு எளிதில் தீர்வு காணலாம். தலைவலி வந்த உடனே மாத்திரை போடும் பழக்கம் பலரிடம் உள்ளது. ஆனால், அதிக அளவில் வலி நிவாரணி எடுத்துக் கொள்வது, உடலுக்கு கேடானது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அடிக்கடி தலைவலி வருவதற்கான முக்கிய காரணங்கள்:


இரத்த சோகை:


உங்கள் உடலில் இரத்தத்தில் சிவப்பணு குறைவாக இருந்தால், அதாவது ஹூமோகுளோபின் குறைவாக இருந்தால், காலையில் எழுந்தவுடன் தலையில் வலியை உணரலாம். அதே நேரத்தில், உடலில் ஆக்ஸிஜன் குறைவாக இருந்தாலும் தலைவலியுடன் சோர்வு மற்றும் தலைச்சுற்றல் ஏற்படலாம். எனவே அடிக்கடி காலை எழுந்த உடம் தலைவலி ஏற்பட்டால், ரத்த பிரிசோதனை செய்து கொள்வது நல்லது.


ரத்த அழுத்தம்


தலைப்பகுதியில் இருக்கும் ரத்த நாளங்களில், ரத்த ஓட்டம் சீரற்று இருப்பதன் காரணமாகவே, தலைவலி ஏற்படுகிறது. ரத்த அழுத்தம் அதிகரிக்கும்போது, தலைவலி அதிகமாக இருக்கும். அடிக்கடி தலைவலி ஏற்பட்டால், முதலில் ரத்த அழுத்தத்தைச் சோதிக்க வேண்டும். 


நீரிழப்பு


குறைந்த அளவு தண்ணீர் குடித்தால், காலையில் எழுந்தவுடன் தலைவலி வருவதற்கு தண்ணீர் பற்றாக்குறையும் காரணமாக இருக்கலாம். போதிய அளவு தண்ணீர் குடிக்காததால், காலையில் எழுந்தவுடன் தலைவலி வரலாம் என்று சொல்லலாம்.


மேலும் படிக்க | குறட்டை பிரச்சனையில் இருந்து விடுபட... சில எளிய வீட்டு வைத்தியங்கள்!


தூக்கமின்மை


தூக்கமின்மை காரணமாக காலையில் தலைவலியை உணரலாம். அதே சமயம், பலருக்கு மன அழுத்தம் காரணமாகவும், தலைவலி பிரச்சனை உள்ளது. இரவு ஷிப்டில் அதிகம் பணிபுரிபவர்கள் காலையில் எழுந்ததும் தலைவலியை உணரலாம்.


சர்க்கரை அளவு


உங்கள் உடலில் சர்க்கரை அளவு அசாதாரணமாக இருந்தால், காலை தலைவலி ஏற்படலாம். இது சர்க்கரை அளவு தாறுமாறாக இருப்பதற்கான அறிகுறியாகும். எனவே, தினமும் காலையில் எழுந்ததும் தலைவலி இருந்தால், உங்கள் சர்க்கரை அளவை சரிபார்க்க வேண்டும்.


தலைவலிக்கு உடனடி தீர்வு தரும் எளிய வீட்டு வைத்தியங்கள்:


1. பட்டையை சிறிது தண்ணீர் விட்டு நன்றாக அரைத்து, அதனை நெற்றியில் பற்றுப்போல தடவ வேண்டும். இதனைத் தடவினால் தலைவலி கணப்பொழுதில் மறைந்து போவதை உணரலாம்.


2. ஒரு நாற்காலியில் அமர்ந்து கொண்டு, வெந்நீர் நிரம்பிய வாளியில் கால்களை நனைக்கும் அளவுக்கு சிறிது நேரம் வைத்திருப்பது, தலைவலியில் இருந்து சிறந்த நிவாரணத்தை கொடுக்கும்


3. சில மூலிகைகள் வலி நிவாரணத்துக்கு பயன்படுகிறது. இஞ்சி தலைவலியில் நிவாரணம் அளிக்க உதவுகிறது. மேலும், சுக்கு பொடியை நீர் விட்டு குழைத்து தலையில் பற்று போட்டால் தலைவலி குணமாகிவிடும். 


4. புதினா எண்ணெயை, நெற்றி மற்றும் தலையில் நன்றாக தேய்த்து கொண்டால் தலைவலிக்கு சிறந்த வலி நிவாரணியாக இருக்கும். இந்த எண்ணெயில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் இறுக்கமான தசைகளை தளர்த்தில், தலைவலிக்கு நிவாரணம் அளிக்க உதவுகிறது.


5. மேலும், உடலில் தேவையான அளவு நீரில்லாத போது சூடேறி தலைவலி உண்டாகலாம். அதனால், தண்ணீரை குடிப்பதாலும் தலைவலியில் இருந்து நிவாரணம் பெறலாம்.


6. ஒரு டம்ளரில் வெந்நீர் எடுத்துக் கொண்டு, அதனுடன் சிறிது எலுமிச்சை பழச்சாறு சேர்த்துக் கலந்து குடித்தால் உடனடியாகத் தலைவலியின் தீவிரம் குறைவதை உணரலாம்.


7. சிறிது இஞ்சி, சீரகம், தனியா ஆகியவற்றை சிறிது தண்ணீரில் போட்டு, 5 நிமிடங்கள் கொதிக்க வைத்து, அதனை வடிகட்டி அருந்த தலைவலி இருந்து விடுபடலாம்.


 (பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்ளும் முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)


மேலும் படிக்க | முட்டையை ‘இப்படி’ சாப்பிட்டால் போதும்... ரத்த நாளங்களில் உள்ள அடைப்பு நீங்கும்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ