ஜிம்முக்கே போகாமல் ஜூஸ் மூலம் உடல் எடை, கொலஸ்ட்ராலை குறைக்கலாம்..!
Ginger Juice | உடல் எடை அதிகரிப்பு, கொலஸ்ட்ரால் அதிகரிப்பு பிரச்சனை இருப்பவர்கள் ஜிம்முக்கே போகாமல் இஞ்சி ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்
Ginger Juice Benefits Tamil | உடல் எடை அதிகரிப்பு, கொலஸ்ட்ரால் பிரச்சனை இப்போது பொதுவான ஆரோக்கிய பிரச்சனைகளில் ஒன்றாகிவிட்டது. இளம் வயதினருக்கு கூட உடல் எடை அதிகரிப்பு பிரச்சனை இருப்பதால், அதனால் பல பின்விளைவுகளையும் எதிர்கொண்டு வருகின்றனர். எடையை குறைக்க ஜிம்முக்கு செல்வது, கடுமையான டயட் கடைபிடிப்பது உள்ளிட்டவற்றில் கவனம் செலுத்துகின்றனர். அவர்களுக்கு ஒரு அற்புதமான செய்தி என்னவென்றால் இஞ்சி ஜூஸ் குடிப்பதன் மூலம் உடல் எடையை குறைக்க முடியும். கொலஸ்ட்ரால் அளவையும் கட்டுக்குள் வைத்துக் கொள்ள முடியும். அது எப்படி? என்பதை இங்கே தெரிந்து கொள்வோம்.
இஞ்சி ஜூஸ் நன்மைகள்.
இஞ்சி ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மயானது என பல ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது. செரிமான ஆரோக்கியம், எடை இழப்பு மற்றும் கொலஸ்ட்ரால் கட்டுப்பாட்டிற்கு இஞ்சி சாப்பிட்டு நிவாரணம் பெறலாம். ஆயுர்வேத மருத்துவத்தில் இஞ்சி ஒரு முக்கிய மருந்து. இஞ்சி வாத பிரச்சனைகளுக்கும், மலச்சிக்கலைக் குறைப்பதிலும் முக்கிய பங்காற்றுகிறது. வாயு மற்றும் வீக்கத்திலிருந்து நிவாரணம் அளிக்கிறது. வயிற்று வலிக்கும் இது பயனுள்ளதாக இருக்கும்.
குமட்டல் மற்றும் வாந்தி
குமட்டல் மற்றும் வாந்தியைத் தடுப்பதில் இஞ்சி பயனுள்ளதாக கருதப்படுகிறது. இது செரிமானத்தை மேம்படுத்தி, குமட்டலை ஏற்படுத்தும் சில receptors -ஐ தடுக்கிறது. கீமோதெரபியால் ஏற்படும் குமட்டலைக் குறைக்க இஞ்சி உதவும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
எடை இழப்புக்கு உதவும்
இஞ்சியில் உள்ள ஜிஞ்சரால்கள் வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து கொழுப்பை எரிக்க உதவுகிறது. இது பசியைக் கட்டுப்படுத்தவும், அதன் மூலம் அதிகப்படியான உணவைத் தவிர்க்கவும் உதவுகிறது. இது எடையைக் குறைக்க உதவும்.
கொலஸ்ட்ரால் கட்டுப்பாடு
இஞ்சி இரத்த சர்க்கரையை குறைக்க உதவுகிறது மற்றும் கொலஸ்ட்ரால் மற்றும் ட்ரைகிளிசரைடு அளவைக் குறைக்கும். நீண்ட கால பயன்பாடு நன்மை பயக்கும் HDL கொழுப்பை அதிகரிக்கலாம். வெறும் வயிற்றில் இஞ்சி சாறு குடிப்பதால், சர்க்கரை நோய் இல்லாவிட்டாலும் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தலாம். இஞ்சியில் உள்ள சேர்மங்கள், ஜிஞ்சரோல்ஸ் என்று அழைக்கப்படுகின்றன.
மேலும் படிக்க | இரவில் தூக்கம் வரவில்லையா? மாரடைப்பின் ஆரம்ப அறிகுறியாக இருக்கலாம்!
இஞ்சி சாப்பிடுபவர்கள் கவனிக்க
காலையில் இஞ்சி தண்ணீர் குடித்தால் மலச்சிக்கலைப் போக்க உதவும். வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உங்கள் காலை தேநீரில் அரைத்த இஞ்சியைச் சேர்க்கவும். ரத்தம் சார்ந்த மருந்துகளை நீங்கள் எடுத்துக் கொண்டால், இஞ்சியைத் தவிர்க்கவும். ஏனெனில், இது இரத்தப்போக்கு அபாயத்தை அதிகரிக்கலாம். தினமும் 6 கிராமுக்கு மேல் இஞ்சி சாப்பிட வேண்டாம். இதனால் அசிடிட்டி, நெஞ்செரிச்சல், வயிற்றுப்போக்கு போன்றவை ஏற்படும்.
இஞ்சி சாறு செய்வது எப்படி?
இஞ்சி சாறு மிக எளிதாக செய்யலாம். இஞ்சி ஜூஸ் தயாரிக்க, புதிய இஞ்சியை சிறிய துண்டுகளாக நறுக்கி, அதில் சிறிது தண்ணீர் சேர்க்கவும். பின்னர் மிக்சியில் போட்டு நன்கு அரைத்து வடிக்கட்டி மூலம் இஞ்சி சாறை பிரித்தெடுக்கவும். அதனுடன் தேன் எலுமிச்சை சேர்த்தால் குடிப்பதற்கு நன்றாக இருக்கும்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | இரத்த சர்க்கரை நோய் குறித்த சில கட்டுக்கதைகள்.... அவசியம் தெரிஞ்சுக்கோங்க
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ