How Many Times Should A Person Pee : ‘உலகில் இருக்கும் மிகவும் வித்தியாசமான மற்றும் கடினமான மிஷன் எது என்றால், அது மனிதனின் உடல்தான்’ என்று கேள்விபட்டிருப்போம். இது மிகச்சிறந்த உண்மை என்பதை தினம் தினம் நிகழும் மருத்துவ அதிசயங்களும் நிரூபித்து வருகின்றன. நம் உடலின் உள் பாகங்கள் மற்றும் வெளி பாகங்கள் ஆகிய இரண்டும் சரியாக இயங்க வேண்டும் என்றால், உடலில் இருந்து வெளியேற வேண்டியது வெளியேறி, நாம் உள்ளே எடுத்துக்கொள்ள வேண்டியதை எடுத்துக்கொண்டே இருக்க வேண்டும். அப்படி செய்தால்தான், உடலில் நோய் அண்டாமல் நாம் பார்த்துக்கொள்ள வேண்டும். நேரத்திற்கு தண்ணீர் குடிக்க வேண்டியது எந்த அளவிற்கு அவசியமோ அதே போல நேரத்திற்கு சிறுநீர் கழிக்க வேண்டியதும் மிகவும் அவசியம் ஆகும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சிறுநீர் உருவாவது எப்படி?


இரத்தத்தை வடிகட்டுவது சிறுநீரை ஒரு கழிவுப்பொருளாக உருவாக்குவதாக கூறப்படுகிறது. சிறுநீரகம் உருவாவதற்கு, உடல் உறுப்புகளான சிறுநீரகங்கள், சிறுநீர்க்குழாய்கள், சிறுநீர்ப்பை மற்றும் சிறுநீர்க்குழாய் ஆகியவை உதவுகின்றன. நாம் சாப்பிடும் உணவுகளில் இருக்கும் புரதங்கள் உடலின் ஆற்றலாக மாறுகின்றன. இது தவிர அந்த உணவில் இருக்கும் பிற சத்துகள் கழிவுகளாக மாறி குடலிலும் ரத்தத்திலும் தங்கும். இதில் ஒரு பங்குதான் கழிவாக உருவாகிறாது.  உடலில் இருக்கும் சிறுநீரகம் மற்றும் சிறுநீரக அமைப்பு ஆகியவை திரவ கழிவாக சிறுநீரை மாற்றுகிராது. ஒரு நாளைக்கு எத்தனை முறை சிறுநீர் கழிக்க வேண்டும்?


ஒரு மனிதன், 24 மணி நேரத்தில்-அதாவது ஒரு நாளில் குறைந்தது 6 முதல் 7 முறை சிறுநீர் கழிப்பது இயல்பு என்று மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன. நம் உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களால் இந்த கவுண்ட் மாறலாம். உதாரணத்திற்கு, கர்ப்பமாக இருக்கும் பெண்கள், பிறரை விட இயல்புக்கு அதிகமான முறை சிறுநீர் கழிக்கலாம். இதே நிலை, அவர்களுக்கு குழந்தை பேறு நிகழ்ந்த பிறகு 8 வாரங்கள் வரை தொடரலாம். 


மேலும் படிக்க | சிறுநீர் கழித்த பின் அதிக துர்நாற்றம் வீசுகிறதா? அலட்சியம் வேண்டாம்


அதிகமாக சிறுநீர் கழிப்பதாலும்/கழிக்காமல் இருப்பதாலும் ஏற்படும் பிரச்சனைகள்:


ஒருவருக்கு அதிகமான முறை சிறுநீர் கழிக்கும் பழக்கம் அல்லது இயல்பை விட குறைவாக சிறுநீர் கழிக்கும் பழக்கம் இருந்தால், அது அவர்களின் உடலில் இருக்கும் வேறு ஏதேனும் பிரச்சனையை காண்பிக்கும் வகையில் இருப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.


>முதுகு வலி
>சிறுநீரில் ரத்தம் கலப்பது
>சிறுநீர் கழிக்கையில் சிரமப்படுவது
>காய்ச்சல்
>மலம் கழிக்கையில் சிறுநீர் வெளியேறுவது
>சிறுநீர் கழிக்கையில் வலிப்பது
>சிறுநீரில் துர்நாற்றம் வீசுவது


சரியாக சிறுநீர் கழிக்கவில்லை என்றால் என்ன பிரச்சனை ஏற்படும்?


சரியாக, சரியான நேரத்திற்கு சிறுநீர் கழிக்கவிலை என்றால், அது குடல் மற்றும் சிறுநீரக பை பாதிப்பை ஏற்படுத்தும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்ரனர். நாம், அவ்வப்போது சிறுநீர் கழிவை உடலில் இருந்து வெளியேற்றவில்லை என்றால் அது UTI எனப்படும் Urinary tract infection (சிறுநீர்ப்பாதை தொற்று) ஏற்படுத்தும்.ஒருவர், அதிகபட்சம், 10 மணி நேரத்திற்கு மேல் சிறுநீரை அடக்கி வைக்க கூடாது என கூறுகின்றனர் மருத்துவர்கள். சிறுநீரை வெளியேற்றவில்லை என்றால், சிறுநீர்ப்பையில் இருக்கும் தசைகள் இறுகி, நம் உடலை ரிலாக்ஸ் ஆக விடாமல் செய்து விடுமாம். இது, ஒரு கட்டத்தில் நம் சிறுநீர்ப்பையை வெடிக்க கூட செய்து விடுமாம். 


(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


சிறுநீரக பிரச்சனை இருந்தால் சிறுநீரில் தெரியும் அறிகுறிகள் இவைதான், ஜாக்கிரதை!!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ