தொப்பையை உடனடியாக குறைக்கணுமா? இந்த எளிய பயிற்சிகளை தினமும் செய்யவும்!
Exercises to Reduce Belly Fat: ஒவ்வொருவரும் நமது உடலை ஆரோக்கியமாகவும், பிட்டாகவும் வைத்துள்ள விரும்புவோம். அதற்கு தினசரி சில உடற்பயிற்சிகளை தவறாமல் செய்ய வேண்டும்.
இன்றைய கால கட்டத்தில், வாழ்க்கை முறை மற்றும் உணவு முறை காரணமாக உடல் பருமன் பிரச்சனை பொதுவான ஒரு பிரச்சனையாகி விட்டது. இருப்பினும், உடலின் பிட்னஸ் குறித்து அதிகம் கவலை படும், கவனம் செலுத்தும் நபர்கள் நிறைய பேர் இருக்கின்றனர். ஒவ்வொரு வரும் ஆரோக்கியமாகவும் பிட் ஆகவும் இருக்க நிறைய முயற்சிகளை செய்கின்றனர். அதனால் பலர் உணவு முறை மற்றும் வாழ்க்கை முறையில் நிறைய மாற்றங்களை செய்கின்றனர். உடலில் தேவையில்லாமல் சேரும் கொழுப்பு உங்கள் அழகை கெடுக்கலாம். மேலும், உங்கள் தோற்றத்தை மாற்ற கூடும். அதிலும் தொப்பை உடலில் அழகை கெடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. அதிலிருந்து விடுபட, வீட்டிலேயே தினசரி சில எளிய பயிற்சிகளைச் செய்ய வேண்டும். தொப்பையை குறைக்க என்னென்ன பயிற்சிகள் செய்ய வேண்டும் என்பதை தெரிந்து கொள்வோம்.
மேலும் படிக்க | ஈறுகளில் பயங்கர வலியா? ‘இந்த’ வீட்டு வைத்தியங்களை வைத்து சரி செய்து கொள்ளலாம்..
தொப்பையை குறைக்க தினசரி உடற்பயிற்சிகள்
பர்பி உடற்பயிற்சி
தொப்பையை குறைக்க பர்ஃபி உடற்பயிற்சி (Burpee Exercise) தினசரி செய்யலாம். பர்ஃபி உடற்பயிற்சி வயிற்றில் உள்ள தொப்பையை கரைப்பதோடு, உங்கள் மார்பு, தோள்கள் மற்றூம் இடுப்பை மிகவும் வலிமையாக்குகிறது. மேலும் உடல் எடையை குறைக்க உதவுகிறது. இந்தப் பயிற்சியைச் செய்ய, நேராக நின்று, பிறகு, உங்கள் முழங்கால்களை வளைத்து, உங்கள் இரு கைகளையும் தரையில் வைக்கவும். உள்ளங்கையில் முழு எடையை போட்டு, பாதங்களை பின்னோக்கி உதைத்து புஷ்அப் நிலைக்கு வரவும். அதன் பிறகு பின் பக்கத்திலிருந்து கால்களை நகர்த்தவும். இதற்குப் பிறகு, கால்களை மீண்டும் கைகளுக்கு அருகில் கொண்டு வாருங்கள். முக்கியமாக இடுப்பு வளைந்து இருக்கக்கூடாது என்பதை நினைவில் கொள்ளுங்கள். இதற்குப் பிறகு எழுந்து நின்று கொள்ளவும். இதே போல தினசரி 10 முறை செய்யவும்.
போசு பந்து (bosu ball) உடற்பயிற்சி
தினமும் போசு பந்து உடற்பயிற்சி செய்வதன் மூலம், தொப்பையை எளிதாக குறைக்கலாம். இதைச் செய்ய, உங்களுக்கு போசு பந்து தேவைப்படும். போசு பந்தை தரையில் வைக்கவும், அதன் பிறகு உங்கள் கால்களை நேராக நீட்டி குனிந்து, போசு பந்தின் பக்கங்களில் உங்கள் கைகளை வைக்கவும். இந்த நிலையில், உங்கள் கால்களின் கால்விரல்கள் தரையில் இருக்க வேண்டும். இப்படி செய்யும் போது, உங்கள் முழு உடலும் போசு பந்தின் மேலே இருக்கும், அதன் பிறகு நீங்கள் அதனை பிடித்துக் கொண்டு புஷ்அப்களை செய்தால், தொப்பை எளிதாக கரைக்கலாம்.
மவுண்டன் கிளைம்பர் உடற்பயிற்சி
மவுண்டன் கிளைம்பர் உடற்பயிற்சி மார்பு தசைகளை வலுப்படுத்துகிறது. இது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது. மேலும், இது தொப்பை கொழுப்பை விரைவாக குறைக்க உதவுகிறது. மவுண்டன் கிளைம்பர் உடற்பயிற்சி செய்ய, புஷ்அப் நிலைக்குச் சென்று, வயிற்று தசைகளை இறுக்கி, இடுப்பை நேராக வைக்கவும். இதன் பின்பு, வலது முழங்காலை முடிந்தவரை மார்புக்கு அருகில் கொண்டு வாருங்கள். பின்பு, வலது முழங்காலை பின்னால் எடுத்துச்சென்று, இடது முழங்காலை மார்பை நோக்கி கொண்டு வரவும். இதேபோல், வேகமாக சைக்கிள் ஓட்டுவது போல் கால்களை அசைக்க முயற்சி செய்யுங்கள். தினசரி இப்படி செய்வதால் எளிதாக தொப்பை குறையும்.
பொதுவாகவே உடற்பயிற்சிகள் நம்மை ஆரோக்கியமாக வைத்திருப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. அதோடு தொடர்ந்து யோகா செய்வதால் மன அமைதியும், தன்னம்பிக்கையும் கிடைக்கும். யோகா உடலை வலுவாகவும், பிட்டாகவும் மாற்ற உதவுகிறது. அந்த வகையில், தொப்பையை குறைக்க மேலே கூறிய எளிய ஆசனங்கள் நிச்சயம் உதவுகிறது. எனினும் இவற்றை செய்யும் முன்பு, முதுகு வலி இருந்தால் மருத்துவ ஆலோசனை பெறாமல் இதனை வீட்டில் ஒருபோதும் செய்யாதீர்கள். அறுவை சிகிச்சை, குறிப்பாக வயிற்று அறுவை சிகிச்சை செய்தாலும் இந்த பயிற்சிகளை செய்யக் கூடாது. கர்ப்பிணிகளும் இந்த பயிற்சிகளை செய்யக்கூடாது.
மேலும் படிக்க | கொலஸ்ட்ரால் அதிகமானால்... இந்த அறிகுறிகள் தோன்றும், அலட்சியப்படுத்தாதீர்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ