Blood Sugar Symptoms: உடலின் இரத்தத்தில் அதிக சர்க்கரை இருப்பதால் ஹைப்பர் கிளைசீமியா நிலை ஏற்படுகிறது. உங்கள் உடலால் இன்சுலினை சரியாக உறிஞ்ச முடியாவிட்டால் அல்லது உங்கள் உடலில் போதுமான இன்சுலின் இல்லாவிட்டால் இந்த நிலை ஏற்படுகிறது. நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த நீங்கள் இரத்த சர்க்கரை அளவை முடிந்தவரை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க வேண்டியது மிகவும் அவசியம்.
ஹைப்பர் கிளைசீமியா இருக்கிறதா? எப்படி தெரிந்துக்கொள்வது
நீரிழிவு நோயாளிகள் எவ்வளவு தான் சர்க்கரை அளவை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்தாலும் சில சமயங்களில் நீரிழிவு நோயாளிகளுக்கு ஹைப்பர் கிளைசீமியா நிலை ஏற்பட்டுவிடும். சாப்பிடாமல் இருக்கும்போது உங்கள் உடலின் இரத்த சர்க்கரை 125 mg/dL (ஒரு டெசிலிட்டருக்கு மில்லிகிராம்கள்) அதிகமாக இருந்தால், உங்களுக்கு ஹைப்பர் கிளைசீமியா உள்ளது என்று அர்த்தம்.
ஹைப்பர் கிளைசீமியாவின் அறிகுறிகள் இதுதான்
-- அதிக தாகம் மற்றும் உலர்ந்த வாய்.
-- அடிக்கடி சிறுநீர் கழித்தல்.
-- உடல் சோர்வு.
-- மங்கலான பார்வை.
-- திடீர் எடை இழப்பு.
-- சிறுநீர்ப்பை நோய்த்தொற்றுகள் மற்றும் தோல் நோய்த்தொற்றுகள்.
உயர் இரத்த சர்க்கரைக்கான காரணங்கள் என்ன?-- மன அழுத்தம் இருக்கும்
-- சளி, இருமல் போன்ற வேறு ஏதேனும் நோய்
-- உணவுக்கு இடையில் அதிகமாக ஸ்நாக்ஸ் சாப்பிடுவது
-- உடற்பயிற்சி செய்யாமல் அல்லது உடல் செயல்பாடு இல்லாமல் இருப்பது.
-- நீரிழிவு மருந்தின் அளவை தவறாக எடுத்துக்கொள்வது
--நீரிழிவு மருத்தை அடிக்கடி எடுத்துக்கொள்வது
--மற்ற மருந்துகளுடன் கலந்த ஸ்டீராய்டு மருந்துகளை அதிகம் எடுத்துக் கொள்வது.
மேலும் படிக்க - ஓட்டப்பயிற்சி Vs நடைப்பயிற்சி: உடல் எடையை சீக்கிரம் குறைக்க உதவுவது எது?
சர்க்கரையின் அளவை பரிசோதிக்க வேண்டும்
சர்க்கரையின் அளவை பரிசோதிக்கும் உபகரணத்தை வைத்து அடிக்கடி நீங்கள் உங்கள் உடலிலுள்ள சர்க்கரையின் அளவை பரிசோதித்து கொள்ள வேண்டும். இரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்கும் கேக்குகள் மற்றும் சர்க்கரை பானங்கள் போன்றவற்றை நீங்கள் தவிர்க்க வேண்டும்.
தினமும் உடற்பயிற்சி, நடைபயிற்சி மேற்கொள்ளுங்கள்
டீஹைட்ரேட் ஆக இருப்பதாக நீங்கள் உணர்ந்தால், சர்க்கரை அதிகம் இல்லாத பானங்களை நீங்கள் அருந்தலாம். தினம் உடற்பயிற்சி செய்வதை வழக்கமாக கொண்டிருக்க வேண்டும். நடைபயிற்சி போன்ற எளிய பயிற்சிகள் செய்யலாம் அல்லது நீண்ட நேரம் உட்கார்ந்து இருக்காமல் ஏதேனும் ஒரு உடல் செயல்பாட்டில் ஈடுபட வேண்டும். இப்படி செய்வது ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைவதோடு மட்டுமல்லாமல் உடல் எடையையும் குறைக்க உதவுகிறது.
புகைபிடிப்பது, மது அருந்துவதை கண்டிப்பாக தவிர்க்கவும்
இன்சுலின் மருந்துகள் பயன்படுத்துபவராக இருந்தால் சரியான அளவில் பயன்படுத்த வேண்டும் என மருத்துவ நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர். புகைபிடிப்பது மற்றும் மது அருந்துவது போன்ற தீய பழக்கங்களை கட்டுப்படுத்த வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
மேலும் படிக்க - அசிங்கமான தொப்பை கொழுப்பை அசால்டாய் குறைக்க மஞ்சள் ஒன்று போதும்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ