Weight Loss Tips: எடை இழப்பு என்பது இந்நாட்களில் பலருக்கு வாழ்க்கையின் இலட்சியமாகவே உள்ளது. ஆனால் உடல் எடையை குறைப்பது அத்தனை எளிதான காரியமல்ல. உடலில் சேரும் கூடுதலான கலோரிகளை எரிப்பது சுலபம் அல்ல. ஒரு சீரான உணவு முறை மற்றும் வழக்கமான உடற்பயிற்சி ஆகியவை எடை இழப்பதில் இரண்டு முக்கிய அம்சங்கள் ஆகும். ஆகையால் நாம் உட்கொள்ளும் உணவுகளில் மிகவும் கவனமாக இருப்பது மிக அவசியம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உடல் எடையை இழக்க உதவும் மசாலாக்கள் (Masalas for Weight Loss)


நமது இந்திய சமையலறையில் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஏராளமான பொருட்கள் உள்ளன. அவற்றில் சில கொழுப்பை எரிக்க உதவும். உடல் எடையை குறைக்க உதவும் சில பொருட்களை அவற்றின் திறனை உணராமலேயே நாம் பயன்படுத்துகிறோம். நமது தினசரி உணவில் சரியான முறையில் பயன்படுத்தினால், இந்திய மசாலாப் பொருட்கள் (Spices) எடை இழப்புக்கு சாதகமாகப் பங்களிக்கும். இருப்பினும், கொழுப்பை எரிக்க மசாலாப் பொருட்களை மட்டுமே நம்பியிருப்பது போதாது. அவை வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தி, செரிமானத்திற்கு உதவி ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பூர்த்தி செய்ய உதவும். தொப்பை கொழுப்பை (Belly Fat) கரைத்து உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் சில குறிப்பிட்ட இந்திய மசாலாக்களை உணவில் சேர்த்தால் நல்ல பலன் கிடைக்கும். 


தொப்பை கொழுப்பை எரிக்க உதவும் இந்திய மசாலாப் பொருட்கள்


1. மஞ்சள்


இயற்கையாகவே வெப்பம் கொடுக்கும் மசாலாவான மஞ்சள் (Turmeric) உடலின் வெப்பநிலையை உயர்த்தும். இது வளர்சிதை மாற்றத்தை துரிதப்படுத்துகிறது. இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தி, இன்சுலின் எதிர்ப்பைத் தவிர்த்து, எடையைக் குறைக்கவும் (Weight Loss) இது உதவுகிறது. இது உடலில் கொழுப்பு அதிகரிக்காமல் தடுக்கிறது. பெரும்பாலான இந்திய சமையல்களில் மஞ்சள் பயன்படுத்தப்படுகிறது. எடை குறைப்பு செயல்முறையை விரைவுபடுத்த, தூங்கும் முன் இதை பாலில் சேர்த்து அல்லது நீரில் கலந்து குடிக்கலாம். 


மேலும் படிக்க | யூரிக் அமில பிரச்சனை இருந்தா மட்டுமில்ல, இந்த சிக்கல் இருந்தாலும் பிஸ்தா வேண்டாம் ப்ளீஸ்!


2. இலவங்கப்பட்டை


இலவங்கப்பட்டையில் (Cinnamon) பல அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆண்டி-ஆக்சிடெண்ட்ட் பண்புகள் உள்ளன. இலவங்கப்பட்டையின் மிகவும் நன்கு அறியப்பட்ட நன்மை எடை இழப்புக்கு உதவும் அதன் திறன் ஆகும். இலவங்கப்பட்டை இயற்கையாகவே பசியை அடக்கும் குணங்களைக் கொண்டுள்ளது. இது உங்கள் வளர்சிதை மாற்றத்தையும் துரிதப்படுத்துகிறது.


3. பூண்டு


இது எடை ஏறாமல் இருக்கவும் கலோரிகளை எரிக்கவும் உதவுகிறது. வளர்சிதை மாற்ற விகிதத்தின் ஏற்றம் உடல் எடையை விரைவாகக் குறைக்கிறது. பசியை குறைப்பதும் பூண்டின் (Garlic) மற்றொரு நன்கு அறியப்பட்ட நன்மையாகும். இது உங்களை நீண்ட நேரத்திற்கு நிரம்பிய உணர்வுடன் வைத்திருக்கும். இதனால், தேவையற்ற ஆரோக்கியமற்ற உணவுகளை சாப்பிடுவது தவிர்க்கப்படுகின்றது. 


4. கருப்பு மிளகு


கருப்பு மிளகு (Black Pepper) உணவுக்கு சுவையூட்டுவதோடு இதனால் பல ஆரோக்கிய நன்மைகளும் கிடைக்கின்றன. கருப்பு மிளகில் காணப்படும் பைபரின் என்ற பொருள், வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது, மேலும் இது உடலில் கொழுப்பைக் குறைக்கிறது.


5. இஞ்சி


இஞ்சியின் (Ginger) தெர்மோஜெனிக் குணங்களால் எடை குறைப்பை துரிதப்படுத்தலாம். கார்போஹைட்ரேட் அல்லது சர்க்கரை நிறைந்த உணவை சாப்பிட்ட பிறகு இரத்தத்தில் சர்க்கரை அதிகரிப்பை நிர்வகிப்பதற்கும் இஞ்சி உதவும். கூடுதலாக, இது பசியைக் குறைக்கும்.  இஞ்சியை சூப், ரசம், தேநீர், சாலட், கறி, பருப்பு ஆகியவற்றில் சேர்க்கலாம்.


(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | Fertility: கர்ப்பத்தை ஏற்படுத்தும் மந்திர உணவு உண்டா? இந்த உணவுகளை சாப்பிட்டு பாருங்க!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ