Hair Fall Treatment In Tamil: அழகான தோற்றத்துக்கு கூந்தலின் பங்கும் அவசியமானது. இருபாலருக்கும் இது பொருந்தும். வயதான காலத்துக்குப் பிறகு உண்டாகும் வழுக்கை தலை எல்லாம் இப்போது இளவயதிலேயே சந்திக்கிறார்கள். இதற்கு முக்கிய காரணம் தவறான உணவுமுறை. ஆனால் சரியான ஆரம்பத்திலேயே கவனித்து அதற்கான சிகிச்சையை செய்தால் இந்த பிரச்சனையில் இருந்து நாம் விடமுடியும். இதன் மூலம் குறிப்பிட்ட வருடங்கள் வழுக்கையை தள்ளிப்போடவும் முடியும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கீழாநெல்லி
கீழாநெல்லி குளிர்ச்சி மிகுந்தது. கூந்தல் உஷ்ணத்தால் அதிகமாக உதிரும் போது இதை அரைத்து தலையில் தடவினால் கூந்தல் பிரச்சனை சரியாகும். வழுக்கை தலையில் முடி வளர இவை பெரிதும் பயன்படும். இதை உரிய முறையில் பயன்படுத்தினாலே போதும்.


மேலும் படிக்க | எச்சரிக்கை... கரும்பு சாப்பிட்டு தண்ணீர் குடித்தால் நெஞ்சு வலி வருமா?!


நேர்வாளங்கொட்டை
நாட்டுமருந்துகடைகளில் இந்த நேர்வாளங்கொட்டை கிடைக்கும். இதனை உடைத்தால் அதன் உள்ளே பருப்பு இருக்கும். அதை சிறிதளவு நீர் விட்டு அரைத்து, வழுக்கை உண்டாகும் இடத்தில் தேய்த்துவர வேண்டும். வழுக்கையில் முடி வளர வேண்டும் என்று தீவிரமாக விரும்பினால் கண்டிப்பாக தினமும் இதை தடவி வர வேண்டும்.


சின்ன வெங்காயம்
சின்ன வெங்காயம் 5 எடுத்து தலையில் வழுக்கை விழுந்த இடத்தில் தடவி வந்தால் முடி வளர்ச்சி உண்டாகும். புழுவெட்டினால் வழுக்கை இருந்தால் மட்டுமே பலன் கிடைக்கும்.


தாமரை
முடி வழுக்கையை ஆரம்பத்தில் கண்டறிந்தால் அதை எளிதாக தீர்க்க தாமரை இலை வைத்தியம் உதவும். தாமரை இலையை வாங்கி சுத்தம் செய்து நீர்விடாமல் அரைத்து சாறெடுக்கவும். இந்த சாறுடன் சம அளவு நல்லெண்ணெய் கலந்து தைலமாக காய்ச்சி தினமும் தலையில் தடவி வந்தால் வழுக்கை பிரச்சனை குணமாகும்.


(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்ளும் முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)


மேலும் படிக்க | Kidney Health: சிறுநீரக கல் பிரச்சனைக்கு தீர்வைத் தரும் 3 வகை ஜுஸ்கள்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ