Dandruff: பாடாய் படுத்தும் பொடுகுத் தொல்லை நீங்க விளக்கெண்ணெய்

Hair Care Tips: சில வீட்டு வைத்தியங்கள் முடி பராமரிப்புக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அந்த வகையில் விளக்கெண்ணெயை முடிக்கு பயன்படுத்துவதன் மூலம் பொடுகு பிரச்சனையில் இருந்து விடுப்படலாம்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jan 11, 2023, 03:29 PM IST
  • பொடுகுக்கு எண்ணெய் சிகிச்சை சிறந்தது.
  • விளக்கெண்ணெய் பயன்கள்.
  • பொடுகு நீக்கும் ஹேர் மாஸ்க்.
Dandruff: பாடாய் படுத்தும் பொடுகுத் தொல்லை நீங்க விளக்கெண்ணெய் title=

பொடுகுக்கு விளக்கெண்ணெய்: பொடுகு முடியின் அனைத்து அழகையும் பறித்து விடுகிறது. இதன் காரணமாக, முடியில் எப்போதும் வெண்மையாவே இருக்கும். அத்தகைய சூழ்நிலையில், எந்த ஒரு சிகை அலங்காரமும் சரியாக செய்ய முடியாமால் போகிறது. அதேபோல் பொடுகு நம் முடியின் வேர்களை வலுவிழக்கச் செய்கிறது. முடி உதிர்வதற்கு இதுவே மிகப்பெரிய முக்கிய காரணம். மேலும் பொடுகு முடி வளர்ச்சியையும் மோசமாக பாதிக்கிறது. எனவே இது போன்ற தொல்லையில் இருந்து விடுப்பட உங்களின் தலைமுடிக்கு விளக்கெண்ணெயை பயன்படுத்துவதன் மூலம் பொடுகுத் தொல்லையிலிருந்து விடுபடலாம். எப்படி பயன்படுத்துவது என்பதை தெரிந்துக்கொள்ளுங்கள்.

விளக்கெண்ணெய் மற்றும் கற்றாழை
விளக்கெண்ணெய் மற்றும் கற்றாழை இரண்டும் பொடுகை நீக்குவதில் பயனுள்ளதாக இருக்கும். இதற்கு நீங்கள் 1 டீஸ்பூன் கற்றாழை ஜெல் மற்றும் 1 டீஸ்பூன் தேயிலை மர எண்ணெயை 2 டீஸ்பூன் விளக்கெண்ணெயுடன் கலக்கவும். இந்த பேஸ்ட்டை முடியில் தடவவும். 20 நிமிடம் கழித்து கழுவவும். வாரத்திற்கு 2-3 முறை பயன்படுத்தினால் பொடுகு நீங்கும்.

மேலும் படிக்க | Weight Loss Tips: உடல் எடையை குறைக்க ரவையா? கடலை மாவா? எது சிறந்தது?

விளக்கெண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெய்
தேங்காய் எண்ணெயுடன் விளக்கெண்ணெய் கலந்து தடவுவது கூந்தலுக்கு நன்மை பயக்கும். இவை இரண்டையும் கலந்து முடியில் தடவினால் பொடுகு பிரச்சனை நீங்கும். இது முடியின் வறட்சியை நீக்கி வலிமையாக்கும். மேலும் முடியை அழகாகவும் நீளமாகவும் மாற்ற இந்த எண்ணெய் கலவை பயனுள்ளதாக இருக்கும்.

தயிர் மற்றும் விளக்கெண்ணெய்
தயிர் பொடுகை நீக்குகிறது மற்றும் முடி வேர்களை ஈரப்பதமாக்குகிறது. தயிரில் விளக்கெண்ணெய்க் கலந்து பேஸ்ட் செய்து முடியில் தடவினால் முடியின் வேர் முதல் நுனி வரை நன்மை பயக்கும்.

விளக்கெண்ணெய் மற்றும் மருதாணி
மருதாணியுடன் விளக்கெண்ணெய் கலந்து தடவினால் பொடுகு நீங்கும். இது முடியை கருமையாக்க வைத்திருக்க உதவும். இதற்கு மருதாணியை ஊறவைத்த பின், அதனுடன் 1 டீஸ்பூன் விளக்கெண்ணெய்ச் சேர்த்து முடியில் தடவினால், பொடுகுத் தொல்லை நீங்கும்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | உடல் எடை கட்டுக்கடங்காமல் ஏறுதா? இவற்றை பயன்படுத்தினால் சட்டுனு குறையும் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News