Cumin Seeds Water For Weight Loss Tips in Tamil: உடல் பருமன் இந்நாட்களில் ஒரு மிகப்பெரிய பிரச்சனையாக உருவெடுத்து வருகிறது. உடல் எடை வேகமாக அதிகரித்து விடுகிறது. ஆனால், அதை குறைப்பது மிகவும் கடினமான பணியாக உள்ளது. உடல் எடையை குறைக்க பலர் பல வித முயற்சிகளை எடுக்கிறார்கள். ஆனால் இந்த முயற்சிகளில் சிறு தவறுகள் எற்பட்டாலும், முழு பலனை அடைய முடிவதில்லை. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தொப்பை கொழுப்பை (Belly Fat) குறைத்து உடல் எடையை குறைக்க சிலர் தினமும் ஜிம் செல்கிறார்கள், சிலர் கடுமையான உணவு கட்டுப்பாடுகளை மேற்கொள்கிறார்கள். ஆனால், என்னென்ன செய்ய வேண்டும் என்பதில் நாம் செலுத்தும் கவனத்தை என்னென்ன செய்யக்கூடாது என்பதில் செலுத்துவதில்லை. இதனால் உடல் எடை குறைவதற்கு பதிலாக மீண்டும் அதிகமாகின்றது.  சில இயற்கையான எளிய வழிகளிலும் உடல் எடையை குறைக்கலாம். அப்படி ஒரு இயற்கையான வழியை பற்றி இந்த பதிவில் காணலாம்.


சீரக நீர் கொண்டு தொப்பை கொழுப்பை விரைவாக குறைக்கலாம். இது பல வித ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது. சீரகம் உடலின் பல செயல்பாடுகளை சீர் செய்கிறது. செரிமானம், எடை இழப்பு, நோய் எதிர்ப்பு சக்தி என பல வித நன்மைகள் இதன் மூலம் கிடைக்கின்றன. தொப்பை கொழுப்பை குறைக்கவும் உடல் எடையை குறைக்கவும் (Weight Loss) சீரக நீர் எவ்வாறு பயன்படுகின்றது என்பதை இங்கே காணலாம். 


சீரக நீரின் நன்மைகள்:


தொப்பை கொழுப்பை குறைக்க உதவும்: சீரக நீரில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் தொப்பை கொழுப்பை குறைக்க உதவும். இதை தொடர்ந்து உட்கொள்வதால் தொப்பை கொழுப்பை வேகமாக குறைக்கலாம். 


செரிமானத்தை மேம்படுத்த உதவும்: சீரக நீர் செரிமானத்தை மேம்படுத்தவும், அஜீரணத்தை குறைக்கவும் உதவுகிறது. இதைதொடர்ந்து உட்கொள்வதால், உடலின் செரிமான அமைப்பு சீராக இருக்கின்றது. இது உணவை சரியாக ஜீரணிக்க உதவுகிறது.


மேலும் படிக்க | Weight Loss: உடல் கொழுப்பை எரிக்க... காலை - மாலை - இரவு உணவில் சிறுதானியங்கள்..!


ஹார்மோன் ஏற்றத்தாழ்வை சமநிலைப்படுத்த உதவும்: சீரக நீரை தொடர்ந்து உட்கொள்வது ஹார்மோன் சமநிலையின்மையை சமன் செய்ய உதவும். இது தொப்பை கொழுப்பைக் குறைக்கவும் உதவும்.


ஆற்றலை அதிகரிக்கும்: சீரக நீரை உட்கொள்வதால் உடலின் ஆற்றல் அளவு அதிகரிக்கிறது. இதன் காரணமாக நாம் நமது உடல் செயல்பாடுகளை ஒழுங்காக மேற்கொள்ள முடிகிறது. இது உடலுக்கு கூடுதலான பலத்தையும் ஆற்றலையும் அளிப்பதால் உடற்பயிற்சி செய்த பின் உருவாகும் சோர்வு தவிர்க்கப்படுகின்றது. 


உடல் எடையை குறைக்க சீரக தண்ணீர் செய்வது எப்படி?


- ஒரு பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வைக்கவும்.
- தண்ணீர் கொதிக்கும் போது அதில் ஒரு ஸ்பூன் சீரகம் சேர்க்கவும்.
- தண்ணீர் நன்றாக கொதித்த பிறகு, அடுப்பை அணைத்து, தண்ணீரை ஆற விடவும்.
- ஆறிய பின் வடிகட்டி குடிக்கலாம். 


(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | கொலஸ்ட்ரால் குறைபாடு... வைட்டமின் டி குறைபாடு.. இதை மட்டும் செய்யுங்கள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ