Gluten-free Millets for Weight Loss: நாம் உணவில் தினமும் சேர்க்கும் அரிசி அல்லது கோதுமைக்கு பதிலாக, வேறு சிறுதானியங்களை பயன்படுத்துவது சிறந்த பலனைக் கொடுக்கும். அரிசி மற்றும் கோதுமையில் அதிக கார்போஹைட்ரேட் மற்றும் கலோரிகள் உள்ளன. அதனால், குளூட்டன் அல்லாத சிறுதானியங்களை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம், உடல் பருனை குறைப்பது (Weight Loss Tips) முதல் எண்ணற்ற பலன்களை பெறலாம்.
சிறுதானியங்களில், அதிக நார் சத்தும் குறைவான மாவுச் சத்தும் உள்ளதால், ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும் என்று கருதப்படுகிறது. வைட்டமின்கள், தாதுக்கள், நார்ச்சத்து, இரும்பு, புரதம் மற்றும் பசையம் இல்லாத பல ஊட்டச்சத்துக்கள் இவற்றில் நிறைந்துள்ளன. அவற்றை உட்கொள்வதன் மூலம் நீரிழிவு, உடல் பருமன் மற்றும் பல பிரச்சனைகள் (Health Tips) நீங்கும்.
இருப்பினும், சிறுதானியங்களின் ஊட்டச்சத்துக்களையும், ஆரோக்கிய நன்மைகளையும் முழுமையாக பெற, அவற்றை உட்கொள்ள சரியான வழி மற்றும் சரியான நேரத்தை நீங்கள் அறிந்திருக்க வேண்டும். கோடைக்காலத்தில் சில சிறுதானியங்களை காலை உணவிலும் சில சிறுதானியங்களை மதிய உணவிலும் உட்கொள்வது ஆரோக்கியத்திற்கு இரட்டிப்பு பலன் தரும். அதைப் பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.
காலை உணவுக்கு ஏற்ற சிறுதானையங்கள்
உங்கள் காலை உணவில் கேழ்வரகு அதாவது ராகியை சேர்த்துக்கொள்ளலாம். இதில் கால்சியம், இரும்புச்சத்து மற்றும் நார்ச்சத்து உள்ளது மற்றும் இதனை உட்கொள்வதன் மூலம் உடலின் ஆற்றல் அளவு, நாள் முழுவதும் சிறப்பாக இருக்கும். அதுமட்டுமின்றி உடல் எடையை குறைக்கவும் உதவும். நார்ச்சத்து இருப்பதால், நீண்ட நேரம் வயிறு நிரம்பிய உணர்வு இருக்கும்.
மதிய உணவிற்கு ஏற்ற சிறுதானியங்கள்
சிறுதானியத்தை மதிய உணவிலும் உட்கொள்ளலாம். இருப்பினும், அரிசிக்கு பதிலாக தினை அரிசி, குதிரைவாலி, கம்பு ஆகியவற்றை உட்கொள்ளலாம். இது பசியைத் தணிப்பதோடு இரத்த சர்க்கரை அளவையும் கட்டுக்குள் வைத்திருக்கும். உடல் பருமனும் நன்றாக குறையும்.
மேலும் படிக்க | ஏறும் சுகர் லெவல் சட்டுனு குறைய இந்த ஆயுர்வேத விதைகளை சாப்பிடுங்கள்
இரவு உணவிற்கு ஏற்ற சிறுதானியங்கள்
இரவு உணவில் தினை அரிசி சேர்த்துக்கொள்ளலாம். தினை ஒரு பசையம் இல்லாத தானியமாகும். புரதம், நார்ச்சத்து, இரும்பு மற்றும் மெக்னீசியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்த தினை நமது ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். புரதம் நிறைந்த இந்த தானியம் உங்கள் கொழுப்பௌ எரித்து, உடல் எடையை வேகமாக குறைக்கிறது. முதுமையில் வரக்கூடிய மூளை தொடர்பான குறைபாடுகளை தடுக்கும் திறன் கொண்ட திணை அரிசியில் கால்சியம், புரோட்டீன், நார்ச்சத்துக்கள், இரும்புசத்து, ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ், மெக்னீசியம் போன்ற மேலும் பல்வேறு சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளது.
சிறுதானியங்களை உணவில் சேர்ப்பதற்கான வழிமுறைகள்
1. சிறுதானியங்களை அரிசிக்கு, கோதுமைக்க்கு பதிலாக பயன்படுத்தலாம்.
2. சாதத்திற்கு பதிலாக, குதிரைவாலி, தினை அரிசி ஆகியவற்றை பய்ன்படுத்தலாம்.
3. கோதுமை அமவிற்கு பதிலாக, சிறுதானிய மாவுகளை சாப்பிடுவது வயிறு நிரம்பிய உணர்வைத் தரவும், எடையைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது.
4. சிறுதானியங்களை பொங்கல் செய்து சாப்பிடலாம். அதில் பருப்பு வகைகள், காய்கறிகள் மற்றும் மசாலாப் பொருட்களை சேர்த்து சமைப்பதால், அனைத்து விதமான சத்துக்களையும் கொண்ட சமச்சீரான உணவாக இருக்கும்.
5. சிறுதானியங்களை இட்லி, உப்புமா, இனிப்பு வகைகளையும் தயாரித்து சாப்பிடலாம்.
6. சிறுதானியங்களை சூப் செய்து குடிப்பது நன்மை பயக்கும். நீங்கள் பிரெஷ்ஷான காய்கறிகள் மற்றும் மசாலாப் பொருட்களை இதில் சேர்க்கலாம்.
(பொறுப்பு துறப்பு: எங்கள் கட்டுரை தகவலை வழங்குவதற்காக மட்டுமே. மேலும் விவரங்களுக்கு எப்போதும் நிபுணர் அல்லது உங்கள் மருத்துவரை அணுகவும்.)
மேலும் படிக்க | தினமும் 30 நிமிட ஜாகிங்... உடலில் ஏற்படும் வியக்கத்தக்க மாற்றங்கள்..!!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ