Weight Loss: உடல் எடை குறைப்பு என்பது தற்போது அனைவராலும் அதிகம் பேசப்படும் விஷயமாக மாறியுள்ளது. ஏனென்றால், முன்பில்லாத அளவிற்கு உடல் பருமன் போன்றவை மக்களை அதிகம் கவலைக்கொள்ள செய்கின்றன. வாழ்க்கை முறை மாற்றம், உணவுப்பழக்க வழக்கத்தில் மாற்றம் ஆகியவை உடல் பருமனுக்கு முக்கிய காரணியாக அமைகின்றன. உடல் பருமன் என்பது ஒரு நோய் நினைப்பது தவறு. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உடல் பருமன் அதிகமாகும்போது கொலஸ்ட்ரால் அளவு உடலில் அதிகரிக்கலாம். இதன்மூலம் நெஞ்சு வலி ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, தகுந்த மருத்துவ ஆலோசனை பெறுவதே இதற்கன ஆகச் சிறந்த வழியாகும். உடல் பருமன் என்பது இளம் வயதினர் முதல் முதியவர்கள் வரை இருக்கிறது. இதில் இளைய தலைமுறையினருக்கு உடல் எடை குறைப்பு என்பது சற்று சுலபம் என்றாலும், 30 வயதை கடந்த மத்திம வயதினரும் உடல் எடை குறைப்பை எளிதாக செய்யலாம் என கூறப்படுகிறது. 


30 வயதுக்கு மேலானோர் கவனத்திற்கு...


அந்த வகையில், உடல் எடை குறைப்பில் ஈடுபடும் மத்திம வயதினர், தங்களின் அன்றாட வாழ்க்கையில் சில பழக்கவழக்கங்களை கைக்கொண்டால் நல்ல பலன்களை பெறுவார்கள் என கூறப்படுகிறது. அதாவது, 30 வயதுக்கு மேலானோர் உடல் எடை குறைப்புக்கு உடற்பயிற்சிக்கூடத்திற்கு செல்ல திட்டமிட்டிருந்தால், அவர்கள் அங்கு இணைவதற்கு முன் இந்த விஷயங்களை செய்துகொண்டால் அவர்களுக்கு விரைவாகவே பலன்கள் கிடைக்கும். 


மேலும் படிக்க | பித்தப்பை கற்கள் இருந்தால் புற்றுநோய் அபாயம் அதிகரிக்குமா? ஷாக்கிங் ஹெல்த் அலர்ட்!!


உடலை கொழுப்பற்றதாக மாற்றவதே முதல் வேலை. இதனை பலரும் புறக்கணித்துவிடுவார்கள். அவர்கள் உடற்பயிற்சிக் கூடத்திற்கு சென்றாலும் கூட இந்த பிரச்னையால் அதிகம் பாதிக்கப்படுவார்கள். எனவே, 30 வயதுக்கு மேலானோர் உடல் எடை குறைப்பின்போது கடைபிடிக்க வேண்டிய சில விஷயங்களை இங்கு காணலாம்.


தூக்கம் முக்கியம்


இந்த காலத்தில் பலரும் தூக்கத்திற்கு முக்கியத்துவம் அளிப்பதில்லை.  முறையான நேரத்தில் தூங்கி, அதிகாலையில் எழுந்திருப்பது நல்ல பழக்கவழக்கங்களுள் ஒன்றாகும். எனவே, நீங்கள் 6-7 மணிநேரம் வரை சரியான தூக்கத்தை மேற்கொள்ள வேண்டும். தூக்கமின்மையால் பல உடல்நல பிரச்னைகள் வரும், அதில் முக்கியமான ஒன்று உடல் பருமன். அதனால், தூக்கத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என சொல்லப்படுகிறது. 


வீட்டு உணவை அதிகம் சாப்பிடுங்கள்


துரித உணவுகளை அதிகம் சாப்பிடுவதும் உடல் பருமனுக்கு இட்டுச் செல்லும். எனவே, உடல் எடையை குறைக்க வேண்டும் என நினைத்தால் துரித உணவுகளை விட்டு தூரம் வாருங்கள். அதற்கு பதில் வீட்டில் சமைத்த உணவுகளை சாப்பிடுங்கள். நீங்களே சமைத்து நீங்களே சாப்பிடும்போது அது ஒரு கலையாகவே மாறிவிடும்.


மது பழக்கம்


30 வயதில் மேல் மது பழக்கம் எந்தளவிற்கு ஆபத்தோ அதே போல் தான் இனிப்பு சாப்பிடுவதும், கார்ப்பனேடட் ஜூஸ்களை குடிப்பதும். இவை அனைத்தும் உடல் எடையை குறைப்பதில் சிக்கலை ஏற்படுத்தும், குறிப்பாக உடலில் கொழுப்பை அதிகப்படுத்தும். Diet Soda போன்றவற்றில் கொழுப்பு இல்லை என குறிப்பிடப்பட்டிருந்தாலும், அதில் சேர்க்கப்பட்டிருக்கும் இனிப்பும் உடலுக்கு கேடானது. 


உணவுக்கட்டுப்பாடு


உடல் எடை குறைப்பில் விரதம் இருப்பது நல்ல பலனை தரும் என்றாலும், நீங்கள் முழுமையாக பசியுடன் இருக்க வேண்டும் என்றில்லை. நீங்கள் குறைவான மற்றும் நிறைவான உணவுகளை சாப்பிட்டு பழகுங்கள். மேலும், பசியெடுத்தால் மட்டும் சாப்பிடுங்கள், அதாவது வயிறை எப்போதும் காலியாக வைத்திருங்கள்.


புரதமும் தேவை


புரதம் என்பது உடல் எடை குறைப்பில் மிக முக்கியமானது. இது வளர்சிதை மாற்றத்தை ஊக்குவிக்கும். கலோரிகளை குறைப்பதில் முக்கிய பங்காற்றும். தசை மற்றும் எலும்புகள் வலுபெற புரதம் மிக மிக முக்கியமானது.  


அவசரப்படாதீர்கள் 


30 வயதுக்கு மேல் உடல் எடை குறைப்பு குறித்து அதிகம் பதற்றம் கொள்ள வேண்டாம். நீங்கள் உடல் எடை குறைப்பு பயணத்தை நிதானமாகவே மேற்கொள்ளலாம். குறைவான கலோரிகளை சாப்பிட்டுவிட்டு அதிகமாக உடற்பயிற்சி செய்வது மட்டும் உடல் எடையை குறைத்துவிடாது, நீங்கள் மன ரீதியாக அழுத்தத்தில் இருக்கும்போது உடல் எடை குறைப்பிலும் பிரச்னை ஏற்படும். 


(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, 30 வயதுக்கு மேலானோருக்கான உடல் எடை குறைப்பு குறித்த இந்த செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இவை பொதுவான தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும் என்பதை கவனத்தில் கொள்க. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | உயர் இரத்த அழுத்தத்திற்கு நிவாரணமாக அமையும் சில எளிய வீட்டு வைத்தியங்கள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ