எடை குறைப்பு திட்டத்தை தள்ளிப் போடுபவரா? 70 கிலோ எடை குறைத்த துருவ் அகர்வாலா சொல்வதை கேளுங்கள்!

Weight Loss Secrets From Housing.com CEO Dhruv Agarwala : நாமே நமது ஆரோக்கியத்திற்கு பொறுப்பேற்கவில்லை என்றால், வேறு யார் பொறுப்பேற்க முடியும்? ஒரு கணம் யோசித்தால் 70 கிலோ எடை குறையலாம்!!!  

Written by - Malathi Tamilselvan | Last Updated : Mar 27, 2024, 06:19 PM IST
  • எடை குறைப்பு திட்டத்தை தள்ளிப் போடுபவரா?
  • துருவ் அகர்வாலா சொல்வதை கேளுங்கள்!
  • உடல் எடையை குறைக்க வேண்டியதன் அவசியம்
எடை குறைப்பு திட்டத்தை தள்ளிப் போடுபவரா? 70 கிலோ எடை குறைத்த துருவ் அகர்வாலா சொல்வதை கேளுங்கள்! title=

Housing.com இன் தலைமை நிர்வாக அதிகாரி துருவ் அகர்வாலா, இரண்டே ஆண்டுகளில் 71 கிலோ எடையை குறைத்து தன்னை இளமையாக்கிக் கொண்டார். அவருக்கு உடல் எடை குறைக்கும் கனவு எப்படி சாத்தியமானது? உடல் எடை குறைத்த தனது அனுபவங்களை ஹவுஸிங்.காம் நிறுவனத்தின் சி.இ.ஓ துருவ் அகர்வாலா பகிர்ந்து கொண்டார்
 
உடல் எடை குறைப்பு பயணம்
வழக்கமான உடற்பயிற்சி மற்றும் முறையான உணவு உண்ணும் வழக்கம் தான் தனது உடல் எடை குறைப்புக்கு எப்படி உதவியது என்பதை துருவ் அகர்வாலா பகிர்ந்துகொண்டார்.

நீண்டகாலமாக குண்டாக இருந்தாலும், உடல் எடை குறைப்பது தொடர்பாக தனக்கு பெரிய ஆர்வம் இல்லை என்று அவர் தெரிவித்தார். இனிப்புகளை நிராகரிப்பதன் மூலம் மட்டுமே எடை இழப்பு ஏற்படாது என்பது உண்மைதான். ஆனால் கூடுதல் கலோரிகளைக் குறைக்க நிறைய முயற்சி தேவைப்படுகிறது.

மிகவும் முக்கியமாக, எடை இழப்பு பயணத்தைத் தொடங்கும்போது ஒரு நிலையான வாழ்க்கைமுறை மாற்றங்களை மேற்கொள்ளவேண்டும். வேலை முதல் உணவு அட்டவணை என பல விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும். அத்தகைய ஊக்கமளிக்கும் எடை இழப்புக் கதை, பிரபல ரியல் எஸ்டேட் தளமான Housing.com இன் CEO துருவ் அகர்வாலாவுக்கு சொந்தமானது.

சிங்கப்பூரைச் சேர்ந்த தொழிலதிபர் துருவ் அகர்வாலா 2021 இல் 152 கிலோ எடை இருந்தார். நெஞ்சில் நெஞ்செரிச்சலின் காரணமாக அவ்வப்போது மருத்துவமனையில் சிகிச்சைப் பெற வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. அப்போது அவருக்கு உடல் எடை குறைப்பதன் முக்கியத்துவம் புரிந்தது. இரண்டே ஆண்டுகளில் 71 கிலோ உடல் எடையைக் குறைக்கும் உத்வேகத்தைக் கொடுத்தது யார் தெரியுமா?

மேலும் படிக்க | விலங்குகளுக்கு நோய்த்தொற்று பரப்புவதில் மனிதர்களுக்கு முதலிடம்! அதிர்ச்சியூட்டும் ஆய்வு முடிவுகள்!

ரோஜர் பெடரரின் உடலமைப்பு அவருக்கு உத்வேகம் அளித்தது என்று கூறும் துருவ், உடற்பயிற்சி, உணவுப் பழக்கம் உள்ளிட்ட வாழ்க்கைமுறை மாற்றத்தை ஏற்படுத்தியதன் மூலம், தனது எடையில் சுமார் பாதியை இழந்து, 81 கிலோ என்ற அளவிற்கு வந்துவிட்டார்.

உடல் எடை குறைப்பு பயணம் - பேட்டி

சவுத் சைனா மார்னிங் போஸ்ட் (SCMP) ஊடகத்திற்கு பேட்டி அளித்த துருவ் அகர்தலா, 2021 இல் உடல்நலக்குறைவு ஏற்பட்டபோது, இதயம் துடித்தபோது, படபடப்பும் கூட சேர்ந்துக் கொண்டது, நான் இறக்கப் போகிறேன் என்று நினைத்தேன். ஆனால், சிகிச்சையில் பிழைத்த பிறகு உடல் எடையை குறைக்க முடிவு செய்திருக்கிறார்.

உடல் எடையை குறைக்கும் திட்டங்களை தாமதப்படுத்தியதன் விளைவை புரிந்துக் கொண்ட அவர், தனது உடல்நிலைக்கு தானே பொறுப்பேற்கவில்லை என்றால், என்ன செய்யமுடியும் என்று நினைத்த அந்த தருணம் இன்றும் எனக்கு தெளிவாக நினைவிருப்பதாக கூறுகிறார்.

அப்போது நீரிழிவு நோயின் முதல் கட்டத்தில் இருந்த  துருவ் அகர்வாலா, மூச்சுத்திணறல், அதிக கொழுப்பு மற்றும் உயர் இரத்த அழுத்தத்திற்கான மருந்துகளை எடுத்துக்கொண்டிருந்தார். இந்த மூன்றும் சேர்ந்தால் பிரச்சனை என்பதைப் புரிந்துக் கொண்டு, ஆரோக்கியமாக இருக்க ஏற்கொண்ட முயற்சிகளில் சுமார் 71.1 கிலோவைக் குறைத்தார்.

மேலும் படிக்க | எகிறும் உடல் எடையை பட்டுனு குறைக்க உதவும் பச்சை உணவுகள்: கண்டிப்பா சாப்பிடுங்க| 

உடற்பயிற்சி

தனிப்பட்ட உடற்பயிற்சி பயிற்றுவிப்பாளருடன் வழிகாட்டுதலுடன், வாரத்திற்கு மூன்று முறை வலிமை-பயிற்சி அமர்வுகளை மேற்கொண்டா. ஒரு நாளைக்கு 12,000 அடிகள் நடப்பதாகவும் கூறுகிறார்.

உணவு கட்டுப்பாடு 

கடுமையான உடற்பயிற்சிகளைத் தவிர, உணவு கட்டுப்பாட்டையும் கடைபிடித்தார். சமோசா, தோசைகள் மற்றும் சீஸ் டோஸ்ட்கள் போன்ற அதிக கார்ப் உணவுகளை தனது உணவில் இருந்து நீக்கினார். மேலும், மது, பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் வறுத்த உணவுகளை குறைத்து தினசரி கலோரி உட்கொள்ளலை 1,700 கலோரிகளாகக் குறைத்தார். உணவில் புரதத்தை அதிகரிப்பதை உறுதிசெய்ய வேண்டும் என்பதை உறுதியாக கடைபிடித்தார்.

பசியை அடக்கவில்லை

பசிக்கும்போது, தின்பண்டங்களை உண்பதைத் தவிர்த்து கட்டுப்படுத்த கொட்டைகள், கேரட், வெள்ளரிகள் மற்றும் தயிர் போன்ற ஆரோக்கியமானவற்றை எடுத்துக் கொண்டார்.  

இப்படி உணவுக் கட்டுப்பாடு மற்றும் உடற்பயிற்சியே உடல் எடை கட்டுப்பாட்டு பயணத்தில் நல்ல பலனைக் கொடுக்கும் என்பதற்கு உதாரணமாக ஹவுசிங்.காம் சி.ஈ.ஓ துருவ் அகர்வாலா உதாரணமாக இருக்கிறார்.

மேலும் படிக்க | Health Tips: முள்ளங்கியை எப்படியெல்லாம் சாப்பிட்டா டாக்டருக்கு செலவு செய்ய வேண்டாம்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News