முன்கூட்டிய வெள்ளை முடி பிரச்சனைக்கு தீர்வு: கருப்பான மற்றும் அடர்த்தியான முடியை அனைவரும் விரும்புகிறார்கள், ஆனால் இளம் வயதிலேயே உங்களின் முடி நரைக்க ஆரம்பித்தால், அது உங்களுக்கு பதற்றத்தை ஏற்படுத்தி தரும். பொதுவாக இது போன்ற சங்கடங்களை தவிர்க்க மக்கள் வெள்ளை முடியை கையால் பிடுங்கி எடுத்து விடுகிறார்கள் அல்லது கெமிக்கல் நிறைந்த ஹேர் டையைப் பயன்படுத்துகிறார்கள். இந்த முறைகள் உங்களின் முடியை மேலும் சேதம் படுத்துமே தவிர சரியான தீர்வை தராது. எனவே உங்கள் தலைமுடி மீண்டும் கருமையாகி, மக்கள் முன் சங்கடம் மற்றும் குறைந்த நம்பிக்கை உணர்வு ஏற்படாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பதை தெரிந்துக்கொள்ளுங்கள்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வெள்ளை முடியை கருப்பாக்க இயற்கை வீட்டு வைத்தியம்


உங்களின் வெள்ளை முடியை மீண்டும் கருப்பாக்க சிறந்த வழி, நீங்கள் ரசாயன அடிப்படையிலான கூந்தல் பொருட்களை பயன்படுத்துவதை தவிர்த்து இயற்கை வைத்தியத்தை தேர்ந்தெடுக்க வேண்டும். பொதுவாக நிபுணர்களின் கூற்றுப்படி, நீங்கள் ஒரு குறிப்பிட்ட சிட்ரஸ் பழத்தின் இலைகளைப் பயன்படுத்தினால், உங்களின் வெள்ளை முடி கருப்பாக்கும் என்கின்றனர். அந்த இலை என்ன என்பதை பார்ப்போம்.


மேலும் படிக்க | நீரிழிவு நோயை கால் மூலம் தெரிந்துக் கொள்ள முடியும்!


இயற்கையான முடி நிறமாகப் பயன்படுத்தப்படும் புளி இலைகளைப் பற்றி இங்கே நாம் பேச உள்ளோம். நீங்கள் புளியை பல முறை சாப்பிட்டிருக்க வேண்டும், அதன் புளிப்பு பலரை ஈர்க்கிறது, ஆனால் இந்த பழத்தின் இலைகளை நீங்கள் பயன்படுத்தியிருக்க மாட்டீர்கள். அதை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதை தெரிந்துக்கொள்ளுங்கள்.


இவ்வாறு பேஸ்ட்டை தயார் செய்யவும்
இளம் வயதில் வளரும் வெள்ளை முடி மீண்டும் கருமையாக மாற வேண்டுமெனில், இதற்கு புளியின் உதவியுடன் பேஸ்ட்டை தயார் செய்யவும். இந்த செய்முறை பாட்டி காலத்திலிருந்து நடந்து வருகிறது, ஆனால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதன் விளைவு நிச்சயமாக மெதுவாக இருக்கும், ஆனால் முடிவுகள் உங்கள் விருப்பப்படி வரும்.


அதேபோல் புளி தலைமுடியை கருமையாக்குவது மட்டுமின்றி தலையில் தேங்கியுள்ள அழுக்குகளையும், பொடுகு போன்ற பிரச்சனைகளையும் நீக்க உதவும். புளி இலையில் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் பொடுகு எதிர்ப்பு தன்மை உள்ளது. 


புளி பேஸ்ட்டை கொண்டு தலையை மசாஜ் செய்யவும்
இதற்கு புளியை மிக்ஸி கிரைண்டரில் நன்றாக அரைத்து, பின் அதில் தயிரை கலந்து கொள்ளவும். இப்போது இந்த பேஸ்ட்டை தலைமுடியில் லேசான கையால் மசாஜ் செய்து பின்னர் உலர விடவும். இறுதியாக உங்கள் தலையை சுத்தமான தண்ணீரில் கழுவவும். இந்த செய்முறையை சில வாரங்களுக்கு தொடர்ந்து பின்பற்றி வந்தால், உங்கள் வெள்ளை முடி கருமையாக மாற ஆரம்பிக்கும்.


(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்ளும் முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)


மேலும் படிக்க | அழகை மட்டுமல்ல ஆரோக்கியத்தையும் பராமரிக்கும் அருமையான வழிகள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ