உடல் எடையை குறைக்கும் உணவுகள்: உடல் எடையை குறைக்க நாம் பல வழிகளில் முயற்சி செய்கிறோம். குறிப்பாக தொப்பை வந்துவிட்டால், அதை சரி செய்வது மிக கடினமாகிவிடுகிறது. உடல் எடையை குறைக்க நமது வாழ்க்கை முறையில் மாற்றங்களை கொண்டு வர வேண்டியது மிக அவசியமாகும். எடை அதிகரிப்பதற்கு உங்கள் உணவே முக்கிய காரணமாகும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உடல் எடையை குறைப்பது மிகவும் கடினமான பணியாகும், இதற்காக கடுமையான உடற்பயிற்சிகளையும் கடுமையான உணவை முறையையும் பின்பற்ற வேண்டும். இது தவிர, உணவு அட்டவணையைப் பின்பற்றுவது என்பது எளிதான விஷயமில்லை, ஆனால் சில விஷயங்களைச் சாப்பிடுவதன் மூலம் எடையைக் கட்டுப்படுத்தலாம். அப்படிப்பட்ட நிலையில் சில கருப்பு உணவுகளை சாப்பிட ஆரம்பித்தால் உடல் எடை வேகமாக குறையும். எனவே அவை என்னென்ன உணவுகள் என்பதை பார்ப்போம்.


உடல் எடையை குறைக்க இந்த கருப்பு பொருட்களை சாப்பிடுங்கள்


1. கருப்பு பூண்டு
பூண்டு நமது உணவின் ஒரு பகுதியாகும், ஆனால் நீங்கள் கருப்பு பூண்டை ருசித்திருக்க மாட்டீர்கள். இதில் கருப்பு பூண்டில் இரும்புச்சத்து, விட்டமின் பி, சி, கே, செலினியம், கால்சியம் ஆகிய பல சத்துக்கள் உள்ளன. கருப்பு பூண்டு ஒரு லேசான சுவை மற்றும் மூல பூண்டை விட மென்மையான, ஒட்டும் நிலைத்தன்மையைக் கொண்டுள்ளது. அதிபோல் வெள்ளைப் பூண்டை விட இரண்டு மடங்கு வைட்டமின் சி மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் இதில் உள்ளதால் கெட்ட கொலஸ்ட்ரால் மற்றும் உடல் பருமனை குறைக்க இது உதவுகிறது.


மேலும் படிக்க | சட்டுபுட்டுனு உடல் எடையை குறைக்கணுமா? அப்போ இதை சாப்பிடுங்கள்


2. கருப்பு அரிசி
நீங்கள் வெள்ளை மற்றும் பிரவுன் அரிசியை பல முறை சாப்பிட்டிருப்பீர்கள், ஆனால் நீங்கள் எப்போதாவது கருப்பு அரிசியை முயற்சித்திருக்கிறீர்களா? இதில் ஆந்தோசயனின் மற்றும் ஆக்ஸிஜனேற்றம் உள்ளது. கறுப்பு அரிசியில் இருக்கும் நார்ச்சத்து, எடையைக் குறைப்பது மட்டுமல்லாமல், டைப்-2 நீரிழிவு நோயின் அபாயத்தையும் குறைக்கும். இதனை உணவாக அன்றாடம் எடுத்துக்கொள்வதால், உடல் ஆரோக்கியமாக இருக்கும். மேலும் உடல் எடையை குறைக்க விரும்புவர்களும் கருப்பு கவுனி அரிசியை தாராளமாக எடுத்து கொள்ளலாம்.


3. கருப்பு தேநீர்
பால் மற்றும் சர்க்கரை சேர்த்து தயாரிக்கப்படும் சாதாரண டீயில் பல தீமைகள் உள்ளன, இதற்கு பதிலாக பிளாக் டீயை உட்கொள்ள வேண்டும், இதில் உள்ள பாலிபினால்கள் செல் சேதத்தை குறைக்கிறது, கெட்ட கொழுப்பைக் குறைக்கிறது மற்றும் உடல் எடையை கட்டுப்படுத்த உதவுகிறது.


4. ​கரு நாவல் பழம்
​ஸ்ட்ராபெர்ரி போன்ற பெர்ரி பழங்கள் உடலுக்கு அதிக நன்மைகளை அளிக்கின்றன. அவற்றில் கரு நாவல் பழம் என்னும் ப்ளாக் பெர்ரியும் முக்கியமான பழமாகும். கரு நாவல் பழத்தில் பல வகையான ஊட்டச்சத்துக்கள் காணப்படுகின்றன, இது ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். மேலும் இந்த ​கரு நாவல் பழத்தால் அதிகரித்து வரும் எடையை குறைக்கலாம்.


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன்னர் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | கொழுப்பை எரிக்க உதவும் பொட்டாசியம் நிறைந்த ‘சில’ உணவுகள்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ