நமக்கு அதிக சோர்வு ஏற்படும் போதும், வேலையின்போது தூக்ககலக்கமாக உணர்ந்தாலும், உடனடியாக காபி அல்லது டீ குடிக்கலாமா என்று தான் முதல் தோன்றும். ஆனால், சோர்வையும் சலிப்பையும் எதிர்த்துப் போராட உதவும் சில சூப்பர் பானங்களை அருந்துவது பலன் தரும். சோம்பலை விரட்டி, நாள் முழுவதும் சுறுசுறுப்பாக உணர விரும்பினால், எனர்ஜியை அள்ளிக் கொடுக்கும் பானங்களுடன் நாளைத் தொடங்குவது சிறந்த தேர்வாக இருக்கும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மருத்துவ குணங்கள் நிறைந்த சில இயற்கை பானங்கள் உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். உங்கள் ஸ்டாமினாவையும் ஆற்றலையும் அதிகரிக்க உதவும் அற்புத பானங்களை (Energy Boosters) அறிந்து கொள்ளலாம்.


பீட்ரூட் சாறு (Beetroot Juice)


பீட்ரூட் ஜூஸ் குடிப்பது உங்கள் ஆரோக்கியத்திற்கு ஒரு வரப்பிரசாதமாக இருக்கும். பீட்ரூட்டில் நைட்ரேட் அதிகமாக உள்ளதால்,இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. உடற்பயிற்சி செயல்திறன் மற்றும் ஸ்டாமினாவையும் அதிகரிக்கிறது. பீட்ரூட் சாறு ஆற்றல் அளவை அதிகரிப்பதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். பீட்ரூட்டில் உள்ள அனைத்து கூறுகளும் உங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு (Health Tips) மட்டுமல்ல, உங்கள் சரும ஆரோக்கியத்திற்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.


கேரட் சாறு (Carrot Juice)


கேரட் சாறு குடிப்பதன் மூலமும் நாள் முழுவதும் உற்சாகமாக உணரலாம். அதிகபட்ச பலனைப் பெற, அதிகாலையில் கேரட் ஜூஸ் குடிப்பது நல்லது. இந்த இயற்கை சாற்றின் உதவியுடன், நீங்கள் நாள் முழுவதும் சுறுசுறுப்பாக உணர முடியும். உடல் பயிற்சிக்கு முன் கூட இந்த பானத்தை நீங்கள் உட்கொள்ளலாம்.


ஆப்பிள் சாறு (Apple Juice)


நார்ச்சத்து நிறைந்த ஆப்பிள் ஜூஸை குடிப்பதன் மூலம், எனர்ஜி குறையாமல் இருப்பதோடு, உங்கள் எடை இழப்பு பயணத்தை பெரிய அளவில் எளிதாக்கலாம். ஆப்பிள் சாறு ஆற்றல் அளவையும் அதிகரிக்கும். ஆப்பிள் சாறு உங்கள் வளர்சிதை மாற்றத்தை அதிகரிப்பதன் மூலம் உங்கள் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் பயனுள்ளதாக இருக்கும்.


மேலும் படிக்க | உங்களுக்கு குதிகால் வெடிப்புகள் அதிகமாக இருக்கிறதா? குணப்படுத்த வீட்டு வைத்தியம்


ஏபிசி ஜூஸ் (ABC Juice)


ஆப்பிள், பீட்ரூட், கேரட் மூன்றையை சேர்த்து தயாரிக்கும் ஜூஸ் மிகவும் சிறந்த தேர்வாக இருக்கும். இதில் சிறிது உப்பு, இஞ்சி மற்றும் எலுமிச்சையுடன் கலந்து தயாரித்தால், சர்க்கரை இல்லாத சிறந்த பானம் தயார். ஆரோக்கியமான இந்த ஜூஸில் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்துள்ளது. 


வாழைப்பழ மில்க் ஷேக் (Banana Milk Shake)


வாழைப்பழத்தில் கார்போஹைட்ரேட், இயற்கை சர்க்கரை மற்றும் பொட்டாசியம் நிறைந்துள்ளது. அவை நிலையான ஆற்றலை வழங்குகின்றன. இது ஸ்டாமினாவை அதிகரிப்பதற்கான சிறந்த தேர்வாக அமைகிறது. உடலுக்கு தேவையான எனர்ஜி நாள் முழுவதும் கிடைக்கும்.


ஆரஞ்சு (Orange Juice)


ஆரஞ்சுகளில் வைட்டமின் சி, ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் இயற்கை சர்க்கரைகள் நிரம்பியுள்ளன. அவை ஆற்றல் அள்ளிக் கொடுத்து, உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன, சோர்வைத் தடுக்கின்றன. 


(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். Zee Media இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | இந்த குப்பை உணவுகளுக்கு குட்பை சொல்லுங்கள்...! புத்தாண்டு உறுதிமொழி வெல்லட்டும்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ