Cracked Heels Home Remedy | குளிர்காலத்தில் சருமம் வறட்சியடையும். இது குதிகால்களையும் பாதிக்கும். சிலருக்கு குதிகால்களில் மிகப்பெரிய அளவில் வெடிப்பு கூட ஏற்படும். தொடர்ச்சியாக குதிகால்களை கவனிக்கவில்லை என்றால், அது சருமத்தில் தொற்றுக்கு வழிவகுக்கும். இதனால், குதிகால்களில் இருந்து ரத்தம் வெளியேறும். இப்படி இருக்கும்போது நடைபயிற்சி செய்வதில் சிக்கல்களை ஏற்படுத்தும். எனவே, குதிகால் வெடிப்பு தொடங்கும் போது உடனே அதனை சரிசெய்ய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். அதனால், குதிகால் வெடிப்பு பிரச்சனையை வீட்டிலேயே எப்படி எளிதாக குணப்படுத்தலாம் என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
குதிகால் வெடிப்புக்கான வீட்டு வைத்தியம்
1. குதிகால் வெடிப்பு இருந்தால், வெதுவெதுப்பான நீரைப் பயன்படுத்துங்கள். இந்த தண்ணீரில் உப்பு கலக்கி அதனுடன் சில துளிகள் எலுமிச்சை சாறு சேர்க்கவும். இரவில் அனைத்து வேலைகளையும் முடித்துவிட்டு, இந்த நீரில் 15 நிமிடம் உங்கள் கால்களை ஊறவைத்து உட்காரவும். பாதங்கள் முழுவதுமாக தண்ணீரில் நனைந்து மென்மையாக மாறியதும், கால் ஸ்க்ரப்பரைக் கொண்டு மெதுவாக குதிகால்களை சுத்தம் செய்யவும். பின் மருத்துவர் பரிந்துரைத்த கால் கிரீம் தடவி தூங்க செல்லவும்.
2. வேப்ப இலைகளைப் பறித்து பகலில் வைக்கவும். இரவில் இந்த இலைகளை அரைக்கவும். அதில் மஞ்சள் கலந்து வெடிப்புள்ள குதிகால் மீது தடவவும். சிறிது நேரத்துக்குப் பின் கழுவவும். பின்னர் கிரீம் தடவி தூங்க செல்லவும்.
3. வேப்ப எண்ணெயுடன் கிளிசரின் கலந்து தினமும் இரவில் தூங்கும் முன் தடவி வந்தால் வெடிப்புள்ள குதிகால் விரைவில் குணமாகும். இரவு தூங்கும் முன் குதிகால்களை சுத்தம் செய்து தேங்காய் எண்ணெய் தடவி வந்தால் பலன் கிடைக்கும்.
மேலும் படிக்க | குளிர்காலத்தில் துணிகள் காயவில்லையா? இந்த வழிகளை முயற்சி செய்து பாருங்கள்!
4. அரை எலுமிச்சை சாற்றை அரிசி மாவில் கலக்கவும். இது ஸ்க்ரப் தயார் செய்யும். இந்த ஸ்க்ரப் மூலம் இறந்த சருமம் நீங்கும். தண்ணீரை மிதமாக சூடாக்கவும். அதில் 2 ஸ்பூன் தேன் கலந்து உங்கள் கால்களை 15 நிமிடம் ஊற வைக்கவும். உங்கள் கால்களை சுத்தம் செய்த பிறகு, தூங்கும் முன் கிரீம் தடவவும். ஒவ்வொரு இரவும் தூங்கும் முன் புதிய கற்றாழையை வெடிப்பு உள்ள குதிகால் மீது தடவவும்.
5. கிளிசரின் மற்றும் ரோஸ் வாட்டரை சம அளவு எடுத்துக் கொள்ளவும். இரவில் உங்கள் பாதங்களை சுத்தம் செய்து, இந்த கலவையை அவற்றின் மீது தடவவும். ஒரு இரவு முழுவதும் விட்டு விடுங்கள்.
6. தண்ணீரை மிதமாக சூடாக்கவும். அதில் உப்பு மற்றும் வினிகர் சேர்க்கவும். இந்த நீரில் உங்கள் கால்களை 10 நிமிடங்கள் வைக்கவும். இப்போது உங்கள் பாதங்களை மென்மையான டவலால் சுத்தம் செய்து அதன் மீது மருத்துவர் பரிந்துரைத்த கால் க்ரீம் தடவவும்.
7. ஒரு கிண்ணத்தில் ஒரு தேக்கரண்டி கிளிசரின் எடுத்துக் கொள்ளுங்கள். அதில் மூன்று ஸ்பூன் ரோஸ் வாட்டர் சேர்க்கவும். முதலில் குதிகால்களை சுத்தம் செய்து பின்னர் இந்தக் கலவையைக் கொண்டு மசாஜ் செய்யவும்.
குதிகால்களுக்கு வீட்டிலேயே ஃபுட் பேக் தயாரித்தல்
வீட்டிலேயே ஃபுட் பேக்குகளை தயாரித்து தடவினால் குதிகால் வெடிப்பில் இருந்து விரைவில் நிவாரணம் கிடைக்கும். வாரத்திற்கு இரண்டு முறை கூட இந்த பேக்கை தடவி வந்தால், உங்கள் குதிகால் முன்பு போல் ஆகிவிடும். எவ்வளவு குளிராக இருந்தாலும் குதிகால் வெடிப்பு பிரச்னை இருக்காது. பேக் செய்ய, இரண்டு பொருட்கள் தேவை - வாழைப்பழம் மற்றும் தேன். பழுத்த வாழைப்பழத்தை எடுத்து நன்றாக மசிக்கவும். அதில் இரண்டு ஸ்பூன் தேன் கலக்க வேண்டும். பேக் செய்து தயார். இதை குதிகால் வெடிப்புகளில் தடவி 20 நிமிடங்கள் உலர விடவும். பின்னர் உங்கள் குதிகால்களை வெதுவெதுப்பான நீரில் கழுவி, கிரீம் தடவி தூங்கச் செல்லுங்கள்.
கணுக்கால் மசாஜ்
மசாஜ் செய்வதன் மூலம் குதிகால் விரைவில் குணமாகும். இது குதிகால் வெடிப்புகளை குணப்படுத்துவது மட்டுமல்லாமல், மன அழுத்தம், தூக்கமின்மை போன்ற பிரச்சனைகள் உள்ளவர்களுக்கும் நிவாரணம் அளிக்கிறது. கடுகு, தேங்காய், பாதாம், ஆலிவ் அல்லது ஆமணக்கு எண்ணெயை மசாஜ் செய்ய பயன்படுத்தலாம். சிறந்த முடிவுகள் வேண்டும் என விரும்புகிறவர்கள் தினமும் தூங்கும் முன் பாதங்களை எண்ணெய் கொண்டு மசாஜ் செய்ய வேண்டும்.
(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | பல் சொத்தைக்கு முன் தோன்றும் 3 முக்கிய அறிகுறிகள்..! வீட்டு வைத்தியம் இருக்கு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ