கடந்த 24 மணி நேரத்தில், இந்தியாவில் COVID-19 நோய் பாதித்த 20,033 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் மொத்த குணமடைந்தவர்களின் எண்ணிக்கையானது  பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை விட அதிகமாகியிருக்கிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட கோவிட் -19 நோயாளிகளின் மீட்பு வீதம் வெள்ளிக்கிழமையன்று இந்தியாவில் 60.73 சதவீதத்தை எட்டியுள்ளது ஒரு நல்ல செய்தியாக இருக்கிறது.  


கோவிட் -19 க்கான தடுப்பு தொடர்பான உயர்நிலை ஆய்வுக் கூட்டம் வெள்ளிக்கிழமையன்று நடைபெற்றது.  இந்தக் கூட்டத்தில் மாநில மற்றும் யூனியன் பிரதேச செயலர்களுடன், மத்திய அமைச்சரவை செயலாளர் கலந்தாலோசனை நடத்தினார்.


Also Read | China: வெள்ளதால் சீரழியும் சீனாவில் IV நிலை அவசரகால எச்சரிக்கை


கோவிட்-19 பாதிக்கப்பட்டவர்களில் குணமடைந்த மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 3,79,891 ஆகும், தற்போது 2,27,439 பேருக்கு நோய் பாதிப்பு உள்ளது.  எனவே COVID-19 பாதித்தவர்களின் எண்ணிக்கையை விட குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,52,452 அதிகம் என்பது ஆக்கப்பூர்வமான முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது.


அதேபோல் பரிசோதனை எண்ணிக்களிலும் கணிசமான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது, இது வரை 93 லட்சம் மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில், 2,41,576 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன.  இன்றுவரை 92,97,749 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


இந்தியாவில் ஊரடங்கு தளர்வுக்குப் பிறகு, கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6 லட்சத்தைத் தாண்டியது. அதேபோல், இன்று தமிழகத்தில் மட்டும் 4,329 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.