Curry Leaves For Healthy Hair: கறிவேப்பிலையை நாம் தினசரி உணவில் பயன்படுத்தினாலும் அதை ஒரு மூலிகை என்றே சொல்லும் அளவு பல நன்மைகளைக் கொண்டது. உணவின் சுவை மற்றும் நறுமணத்தை அதிகரிப்பதற்காக, நாம் கறிவேப்பிலையை பயன்படுத்துகிறோம். கறிவேப்பிலையை மிகவும் குறைவாக பயன்படுத்தினாலும் அதன் தாக்கம் மிகவும் அதிகமானது. மலிவாகவும் எளிதாகவும் கிடைக்கும் இந்த அற்புதமான இலையினால் எந்த வித பக்க விளைவுகளும் ஏற்படுவதில்லை. என்பது இதன் சிறப்பம்சம் ஆகும். கறிவேப்பிலை, உடலின் சர்க்கரை அளவைக் குறைக்கும், செரிமானத்தை மேம்படுத்தும். கறிவேப்பிலையில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் கூறுகள் பல நோய்களிலிருந்து நம்மைப் பாதுகாக்கின்றன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தலைவலி, இதய நோய்களைத் தடுக்க உதவும் கறிவேப்பிலையின் பயன்கள் இத்துடன் முடிந்துவிடவில்லை. சருமம் மற்றும் கூந்தலின் அழகையும் மேம்படுத்தும். கறிவேப்பிலை பல நோய்களுக்கு அருமருந்து என்று ஆயுர்வேதம் கூறுகிறது. பல முடி பிரச்சனைகளை நீக்கும் கறிவேப்பிலையை எப்படி பயன்படுத்தினால் கூந்தல் அழகாகும்?


மேலும் படிக்க | ஆரோக்கியத்திற்கு உகந்த இந்த காய்கறிகளே உடல்நலனுக்கு எதிராகும்


கறிவேப்பிலை மற்றும் தேங்காய் எண்ணெய்
கறிவேப்பிலை மற்றும் தேங்காய் எண்ணெய் ஜோடி, முடி உதிர்வதை தடுக்கும் சிறந்த கூட்டணி ஆகும்.தேங்காய் எண்ணெயில் கறிவேப்பிலையை சூடாக்கி, ஆற வைத்த பிறகு, தேவைப்படும்போது, தலைக்கு தேய்த்து வந்தால், சிறந்த ஹேர் ஆயில் ரெடி. இது தலைமுடிக்கு புத்துயிர் கொடுக்கிறது.


இந்த எண்ணெயை முடியில் தடவினால், முடிகளின் வேர்கள் உறுதியாகும் உறுதியான வேர்களில் இருந்து வலிமையான முடி முளைக்கும். கறிவேப்பிலை கலந்த தேங்காய் எண்ணெயை பயன்படுத்தத் தொடங்கிய சில நாட்களில் முடி கொட்டுவது நிற்பதுடன், புதிய முடிகள் முளைப்பதையும் காணலாம்.


 



கறிவேப்பிலை முடி கருமை மாஸ்க் -  
கருமையான கூந்தலுக்கு கறிவேப்பிலை மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதற்கு கறிவேப்பிலையை கடுகு எண்ணெயில் வதக்கில் அதில் அதனுடன் சிறிது கருஞ்சீரகத்தை சேர்க்கவும். இந்தக் கலவையை அரைத்து தலையில் பூசி, சற்று நேரம் கழுத்து முடியை அலசிவிடவும். அந்த தலைமுடி மாஸ்கைத் தொடர்ந்து பயன்படுத்துவதால், தலைமுடி கருமையாகவும், பளபளவென்றும் இருக்கும்.


மேலும் படிக்க | Honey For Skin: முகத்தில் உள்ள தழும்புகள் மறைய தேன்


கறிவேப்பிலை மற்றும் தயிர் பொடுகுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இவை இரண்டும் ஆன்டிபாக்டீரியல் பண்பு கொண்டவை. தலையில் ஏற்படும் தொற்றுகளை குணப்படுத்த இந்தக் கலவை உதவும். தயிரில் உள்ள வைட்டமின் சி உச்சந்தலையில் உள்ள அரிப்புகளையும் நீக்கும். கறிவேப்பிலையை எடுத்து அரைத்து அதில் தயிர் கலந்து தலையில் தடவவும். 


பளபளப்பான கூந்தலுக்கு கறிவேப்பிலை - முட்டை பேக்  
கறிவேப்பிலையை அரைத்து அதனுடன் முட்டை சேர்க்கவும். அதை கலந்து, கலவையை தலைமுடியில் தடவி 40 நிமிடங்களுக்குப் பிறகு தலைமுடியை ஷாம்பு செய்யவும். உண்மையில், இது ஒரு புரதம் நிறைந்த மாஸ்க் ஆகும், இது உயிரற்ற கூந்தலுக்கு உயிர் கொடுக்கும். மேலும், முடியின் தன்மையை மேம்படுத்தி, பளபளப்பாக்கும்.  


மேலும் படிக்க | சருமத்தில் சொறி, அரிப்பு தொல்லையா? இந்த வீட்டு வைத்தியங்களால் நிவாரணம் பெறலாம் 


நீண்ட கூந்தலுக்கு கறிவேப்பிலை மற்றும் வெங்காய சாறு தடவவும் 
நீளமான கூந்தலுக்கு, கறிவேப்பிலையை சாறு எடுத்து அதனுடன் வெங்காயச் சாறு சேர்க்கவும். இப்போது இந்த இரண்டையும் கலந்து உங்கள் தலைமுடியில் தடவவும். இது உங்கள் தலைமுடிக்கு புத்துயிர் ஊட்டி பளபளக்கச் செய்யும். தலைமுடியின் வளர்ச்சியை அதிகரித்து, வேரில் இருந்து ஊட்டமளிக்கும். 


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | அழகான சருமத்திற்கு அற்புத பலன் அளிக்கும் ஐந்து பொருட்கள்! தேங்காயின் அழகு வைத்தியம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ