இரவில் தண்ணீர் குடிப்பது உடலுக்கு நல்லதா? கெட்டதா?
Health News: இரவில் ஒன்று அல்லது 2 கிளாஸ் தண்ணீர் மட்டும் குடிப்பது நல்லது. அதிக தண்ணீர் குடித்தால் இந்த பிரச்சனைகள் ஏற்படலாம்.
நமது உடலின் பெரும்பகுதி தண்ணீரால் ஆனது. ஆகையால் தண்ணீரை சரியான அளவிலும் சீரான இடைவெளியிலும் குடிப்பது ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமானது. இல்லையெனில் உடலில் நீரிழப்பு மற்றும் பல பிரச்சனைகள் ஏற்படும்.
ஒரு ஆரோக்கியமான நபர் ஒரு நாளைக்கு 3 முதல் 4 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். ஆனால், இரவு நேரங்களில் தண்ணீர் அருந்தலாமா கூடாதா? அருந்தலாம் என்றால், எவ்வளவு அருந்தலாம்? இந்த கேள்விகள் பலரது மனதில் இருக்கும்.
இரவில் தண்ணீர் குடிக்கலாமா கூடாதா?
இரவில் தூங்குவதற்கு முன் தண்ணீர் குடிப்பது அவசியம் என்று நிபுணர்கள் நம்புகிறார்கள். இது உணவை ஜீரணிக்க எளிதாக்குகிறது. இது தவிர வைட்டமின்கள் மற்றும் தாதுக்களும் தண்ணீரால் உடலில் உறிஞ்சப்படுகின்றன. தண்ணீர் குடிப்பதன் மூலம், வளர்சிதை மாற்றம் ஆரோக்கியமாக இருக்கும். மேலும் நச்சுகள் மற்றும் கழிவுப்பொருட்களை வெளியேற்றுவதில் எந்த பிரச்சனையும் இருக்காது.
தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்
குறைந்த அளவு தண்ணீர் குடிப்பவர்களுக்கு உடலில் பல பிரச்சனைகள் ஏற்படுகின்றன. பகலில் அதிக தண்ணீர் குடிப்பதும், இரவில் தூங்குவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பும் தண்ணீர் குடிப்பதும் நல்லது. தூங்கும் போது அதிக தண்ணீர் குடித்தால், தூக்கம் வருவதில் சிக்கல் ஏற்படும் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.
மேலும் படிக்க | புதினாவில் மறைந்திருக்கும் ஆரோக்கிய ரகசியங்கள்
இவர்கள் அதிக தண்ணீர் குடிப்பதை தவிர்க்க வேண்டும்
நீரிழிவு நோயாளிகள் மற்றும் இதய நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இரவில் அதிக தண்ணீர் குடிப்பதை தவிர்க்க வேண்டும். இவர்கள் இரவில் அதிக தண்ணீர் குடித்தால், மீண்டும் மீண்டும் கழிப்பறைக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்படலாம். இதனால் இவர்களது உறக்கம் வெகுவாக பாதிக்கப்படலாம். உடல் ஆரோக்கியத்துக்குத் தேவையான 8 மணிநேர தூக்கம் இவர்களுக்கு கிடைக்காமல் போகலாம்.
இரவில் தண்ணீர் குடிக்கும் முறை?
சாதாரண தண்ணீரைக் குடிப்பதற்குப் பதிலாக, நீங்கள் எலுமிச்சை, கிரீன் டீ, மூலிகை தேநீர் மற்றும் பிற ஆரோக்கியமான பானங்களை குடிக்கலாம். சாதாரண தண்ணீரை அதிகம் குடித்தால், இரவில் அடிக்கடி சிறுநீர் கழிக்க எழுந்திருக்க வேண்டி வரலாம். இதனால் தூக்கம் வராமல் போகலாம். இரவில் ஒன்று அல்லது 2 கிளாஸ் தண்ணீர் மட்டும் குடிப்பது நல்லது, இது ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும்.
இரவில் தண்ணீர் குடிப்பது ஏன் முக்கியம்?
இரவில் உணவுக்குப் பிறகு தண்ணீர் குடிப்பதால், உடல் இயற்கையான முறையில் சுத்தப்படுத்தப்படும். இது நச்சுப் பொருட்களை வெளியேற்றி செரிமானத்திற்கு உதவுகிறது. அசிடிட்டி அல்லது கேஸ் பிரச்சனை உள்ளவர்கள் இரவில் கண்டிப்பாக தண்ணீர் குடிக்க வேண்டும். சளி இருமல் உள்ளவர்களுக்கு லேசான வெதுவெதுப்பான நீர் ஒரு சஞ்சீவியாக உதவும்.
மேலும் படிக்க | தினமும் எலுமிச்சை சாறு குடிப்பதன் மூலம் கிடைக்கும் நன்மைகள்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR