புதினாவில் மறைந்திருக்கும் ஆரோக்கிய ரகசியங்கள்

உணவின் சுவையை அதிகரிக்க புதினா அடிக்கடி பயன்படுத்தப்படுகிறது, ஆனால் அது ஆரோக்கியத்திற்கு எவ்வளவு நன்மை பயக்கும் தெரியுமா?

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Feb 22, 2022, 01:03 PM IST
  • புதினாவில் பல நன்மைகள் உள்ளன
  • பல்வலிக்கு நிவாரணம் அளிக்கும்
  • முகப்பருவில் இருந்து விடுதலை
புதினாவில் மறைந்திருக்கும் ஆரோக்கிய ரகசியங்கள் title=

புதுடெல்லி: இந்தியாவில் கிட்டத்தட்ட ஒவ்வொரு வீட்டிலும் புதினா பயன்படுத்தப்படுகிறது, ஆனால் இது ஐரோப்பாவிலிருந்து வந்த ஒரு தாவரம் என்பது சிலருக்குத் தெரியாது. இது சர்பத்தாக அதிகம் பயன்படுத்தப்படுகிறது, ஆனால் பெரும்பாலான மக்கள் புதினாவின் நன்மைகள் பற்றி அறிந்திருக்க மாட்டார்கள்.

இந்த 5 நோய்களில் இருந்து புதினா நிவாரணம் தரும்
புதினாவில் பாக்டீரியா எதிர்ப்பு, கிருமி நாசினிகள் மற்றும் வலி நிவாரணி பண்புகள் இருப்பதால் வலி தொடர்பான நோய்களை குணப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. புதினாவின் 5 அதீத நன்மைகளை பார்ப்போம்.

மேலும் படிக்க | புற்றுநோயின் இந்த அறிகுறிகளை அலட்சியம் செய்ய வேண்டாம்.

1. சளி மற்றும் இருமல்
தற்போது மாறிவரும் காலநிலையால் சளி, இருமல் வருவது சகஜம், அப்படிப்பட்ட சூழ்நிலையில் புதினாவை ஆவியில் எடுத்துக்கொள்வதன் மூலம் இத்தகைய நோய்கள் விரைவில் நீங்குகின்றன.

2. வயிற்று வலி
எக்குத்தப்பாக எதையும் சாப்பிடுவதால், பல பிரச்சனைகள் தொடங்குகிறது, அதன் பிறகு இது வயிற்றை வாட்டி வதைக்கிறது. அதன்படி சர்க்கரையுடன் புதினா சாறு சாப்பிட்டால், இந்த மிகப்பெரிய பிரச்சனை நீங்கிவிடும்.

3. தலைவலி
தற்போதைய வாழ்க்கை முறை, அலுவலக டென்ஷன், வேலையில் அழுத்தம் போன்ற காரணங்களால் தலைவலி தொடங்குகிறது. புதினா இலையை அரைத்து தலைக்கு தடவி வந்தால் தலைவலி குறையும்.

4. பல்வலி
எந்த வயதினருக்கும் வரக்கூடிய பல் பிரச்சனை தற்போது சகஜமாகிவிட்டது, இந்த வலியைப் போக்க புதினா பயன்படுத்தப்படுகிறது. புதினா படிகங்களை பற்களுக்கு இடையில் அழுத்துவது நன்மை பயக்கும்.

5. முகப்பரு
முகப்பரு பிரச்சனை டீன் ஏஜ் மற்றும் இளமை பருவத்தில் பொதுவானது, இதற்கு புதினா எண்ணெயை முகத்தில் தடவினால், முகப்பரு நீங்கிவிடும்.

மேலும் படிக்க | புற்றுநோயின் இந்த அறிகுறிகளை அலட்சியம் செய்ய வேண்டாம்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News