சிறுநீரகத்தில் அழுக்கு சேருவதால், அதில் நச்சுகள் சேரத் தொடங்குகின்றன, இதன் காரணமாக கற்கள் உருவாகும் அபாயமும் அதிகரிக்கிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சமீபத்தில் நடத்தப்பட்ட ஒரு புதிய ஆய்வின்படி, சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு புற்றுநோய் வருவதற்கான ஆபத்து அதிகம் உள்ளது. நீண்டகாலமாக சிறுநீரக நோயால் அவதிப்படுபவர்களுக்கும் புற்றுநோய் வரும் அபாயம் அதிகம் எனவும் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.


இந்த ஆராய்ச்சியின் முடிவுகள் அமெரிக்கன் ஜர்னல் ஆஃப் கிட்னி டிசீஸில் வெளியிடப்பட்டுள்ளன. டொராண்டோ பல்கலைக்கழகத்தின் அபிஜத் கிட்ச்லேவ் இந்த ஆராய்ச்சி அறிக்கையின் இணை ஆசிரியராக உள்ளார்.  சிறுநீரக நோய் உள்ளவர்கள் மற்றும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்தவர்களுக்கு புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு அதிகம் என்கிறார் கிட்ச்லூ.


மேலும் படிக்க |  Health Alert: பலாப்பழம் உண்ட பின் சாப்பிடக் கூடாத சில உணவுகள்


ஆராய்ச்சியின் போது 58,82,388 பேரின் தரவு பகுப்பாய்வு செய்யப்பட்டது. இவர்கள் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது டயாலிசிஸில் இருந்தவர்கள் அல்லது சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்தவர்கள்.


கிட்ச்லூ மேலும் கூறுகையில், சிறுநீரக நோய் உள்ளவர்கள், குறிப்பாக சிறுநீரக புற்றுநோய், பெருங்குடல் புற்றுநோய் அல்லது மல்டிபிள் மைலோமா இருந்தால் புற்றுநோயால் இறக்கும் அபாயமும் அதிகம். நீண்டகாலமாக சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு புற்றுநோய் பரிசோதனையை அடிக்கடி செய்ய வேண்டியது அவசியம் என்றார்.


இது தவிர, சிறுநீரகத்தில் அழுக்குகள் சேருவதால், அதில் நச்சுகள் சேரத் தொடங்குகின்றன, இதனால் கற்கள் உருவாகும் அபாயமும் அதிகரிக்கிறது. இந்த நோய்களைத் தடுக்க, சிறுநீரகத்தை எப்போதும் சுத்தமாக வைத்திருப்பது அவசியம். உங்கள் உணவில் பின்வருவனவற்றை  கண்டிப்பாக சேர்க்கவும்.


எலுமிச்சை


மருத்துவ குணங்கள் நிறைந்த எலுமிச்சையில் வைட்டமின் சி இருப்பதால், உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது என்று உணவு நிபுணர்கள் கூறுகின்றனர். எலுமிச்சம்பழம் சிறுநீரகத்தை சுத்தப்படுத்துவது மட்டுமின்றி, சிறுநீரக நோய்கள் வராமல் பாதுகாக்கும்.


இஞ்சி


சிறுநீரகத்தை சுத்தம் செய்வதில் இஞ்சி பயனுள்ளதாக இருக்கும். இஞ்சியில் கால்சியம், அயோடின், இரும்புச்சத்து மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. அவை சிறுநீரகத்திலிருந்து நச்சுகளை வெளியேற்ற உதவுகின்றன.


கொத்தமல்லி


கொத்தமல்லியில் மாங்கனீஸ், இரும்பு, மக்னீசியம், வைட்டமின் சி, வைட்டமின் கே மற்றும் புரதம் உள்ளது. கொத்தமல்லியின் அனைத்து பண்புகளும் சிறுநீரகத்தை சுத்தப்படுத்துவதில் பயனுள்ளதாக இருக்கும். கொத்தமல்லியை உணவில்  சட்னி அல்லது சாலட் வடிவில் சேர்க்கலாம்.


மேலும் படிக்க | இதய துடிப்பை சீராக்கும் ‘பொட்டாஷியம்’; இந்த அறிகுறிகளை அலட்சியம் செய்யாதீர்கள்!


சிவப்பு திராட்சை


சிவப்பு திராட்சையை உட்கொள்வது சிறுநீரகத்திற்கும் மிகவும் நன்மை பயக்கும். இதில் கனிமங்கள் நிறைந்துள்ளன. மேலும் இதில் வைட்டமின் சி, பி6 மற்றும் வைட்டமின் ஏ உள்ளது. அதுமட்டுமின்றி இதில் இரும்பு, கால்சியம், ஃபோலேட் மற்றும் பொட்டாசியம் உள்ளது. இது சிறுநீரகத்தை சுத்தப்படுத்த உதவும்.


தயிர்


தயிரில் நல்ல அளவு புரோபயாடிக் பாக்டீரியா உள்ளது, இது சிறுநீரகத்தை சுத்தம் செய்ய உதவுகிறது. தயிரில் உள்ள மருத்துவ குணங்கள் செரிமானத்தை பலப்படுத்துவதுடன் நோய் எதிர்ப்பு சக்தியையும் பலப்படுத்துகிறது. எனவே தயிரை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.


(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் எந்த மருத்துவ ஆலோசனைக்கும் மாற்றாக இல்லை. இது கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகிறது.)


மேலும் படிக்க | Health Alert! கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரிக்க காரணமாகும் ‘5’ பழக்கங்கள்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR