சிறு தானியங்களின் ராணியான ராகியை... யார் சாப்பிடலாம்.. யார் சாப்பிடக்கூடாது..!!
சிறுதானியங்களில் ராகி, அதாவது கேழ்வரகு முதலிடத்தில் உள்ளது. சிறுதானியங்களின் ராணி என அழைக்கபப்டும் இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் ஏராளம். அரிசியைவிட குறைந்த அளவு கார்போஹைட்ரேட் மற்றும் அதிகளவு நார்ச்சத்து உள்ளது.
சிறுதானியங்களில் ராகி, அதாவது கேழ்வரகு முதலிடத்தில் உள்ளது. சிறுதானியங்களின் ராணி என அழைக்கபப்டும் இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் ஏராளம். எலும்புகளை வலுப்படுத்தும் ராகி, நீரிழிவு ரத்த சோகை, உடல் பருமன், தூக்கப் பிரச்சினைகள், பதற்றம் போன்ற உடல் நல பிரச்சனை உள்ளவர்களுக்கு மாமமருந்தாக உள்ளது. கோழ்வரகில் அதிகளவு இரும்புச்சத்து உள்ளதால், உடலுக்கு வலிமை தரும். அரிசியைவிட குறைந்த அளவு கார்போஹைட்ரேட் மற்றும் அதிகளவு நார்ச்சத்து உள்ளது. கேழ்வரகு மிக குறைவான கிளைசெமிக் இண்டெக்ஸ் கொண்ட உணவு வகையைச் சேர்ந்தது.
உடல் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் பெரும்பாலானோர் சாதாரண கோதுமை மாவுக்குப் பதிலாகராகி மாவையே பயன்படுத்துகின்றனர். ஊட்டச்சத்துக் களஞ்சியமாக இருக்கும் இதில் அமினோ அமிலங்கள், ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள், வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் நார்ச்சத்து உள்ளது. உடல் பருமன், ஒற்றைத் தலைவலி, இதய நோய், மன அழுத்தம் மற்றும் நீரிழிவு நோயைக் குறைக்க உதவுகிறது. ராகி சாப்பிடுவதால் பல நன்மைகள் கிடைக்கும் என்றாலும், சிலர் இதனை சாப்பிடுவது பக்க விளைவையும் கொடுக்கும். இந்நிலையில், ராகியை யார் சாப்பிடலாம், யார் சாப்பிடக்கூடாது என்பதை தெரிந்து கொள்ளலாம்.
ராகி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் (Ragi Benefits)
நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் ராகி:
ராகியில் நல்ல அளவு பாலிபினால்கள் மற்றும் நார்ச்சத்து உள்ளது. இதன் கிளைசெமிக் குறியீடு மற்ற தானியங்களை விட குறைவாக உள்ளது. எனவே ராகி சாப்பிடுவதால் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறைகிறது. காலை உணவாக ராகி தோசை அல்லது இட்லியை கண்டிப்பாக சாப்பிடுங்கள். வியக்கத்தக்க பலன்களை பெறுவீர்கள்.
இரத்த சோகையை நீக்கும் ராகி:
ராகி சாப்பிடுபவர்களின் உடலில் இரும்புச்சத்து குறைபாடு இருக்காது. ராகி சாப்பிடுவதால் உடலுக்கு இரும்புச்சத்து அதிகம் கிடைக்கும். இரத்த சோகை நோயாளிகள் கண்டிப்பாக ராகியை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். ஹீமோகுளோபின் குறைவாக உள்ளவர்களுக்கு ராகி ஒரு நல்ல உணவு.
தூக்கம் மற்றும் மனச்சோர்வை நீக்கும் ராகி:
மன அழுத்தத்தை குறைக்கும் ராகியில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் காணப்படுகின்றன. இதை சாப்பிடுவதால், கவலை, மனச்சோர்வு, தூக்கமின்மை பிரச்சனைகள் நீங்கும். ராகியை தினமும் சாப்பிட்டு வந்தால் மன ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
உடல் பருமனை குறைக்கும் ராகி:
நார்ச்சத்து நிறைந்த ராகி உடல் பருமனை குறைக்க (Weight Loss Tips) உதவுகிறது. ராகி சாப்பிட்ட பிறகு நீண்ட நேரம் பசி எடுப்பதில்லை. இது அதிகப்படியான உணவை சாப்பிடுவதைத் தடுக்கிறது. இதன் மூலம் உடல் பருமனை கட்டுப்படுத்த உதவுகிறது.
எலும்புகளை வலுவாக்கு ராகி:
ராகியில் அதிக அளவு கால்சியம் உள்ளது. இதனால் எலும்புகள் வலுவடையும். எலும்புகள் ஆரோக்கியமாக இருக்க ராகியை தினமும் சாப்பிடுங்கள். குறிப்பாக கைக்குழந்தைகள், வளரும் குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிகள் ராகியை கண்டிப்பாக சாப்பிட வேண்டும்.
கொலஸ்ட்ராலைக் குறைக்கும் ராகி:
ராகியில் நார்ச்சத்து பைடிக் அமிலம் உள்ளது. இதன் காரணமாக கொலஸ்ட்ரால் குறைகிறது. ராகி இதயத்திற்கும் நல்லது என்று கருதப்படுகிறது. உங்கள் மூன்று வேளை உணவில் ராகியை ஒரு இறைச்சியாக சேர்த்துக்கொள்ளுங்கள்.
மேலும் படிக்க | இந்த பழங்களை தோலுடன் சாப்பிட்டால் நீரிழிவு நோயில் நிவாரணம் கிடைக்கும்
ராகி சாப்பிடுவதால் ஏற்படும் பக்க விளைவுகள்:
சிறுநீரக பிரச்சனை இருப்பவர்கள் ராகியை தவிர்க்க வேண்டும்
சிறுநீரகத்தில் கற்கள் பிரச்சனை மற்றும் சிறுநீர் கழிப்பதில் பிரச்சினை உள்ளவர்களுக்கு கேழ்வரகு உணவு ஏற்றதல்ல. ஏனெனில், கேழ்வரகை அதிகமாக உணவில் சேர்த்துக் கொள்வதால் நமது உடலில் ஆக்சாலிக் அமில தன்மை அதிகரிக்கிறது. எனவே, சிறுநீரக கற்கள் அல்லது சிறுநீரகம் தொடர்பான ஏதேனும் பிரச்சனை இருந்தால் ராகியை உட்கொள்ள வேண்டாம்.
தைராய்டு பிரச்சனை இருப்பவர்கள் ராகியை தவிர்க்க வேண்டும்
ராகியை அதிக அளவில் எடுத்துக் கொள்வது தைராய்டு நோயாளிகளின் பிரச்சனையை அதிகரிக்கும். ஹைப்போ தைராய்டு மற்றும் ஹைப்பர் தைராய்டு இரண்டு வகையான தைராய்டு பிரச்சினை உள்ளவர்களுமே கேழ்வரகு உணவை தவிர்ப்பது நல்லது.
சிறுகுடலில் சேதம்
ராகியை உணவில் அளவிற்கு அதிகமாக சேர்த்துக் கொள்வதால், சிறுகுடலில் சேதம் ஏற்படலாம். இதனால் வீக்கம், வாயு, வயிற்றுப்போக்கு மற்றும் மலச்சிக்கல் போன்ற உடல நல பிரச்சனைகள் ஏற்படலாம். மேலும் அதிக அளவிலான கேழ்வரகு பசியின்மை, வீக்கம், அஜீரணம் போன்ற செரிமானப் பிரச்சனைகளையும் ஏற்படுத்துகிறது.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ZEE NEWS இதை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | இறைச்சி, மீனை விட அதிக ஆற்றலை கொடுக்கும் டாப் ‘5’ சைவ உணவுகள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ