Covid vs Breastfeed: தாய்ப்பாலுக்கும் கோவிட் நோய்க்கும் உள்ள தொடர்பு இதுதான்...
கொரோனா வைரஸ் (COVID-19) தொற்றுநோய் குழந்தைகளுக்கு ஏற்படாமல் தடுக்கிறது தாய்ப்பால். தொற்று நோய்களுக்கு எதிராக செயல்படத் தேவையான ஆன்டிபாடிகளை தாயிடமிருந்து நேரடியாக குழந்தைகள் பெற்று கோவிட் நோயை எதிர்த்து போராடும் வலிமையைப் பெறுகின்றனர்.
கொரோனா வைரஸ் (COVID-19) தொற்றுநோய் குழந்தைகளுக்கு ஏற்படாமல் தடுக்கிறது தாய்ப்பால். தொற்று நோய்களுக்கு எதிராக செயல்படத் தேவையான ஆன்டிபாடிகளை தாயிடமிருந்து நேரடியாக குழந்தைகள் பெற்று கோவிட் நோயை எதிர்த்து போராடும் வலிமையைப் பெறுகின்றனர்.
குழந்தையின் வளர்ச்சிக்கு தேவையான கொழுப்பு, சர்க்கரை நீர், புரோட்டீன், மினரல் போன்ற சக்திகள், தாய்ப்பால் மூலம் சரியான அளவில் கிடைக்கிறது.
உணவில் நாம் அதிகம் சேர்த்துக் கொள்ளும் மருத்துவ குணமுள்ள உணவுப்பொருள் பூண்டு. இது தாய்ப்பாலின் அளவை அதிகரிக்கப் பெரிதும் உதவுகிறது. தினசை உணவில் பூண்டை பயன்படுத்தி வருவது தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கும்.
இப்படி, தாய்ப்பால் தொடர்பான தகவல்கள் நமக்கு தெரிந்தாலும், தற்போதைய கொரோனா தொற்று, கோவிட் நோய் காலத்தில், தாய்க்கு கோவிட் நோய் ஏற்ப்பட்டிருந்தால், அவருடைஅய் தாய்ப்பாலில் வைரஸ் கண்டறியப்படுகிறதா? அப்போது குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கலாமா என்பது போன்ற பல கேள்விகளுக்கு உலக சுகாதார அமைப்பு விளக்கங்களைக் கொடுத்துள்ளது.
கொரோனா தொற்று (Corona Virus) ஏற்பட்ட தாயிடம் இருந்து பிறந்த குழந்தைகள் பிரிக்கப்படும் தகவல்கள் வருகிறது. இது கவலையளிக்கும் செய்தியாக இருக்கிறது. இது தேவையற்றது. பிறந்த குழந்தையின் ஆரோக்கியத்திற்கும் நல்வாழ்விற்கும் தீங்கு விளைவிக்கும்.
கொரோனா பாதித்த பெண் தாய்ப்பால் கொடுப்பதற்கு தயங்க வேண்டியதே இல்லை. தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை, சரியாக பின்பற்றுவதில் கூடுதல் கவனம் செலுத்தவேண்டும்.
தாய்ப்பால் ஊட்டும் நேரம் தவிர மற்ற நேரத்தில் குழந்தையிடமிருந்து தன்னைத் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும்.
ALSO READ | சாதாரண சளியா ஒமிக்ரான்? எச்சரிக்கும் நிதி அயோக்
கொரோனா பாதிப்பு தீவிரமாக இருந்தாலோ, தாய்ப்பால் அளிக்கும் அளவுக்கு அவர் ஆரோக்கியம் இல்லாமல் இருந்தாலோ மட்டும் தாய்ப்பால் கொடுப்பதை தவிர்க்கலாம்.
உலக சுகாதார நிறுவனம் சில ஆய்வுகளுக்கு பின்பு இந்தத் தகவல்களை தெரிவித்துள்ளது. கர்ப்பிணியிடம் இருந்து, கருவில் உள்ள குழந்தைக்கு கொரோனா (Corona Virus) பரவுவது இல்லை.
மேலும், தாய்ப்பால் மூலமாக கொரோனா தொற்று பரவுவது மிகவும் அரிதான ஒன்று. அதுமட்டுமில்லாமல் தாய்ப்பாலில் கொரோனாவின் எந்தவகை வைரஸின் இருப்பும் கண்டறியப்படவில்லை என உலக சுகாதார அமைப்பு தெரிவிக்கிறது.
வழக்கமாக, கோவிட் போன்ற தொற்றுநோய் காலத்தில் குழந்தைகளுக்கு, மேல்பால் உட்பட பிற உணவுகளை கொடுப்பதைவிட, தாய்ப்பால் கொடுப்பதே மிகவும் நல்லது.
எனவே, கர்பிணிப் பெண்களும், இளம் தாய்மார்களும், பூண்டு, சர்க்கரை வள்ளிக்கிழங்கு, சீரகம், கேரட், பப்பாளி, முருங்கைக்கீரை, கறிவேப்பிலை, பாதம் பருப்பு என சத்துள்ள உணவுகளை உண்ண வேண்டும்.
இவ்வாறு, பெண்கள் சத்தான உணவை உண்டு, நோயெதிர்ப்பு ஆற்றலைப் பெற்றால், அது குழந்தைகளின் ஆரோக்கியத்திலும் எதிரொலிக்கும்.
ALSO READ | பூஸ்டர் தடுப்பூசி செலுத்தினால் நோய் எதிர்ப்பு மண்டலம் பாதிக்கப்படும்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR