நம் உடலில் கல்லீரல் தான், மிகவும் சுறுசுறுப்பான உறுப்பு. அதோடு, உடலில் மிகப்பெரிய உறுப்பாகவும் உள்ள கல்லீரலுக்கு, தன்னை சீர் செய்து கொள்ளும் திறன் உண்டு. உடலில் சேரும் நச்சுக்களை வடிகட்டுவதோடு மட்டுமல்லாமல், நாம் உண்ணும் உணவில் இருந்து ஊட்டச்சத்துக்களை பிரித்து உடலில் சேர்ப்பது, செரிமானம் வளர்சிதை மாற்றத்திற்கு உதவுவது, HDL என்னும் நல்ல கொலஸ்ட்ராலை உருவாக்குவது, ரத்த சிவப்பணுக்களை அதிகரிப்பது போன்ற பல வேலைகளை செய்கிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உடல் உழைப்பே இல்லாத இன்றைய வாழ்க்கை முறை, மோசமான உணவு பழக்கம் ஆகியவை காரணமாக, கொழுப்பு கல்லீரல் என்பது கிட்டத்தட்ட அனைவருக்கும் இருக்கும் ஒரு பாதிப்பாக இருக்கிறது. கல்லீரல் பாதிக்கப்பட்டால் நோய் எதிர்ப்பு சக்தியும் பாதிக்கப்பட்டு, உடலில் தொற்று நோய் ஏற்படும் அபாயங்களும் அதிகரிக்கின்றன.


கொழுப்புக் கல்லீரலுக்கு காரணமான உணவுகள் (Food That Causes Fatty Liver)


பலருக்கு கொழுப்பு கல்லீரல் அல்லது நோய் வருவதற்கு மதுப்பழக்கம் தான் காரணம் என்ற எண்ணம் உள்ளது. கட்டுப்பாடு இல்லாத மதுப்பழக்கம் கல்லீரலை காலி செய்து விடும் என்றாலும், உணவு பழக்க வழக்கமும் கல்லீரல் பாதிப்பிற்கு முக்கிய காரணமாக உள்ளது. பதப்படுத்தப்பட்ட உணவுகள், துரித உணவுகள் ஆகியவை கல்லீரலை காலி செய்து விடும். இன்றைய அவசரகதியிலான வாழ்க்கையில், நேரத்தை மிச்சப்படுத்த ரெடி டு ஈட் உணவு வகைகளை, நாம் அதிகம் தேர்ந்தெடுப்பது கல்லீரலுக்கு பெரும் ஆபத்தை உண்டு செய்யும். எனவே வீட்டில் சமைத்த உணவுகளை உண்பதே சிறப்பு. எப்போதாவது வெளியில் சாப்பிடுவதோ அல்லது துரித உணவுகளை எடுத்துக் கொள்வதோ பெரிதாக பாதிப்பை ஏற்படுத்தாது. ஆனால் அதையே வழக்கமாகக் கொண்டால், ஆரோக்கியத்தை இழக்கும் (Health Tips) நிலை ஏற்படும்.


கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உணவுகள் (Foods That Boosts Liver Health)


உடலில் சேரும் நச்சுக்களை நீக்கும் தொழிற்சாலையாக செயல்படும் கல்லீரலை ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டியது அவசியம். கல்லீரலில் சேரும் நச்சுக்களை, அவ்வப்போது டீடாக்ஸ் செய்வதால் கல்லீரல் (Foods for Liver Detox) ஆரோக்கியமாக இருக்கும். கல்லீரலை டீடாக்ஸ் செய்யும் உணவு பொருளில் முதலிடம் வகிப்பது நெல்லிக்காய். ஆன்ட்டி பாக்டீரியல், ஆன்ட்டி ஆக்ஸிடென்ட் பண்புகள், கல்லீரலில் சேரும் நச்சுக்களை நீக்கி ஆரோக்கியமாக வைக்கிறது. அதே போல் பூண்டையும் இந்த பட்டியலில் சேர்க்கலாம். பப்பாளி, வெண்ணைப்பழம் போன்ற பழங்களும், கல்லீரலை ஆரோக்கியமாக வைத்திருக்கும். காய்கறிகளில் இரும்புச் சத்து நிறைந்த கீரை, கல்லீரலில் சேரும் நச்சுக்களை நீக்குவதோடு, இரத்த சோகையை போக்கி, உடலை வலுவாக்கி நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கிறது.


மேலும் படிக்க | டெங்கு நோயாளிகளுக்கு பிளேட்லட் எண்ணிக்கையை அதிகரிக்க உதவும் சிறந்த பழங்கள்


கல்லீரல் பாதிப்பை உணர்த்தும் அறிகுறிகள் ( Symptoms of Fatty Liver)


கல்லீரலின் செயல்பாடு பாதிக்கப்பட்டால், உடலில் இருந்து நச்சுக்கள் சரியாக வெளியேற்றப்படாமல், ஆரோக்கியம் பாதிக்கப்படும். இதனால் வயிற்றுப் பகுதியில் வீக்கம், பாதங்களில் வீக்கம் அல்லது கூச்ச உணர்வு, செரிமானம் சரியாக நடைபெறாததால் அடிக்கடி ஏற்படும் குமட்டல் வாந்தி போன்றவை கல்லீரல் பாதிப்பை உணர்த்தும் எச்சரிக்கை அறிகுறிகள்.


கல்லீரலை தாக்கும் நோய்கள் ( Liver Diseases)


கல்லீரல் அழற்சி, மஞ்சள் காமாலை, கொழுப்புக் கல்லீரல், ஹெபடைடிஸ் ஆகியவை. கல்லீரல் பாதிப்பை ஆரம்பத்திலேயே கண்டு சரி செய்துவிட்டால், பாதிப்பு ஏற்படாமல் தப்பிக்கலாம். அலட்சியம் காட்டினால் கல்லீரல் செயலிழக்கும் அபாயம் உள்ளது.


(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)


மேலும் படிக்க | நரம்பு மண்டலத்தை பாதிக்கும் வைட்டமின் B12 குறைபாடு... அறிகுறிகளும்... உணவுகளும்..!!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ