பழைய காலங்களில் மக்கள் மண் பாத்திரங்களைத் தான் சமைக்கப் பயன்படுத்தினர். குறைந்த தீயில் மெதுவாக சமைத்த உணவின் சுவை அலாதியானது. இருப்பினும், மாறி வரும் காலங்களுக்கு ஏற்ப, சமையலறையில் மண் பாண்டங்களின் இடத்தை அலுமியம், எவர்சில்வர் பாத்திரங்கள் பிடித்தன. ஆனால் மண் பானைகளில் சமைப்பதால ஏற்படும் நன்மைகள் மற்றும் சுவையை பற்றி தெரிந்து கொண்டால், இன்றே நீங்கள் மண் பாத்திரத்திற்கு மாறக் கூடும்.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மண் பாத்திரங்களில் சமைப்பதன் நன்மைகள்


இரும்பு, கால்சியம் போன்றவை கிடைக்கின்றன: மண் கார தன்மை கொண்டது. இதன் காரணமாக, ஒரு மண் பானையில் உள்ள உணவின் pH அளவு சரியாக பராமரிக்கிறது. இது உணவை ஆரோக்கியமாக மாற்றுவதோடு மட்டுமல்லாமல், உணவின் சுவையையும் அதிகரிக்கிறது. இரும்பு, பாஸ்பரஸ், கால்சியம் மற்றும் மெக்னீசியம் ஆகியவை மண் பானைகளில் சமைப்பதன் மூலம் உணவில் ஏராளமாகக் கிடைக்கின்றன, அவை உடலுக்கு மிகவும் நன்மை பயக்கும்.


ALSO READ | அழகான கேசத்திற்கான Keratine சிகிச்சை; அதிக செலவில்லை, பழைய சாதம் போதும்


உணவின் ஊட்டச்சத்துக்கள் பாதுகாக்கப்படுகின்றன


மட்பாண்டங்களில் உள்ள சிறிய துளைகள் சூடு மற்றும் ஈரப்பதம் சமமாகப் பரவ செய்கின்றன. இதன் காரணமாக, உணவின் ஊட்டச்சத்துக்கள் பாதுகாக்கப்படுகின்றன. மற்ற பாத்திரங்களில் தயாரிக்கப்படும் உணவை விட மண் பானைகளில் தயாரிக்கப்படும் உணவில் உள்ள ஊட்டச்சத்துக்கள் அதிகம் காணப்படுவதற்கான காரணம் இதுதான்.


இதயத்திற்கு நன்மை பயக்கும்


உண்மையில், மண் பானைகளில் எண்ணெய் குறைவாகப் பயன்படுத்தப்படுகிறது. இதற்குக் காரணம், மண் பானைகளில் உணவை சமைக்கும் செயல்முறை. சமைப்பதற்கு நீண்ட எடுத்துக் கொள்கிறது, மேலும், உணவில் இயற்கை எண்ணெய் மற்றும் இயற்கை ஈரப்பதம் பாதுகாக்கப்படுகிறது. இதன் காரணமாக உணவில் அதிக எண்ணெய் பயன்படுத்த வேண்டிய அவசியமில்லை. அதிக எண்ணெய் பயன்படுத்தப்படாததால், இது நம் இதயத்திற்கும் நல்லது என்று அர்த்தம்.


ALSO READ | Health Tips: கொத்தரவரங்காயை சாதாரணமாக எடை போட வேண்டாம், வியக்கத்தக்க நன்மைகள் உள்ளன


உணவு சுவையாக இருக்கும்


மண் பானைகளில் சமைக்கப்பட்ட உணவு சுவையாக இருக்கும் என்பதை யாராலும் மறுக்க முடியாது. மண் பானைகள் களிமண்ணிலிருந்து தயாரிக்கப்படுவதால்,  மண் பானைகளில் சமைப்பது நமக்கு இயற்கையின் நன்மைகள் கிடைக்கின்றன.


மட்பாண்டங்களை எவ்வாறு பயன்படுத்துவது?


முதலாவதாக, ஒரு மண் பாத்திரத்தை வாங்கி வந்த பிறகு தண்ணீரில் மூழ்கி வைக்கவும். பின்ன ருலர்ந்த உடன், ஏதேனும், சமையல் எண்ணெயை தடவி, அதில் நிறைய தண்ணீர் நிரப்பி, பின்னர் குறைந்த தீயில் மூடி வைக்கவும். 2-3 மணி நேரம் சமைத்த பிறகு, அதை குளிர விடவும். இதனால் மண் பாத்திரம் வலுவாக மாறும். இதனுடன், பானையில் எந்தவிதமான கசிவும் ஏற்படாது, மண்ணின் வாசனையும் பானையிலிருந்து விலகிச் செல்லும்.


பாத்திரத்தில் உணவை சமைப்பதற்கு முன், அதை தண்ணீரில் 15-20 நிமிடங்கள் முழ்கி வைக்கவும். அதன் பிறகு, காய்ந்தவுடன், அதில் உணவை சமைக்கவும்.


ALSO READ | உணவே மருந்து: பல உடல் பிரச்சனைகளுக்கு தீர்வாகும் தயிர்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR