உடலில் கால்சியம் பற்றாக்குறை இருந்தால் எலும்புகள் வலுவிழந்து வலியை உணர வைக்கும். அதேபோல் தசைப்பிடிப்பும் தொடங்கும். வயது ஏற ஏற, கால்சியம் குறைபாட்டால் ஏற்படும் பிரச்சனைகள் அதிகரிக்க ஆரம்பிக்கின்றன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பொதுவாக கால்சியம் குறைபாட்டை போக்க பால், தயிர், பாலாடைக்கட்டி, சோயாபீன், எள் போன்றவற்றை சாப்பிட அறிவுறுத்தப்பட்டாலும், இது திவிரவும் சில உணவுகளிலும் கால்சியம் உள்ளது. அதன்படி கால்சியம் நிறைந்த ஐந்து உணவுகளை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்:


மேலும் படிக்க | High Cholesterol Foods: இந்த 5 பொருட்களில் அதிகளவு கொலஸ்ட்ரால் உள்ளது


விதைகள் ஊட்டச்சத்து நிறைந்தவை
விதைகள் ஊட்டச்சத்து நிறைந்தவை. இவற்றில் சில, கசகசா, எள் விதைகள் மற்றும் சியா போன்ற்றில் கால்சியம் அளவு அதிகமாக நிறைந்துள்ளது.


சானா மற்றும் ராஜ்மாவில் கால்சியம் நிறைந்துள்ளது
பருப்பு வகைகள் பெரும்பாலும் புரதம் நிறைந்ததாகக் கருதப்படுகிறது, ஆனால் சில பருப்புகளில் குறிப்பிடத்தக்க அளவு கால்சியம் உள்ளது. அதன்படி சனா மற்றும் ராஜ்மாவில் கால்சியம் அதிகளவு நிறைந்துள்ளது.


பாதாமில் கால்சியம் உள்ளது
பாதாம் உடலுக்கு எவ்வளவு ஆரோக்கியமானது என்பது அனைவருக்கும் தெரியும். பாதாமில் இருந்தும் நல்ல அளவு கால்சியத்தை நாம் பெற்றுக்கொள்ளலாம்.


பசலைக்கீரையில் இரும்புச்சத்துடன் கால்சியம் சத்தும் நிறைந்துள்ளது
பசலைக் கீரையில் இரும்புச்சத்து மட்டுமின்றி, கால்சியமும் அபரிமிதமாக இருக்கிறது. இதேபோல இஞ்சி, கடுகு விதைகள் நம் உடலில் கால்சியம் உறிஞ்சுதலை மேம்படுத்துகின்றன. வெந்தயம் பரோட்டா, கீரை தோசை, கீரை மற்றும் முட்டை ஆம்லெட் ஆகியவை கால்சியம் நிறைந்த உணவு பொருட்களாகும். 


ராகியில் கால்சியம் சத்தும் நிறைந்துள்ளது
ராகி மாவில் இரும்பு, புரதம் மற்றும் கால்சியம் சத்துக்கள் மிகுதியாக உள்ளது. ராகி ரொட்டி அல்லது ராகி தோசை செய்ய நீங்கள் சாப்பிடலாம். வயதானவர்கள் மற்றும் மாதவிடாய் நின்ற (மெனோபாஸ்) பெண்களுக்கு ஏற்படும் எலும்புத் தேய்மானம்  ஏற்படாமல் தடுக்க இது உதவும்.


எள் கால்சியம் நிறைந்தது
எள் விதைகளில் நம்பமுடியாத அளவிற்கு கால்சியம் சத்துக்கள் நிறைந்துள்ளது. எள் கொண்டு எண்ணற்ற தின்பண்டங்கள் தயாரிக்க முடியும். எள்ளில் அதிக அளவு காப்பர் சத்தும், கால்சிய சத்தும், மக்னீசியம், பாஸ்பரஸ், வைட்டமின் பி, ஈ, இரும்பு சத்தும் உள்ளன. இதனால் அன்றாட உணவில் எள் சேர்த்து கொள்வது ஆரோக்கியத்தை தரும். 


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன்னர் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ஜீ மீடியா இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)


மேலும் படிக்க | இஞ்சியை தோல் நீக்கி பயன்படுத்தும் பழக்கம் உள்ளதா; இந்த செய்தி உங்களுக்குத் தான் 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR