Next Pandemic Disease X: அறியப்படாத தொற்று அச்சுறுத்தல்களுக்கான மருத்துவ பாதுகாப்பு நடவடிக்கைகளில் விஞ்ஞானிகளைப் பணிபுரியச் செய்வதற்கான ஒரு வழியாக Disease X என்ற வார்த்தை பல ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்டது. அதாவது, எபோலா வைரஸ் போன்ற அறியப்பட்ட வைரஸ்களுக்குப் பதிலாக கோவிட் -19 வைரஸ் போன்ற எதிர்பாராத வைரஸ்கள் தொடர்பாக முன்கூட்டியே தெரிந்துக் கொள்ள உதவுவதர்காக உருவாக்கப்பட்ட முன்முயற்சிகளில் டிசீஸ் எக்ஸ் ஒன்று.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

திடீரென மக்களை தாக்கும் வைரஸ்களுக்கான தடுப்பூசிகள், மருந்து சிகிச்சைகள் மற்றும் நோயறிதல் சோதனைகள் உள்ளிட்ட தொழில்நுட்பங்களின் வளர்ச்சியை ஊக்குவிப்பதே Disease X என்பதன் பின்னணியாகும். இது தொற்றுநோய் அல்லது தொற்றுநோய்க்கான சாத்தியமான எதிர்கால பிரச்சனைகளுக்கு பதிலளிக்கும் வகையில் விரைவாக மாற்றியமைக்கப்பட்டு பயன்படுத்தப்படலாம்.


உலக சுகாதார அமைப்பு (WHO) தனது இணையதளத்தில் "முன்னுரிமை நோய்கள்" பட்டியலில் Disease Xஐ சில ஆண்டுகளுக்கு முன்னரே சேர்த்தது. கொரோனா, எபோலா, லாசா காய்ச்சல், மத்திய கிழக்கு சுவாச நோய்க்குறி (Middle East respiratory syndrome, MERS), நிபா மற்றும் ஜிகா போன்ற பட்டியலில் டிஸீஸ் எக்ஸ் நோயும் வகைப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க - முடிஞ்சா என்ன அடக்கி பார்! ஜல்லிக்கட்டு நடக்கும் இடத்திற்குள் வந்த நாய்!


'நோய் X' என்றால் என்ன?


நோய் X என்பது, உண்மையில் ஒரு நோயல்ல, நோயை குறிப்பிடப் பயன்படுத்தும் ஒரு சொல். இது மிக மோசமான நோயாக இருக்கலாம். டிசீஸ் எக்ஸ் என்பது ஒரு தற்காலிகப் பெயராகும் , இது பிப்ரவரி 2018 இல் உலக சுகாதார அமைப்பு (World Health Organisation) அவர்களின் திட்டவட்டமான முன்னுரிமை நோய்களின் பட்டியலில் எதிர்காலத்தில் தொற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய அதாவது இதுவரை அறியப்படாத நோய்க்கிருமியைக் குறிக்கிறது.


 2017 ஆம் ஆண்டில் நோய் X  பட்டியலிடப்பட்டது, ஆராய்ச்சிக்கு முன்னுரிமை அளிக்கும் இந்த வைரஸ் தொடர்பான தகவல்கள், சுவிட்சர்லாந்தின் டாவோஸில் நடைபெற்ற உலக பொருளாதார மன்றத்தில் விவாதிக்கப்பட்டது.


நோய் X ஆராய்ச்சிகளால் என்ன பயன்?


எக்ஸ் என்பது ஒரு புதிய நோய் முகவராக இருக்கலாம். அதாவது, வைரஸ், பாக்டீரியம் அல்லது பூஞ்சை என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். இது அறியப்படாத நோய்க்கு "முன்கூட்டியே தயார் நிலையில் இருப்பது" ஆகும். மேற்கு ஆப்பிரிக்காவில் 2014-2016 எபோலா தொற்றுநோய் ஏற்படுத்திய மனிதாபிமான நெருக்கடி ஏற்படுத்திய எச்சரிக்கை அழைப்பு, எக்ஸ் ஆராய்ச்சிக்கு வித்திட்டது.


ஏனென்றால், பல ஆண்டுகள் ஆராய்ச்சிகள் இருந்தபோதிலும், 11,000 க்கும் மேற்பட்ட உயிர்களை பலி வாங்கிய எபோலா, போன்ற நோய்களை சமாளிக்கும் விதமாக, "முன்னுரிமை நோய்களுக்கான" கருவிகளின் வரம்பை விரைவுபடுத்துவதற்காக உலக சுகாதார நிறுவனம் பல முயற்சிகளை எடுத்துவருகிறது.


மேலும் படிக்க | மீண்டும் மீண்டு வருகிறதா கொரோனா? கோவிட் நோயை ஏற்படுத்தும் புதிய ஒமிக்ரான் எரிஸ்


கிரிமியன்-காங்கோ ரத்தக்கசிவு காய்ச்சல், எபோலா வைரஸ் நோய் மற்றும் மார்பர்க் வைரஸ் நோய், லாசா காய்ச்சல், மத்திய கிழக்கு சுவாச நோய்க்குறி (MERS) மற்றும் SARS, நிபா மற்றும் ஹெனிபவைரல் நோய்கள், பிளவு பள்ளத்தாக்கு காய்ச்சல், ஜிகா, கோவிட் 19, 
நோய் X என பட்டியல் நீள்கிறது.


SARS-CoV-2 வைரஸின் மரபணு வரிசை வெளியிடப்பட்டதிலிருந்து முதல் கோவிட் தடுப்பூசிக்கு அங்கீகாரம் வழங்குவதற்கு வெறும் 326 நாட்களே ஆனது, நோய் Xக்கான தயாரிப்பில் 2017 ஆம் ஆண்டு முதல் மேற்கொள்ளப்பட்ட பணிகளே இதற்கு காரணம்.


CEPI, $3.5 பில்லியன் திட்டத்தின் கீழ் உருவாகும் தொற்றுநோய்க்கான சாத்தியக்கூறுகளுடன் 100 நாட்களுக்குள் புதிய தடுப்பூசிகளை உருவாக்கக்கூடிய விரைவான தடுப்பூசி உருவாக்குவது உட்பட பல முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது.


மேலும் படிக்க - Palamedu Jallikattu Live: பாலமேடு ஜல்லிக்கட்டு... 4ஆவது சுற்று நிறைவு - முதலிடத்தில் நீடிக்கும் பிரபாகரன்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ