உங்களுக்கு மூட்டுவலி பிரச்சனை இருந்தால், எலுமிச்சை கிராஸ் டீ மிகவும் உதவியாக இருக்கும். ஏனென்றால் இதில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிறைந்து இருப்பதால், முழங்கால்களின் வீக்கம் மற்றும் வலியைக் குறைக்கிறது. கூடுதலாக இதில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. இது உடலில் கால்சியத்தை உறிஞ்சுவதற்கு உதவுகிறது. இதன் காரணமாக எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், முழங்கால் வலிக்கு நிவாரணமாகவும் அமைகிறது. தினமும் காலையில் எலுமிச்சம்பழ டீயை குடித்தால் நிச்சயம் மூட்டு வலி பிரச்சனைக்கு நிவாரணம் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
மூட்டுவலி பிரச்சனையில் லெமன் கிராஸ் டீ குடியுங்கள்-


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

1. வைட்டமின் சி நிறைந்தது


வைட்டமின் சி நோயெதிர்ப்பு அமைப்பு சரியாக செயல்பட உதவுகிறது மற்றும் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்திலிருந்து உடலைப் பாதுகாக்கிறது. மூட்டுவலியில் வலி மற்றும் வீக்கத்தை அதிகரிக்க ஆக்ஸிஜனேற்ற அழுத்தம் செயல்படுகிறது. அத்தகைய சூழ்நிலையில், எலுமிச்சை டீ உட்கொள்வது உடலுக்கு நன்மை பயக்கும்.


மேலும் படிக்க | உடல் எடை ஓவரா எகிறுதா? இரவு உணவில் இதை சாப்பிடுங்க.. சூப்பரா குறையும்


2. மூட்டு வலியில் நிவாரணம்


மூட்டு வலியைக் குறைக்க லெமன் டீ உதவுகிறது. இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் என்சைம்கள் நம் உடலில் இருக்கும் நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது. மேலும், ஆரோக்கியமான செல்களை மேம்படுத்தவும், மூட்டு வலியைக் குறைக்கவும் உதவுகிறது. எனவே, உங்களுக்கு மூட்டுவலி பிரச்சனை இருந்தால் எலுமிச்சம்பழ டீ செய்து குடிக்கவும்.


3. நச்சு நீக்கம் செய்ய உதவும்


லெமன் டீ வயிற்றுப் பிரச்சனைகளைக் குறைக்க உதவுகிறது மற்றும் கல்லீரல் செயல்பாட்டைத் தூண்டுகிறது. அதன் பிறகு, இது அமைப்பிலிருந்து நச்சுகளை வெளியேற்ற உதவுகிறது. இதன் மூலம், உடலில் ஏற்படும் வீக்கத்தைக் குறைப்பதோடு, மூட்டுவலி பிரச்சனையைத் தடுக்கவும் உதவுகிறது.


(பொறுப்பு துறப்பு: இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொது அறிவை அடிப்படையாகக் கொண்டவை. அதை ஏற்றுக்கொள்ளும் முன் மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE NEWS அதை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | முடி அதிகம் உதிர்கிறதா? இந்த டிப்ஸ் பாலோ பண்ணி பாருங்க!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ