Anti Aging Water: முகத்தின் முதுமை ரேகைகளை விரட்டும் ‘மேஜிக்’ நீர்..!!!
முகத்தின் சுருக்கங்களை அகற்றி முகம் பளிங்கு போல் இளமையாக இருக்க, வீட்டிலேயே இந்த அற்புதமான ஆண்டி ஏஜிங் நீரை (Anti Aging Water) தயாரிக்கலாம்.
Anti Aging Water: முகத்தின் அழகை அதிகரிக்க பெண்கள் பல்வேறு வகையான பொருட்களை பயன்படுத்துகின்றனர். ஆனால் பல சமயங்களில் இவற்றைப் பயன்படுத்துவதால் முகத்தில் எந்த மாற்றமும் ஏற்படாது. இதற்காக நீர் பெரிதாக எதையும் வங்கவே தேவையில்லை. உங்கள் சமையலறையில் இருக்கும் சில பொருட்களை சரும பராமரிப்பில் பயன்படுத்தலாம். இந்தியாவின் சமையல் அறையில் பல வகையான மசாலாப் பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன, அவை ஆரோக்கியத்திற்கும் சருமத்திற்கும் நன்மை பயக்கும்.
இலவங்கப்பட்டை மற்றும் நட்சத்திர சோம்பு உணவில் பயன்படுத்தப்படுகிறது. இவற்றால் உணவின் சுவை கூடுகிறது. இதனுடன், இலவங்கப்பட்டை மற்றும் நட்சத்திர சோம்பும் சருமத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். இது பருக்கள், வறண்ட சருமம், சுருக்கங்கள் போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுவித்து அற்புதங்களை நிகழ்த்துகிறது. இலவங்கப்பட்டை ஆண்டி ஏஜிங் வாட்டரை எப்படி தயாரித்து பயன்படுத்த வேண்டும் என்பதை இன்று அறிந்து கொள்ளலாம்.
ALSO READ | வெறும் வயிற்றில் வாழைப்பழம் சாப்பிடும் வழக்கம் உள்ளதா; இந்த செய்தி உங்களுக்குத் தான்..!!
Anti Aging Water தயாரிக்க தேவையான பொருட்கள்
நட்சத்திர சோம்பு - 3
இலவங்கப்பட்டை - 1 அங்குலம்
தண்ணீர்- 500 மில்லி
முதுமையை விரட்டும் மேஜிக் தண்ணீரை தயாரிக்கும் முறை
முதலில், மூன்று பொருட்களையும் பாத்திரத்தில் சேர்த்து கொதிக்க விடவும்.
1. குறைந்த தீயில் கொதிக்க விடவும்.
2. தண்ணீரின் நிறம் மாறியதும், அடுப்பை அணைக்கவும்.
3. இப்போது இந்த தண்ணீரை குளிர்விக்கவும்.
4. ஆறிய பிறகு பாட்டிலில் நிரப்பி ஃப்ரிட்ஜில் வைக்கவும்.
5. உங்கள் முதுமையை விரட்டும் மேஜிக் நீர் தயாராக உள்ளது.
ALSO READ | Benefits of tomatoes: தக்காளியினால் ஏற்படும் ‘10’ அற்புதங்கள்..!!
ஆண்டி ஏஜிங் தண்ணீரை பயன்படுத்தும் முறை
ஆண்டி ஏஜிங் தண்ணீரை பயன்படுத்துவதற்கு முன் முகத்தை சுத்தம் செய்யவும். இப்போது இலவங்கப்பட்டை தண்ணீரை பருத்தியில் நனைத்து, முகம் மற்றும் கழுத்தில் தடவவும். இரவு முழுவதும் அப்படியே விடவும். காலையில் சாதாரண நீரினால் கழுவவும். இதனை தொடர்ந்து செய்து வந்தால், முகத்தின் சுருக்கங்கள், பருக்கள் அனைத்தும் நீங்கி, சருமம பொலிழு பெறும்.
ALSO READ | பகீர் தகவல்! காற்று மாசுபாடு விந்தணு எண்ணிக்கையை குறைக்கிறதா..!!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR