Omicron: அறிகுறிகள் என்ன? எவ்வளவு நாட்களில் தெரியும்? முக்கிய தகவல்கள் இதோ
கோவிட்-19-ன் புதிய மாறுபாடான ஓமிக்ரானின் அறிகுறிகள் என்னவென்று தெரிந்து கொள்வது மிக முக்கியமாகும்.
Covid 19 Alert in India: நாடு முழுவதும் கொரோனாவின் புதிய வகைகளால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது மக்களின் கவலையை அதிகரித்துள்ளது. இந்தியாவில் இதுவரை 2135 பேர் ஓமிக்ரான் மாறுபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர். நாட்டில் இந்த மாறுபாட்டால் பாதிக்கப்பட்ட மாநிலங்களின் எண்ணிக்கை 24 ஆக அதிகரித்துள்ளது.
அதிகபட்சமாக மகாராஷ்டிரா மற்றும் தலைநகர் டெல்லியில் அதிகமான ஓமிக்ரான் நோயாளிகள் பதிவாகியுள்ளன. இதையடுத்து கேரளா மூன்றாவது இடத்தில் உள்ளது. இதுவரை மகாராஷ்டிராவில் 653 பேரும், டெல்லியில் 464 பேரும், கேரளாவில் 185 பேரும் ஒமிக்ரான் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
டெல்டா மாறுபாட்டை ஒப்பிடுகையில் லேசாக உள்ளன அறிகுறிகள்
மருத்துவர்களின் கூற்றுப்படி, டெல்டா மாறுபாட்டுடன் ஒப்பிடும்போது ஓமிக்ரானின் அறிகுறிகள் லேசானவையாகவே உள்ளன. எனினும், ஓமிக்ரான் மிக வேகமாக பரவுகிறது. இது குறித்து மக்கள் மத்தியில் பெரும் பீதி நிலவுகிறது.
தற்போதைய நிலையில் இது குறித்து விழிப்புடன் இருப்பதும், கவனமாக இருப்பதும் தான் முக்கியம். எனவே கோவிட்-19ன் புதிய மாறுபாடான ஓமிக்ரானின் அறிகுறிகள் என்னவென்று தெரிந்து கொள்வது மிக முக்கியமாகிறது.
ஓமிக்ரானின் அறிகுறிகள்
ஓமிக்ரானின் அறிகுறிகள் (Symptoms of Omicron) மிகவும் லேசானவையாக உள்ளதாக கூறப்படுகிறது. இதன் தொற்றை எளிதாக அடையாளம் காண முடிவதில்லை. ஆகையால், உங்களுக்கு மத்தியிலும் ஒரு கொரோனா நோயாளி இருக்கலாம் என்பதை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள்.
பின்வரும் அறிகுறிகளில் ஏதேனும் ஒன்றை நீங்கள் கண்டால், கவனமாக இருக்க வேண்டும்:
1. சளி, மூக்கு ஒழுகுதல் மற்றும் தும்மல் ஆகியவை குளிர்காலத்தில் பொதுவானவை. ஆனால் இவை ஓமிக்ரானின் அறிகுறிகளாகவும் இருக்கலாம் என்பதால் புறக்கணிக்காதீர்கள்.
2. தொண்டையில் கரகரப்பு இருக்கலாம்.
3. ஓமிக்ரானால் பாதிக்கப்படும் போது சோர்வு மற்றும் பலவீனம் ஏற்படக்கூடும்.
4. கீழ் முதுகில் வலி ஏற்பட்டால் கவனமாக இருங்கள்.
5. தலைவலியும் இதன் அறிகுறியாக இருக்கலாம்.
6. இரவில் தூங்கும் போது அதிகமாக வியர்க்கும் பிரச்சனை ஏற்படலாம்.
7. தசை வலி இருக்கக்கூடும்
8. இது தவிர, காய்ச்சல், சளி மற்றும் ருசி, வாசனை தெரியாத நிலை ஆகியவையும் கொரோனாவின் அறிகுறிகளாகும்.
ALSO READ | எச்சரிக்கையுடன் இருங்கள்; Omicron இன் ஒரு முக்கிய அறிகுறி இதுதான்
அறிகுறிகள் தோன்றுவதற்கு எவ்வளவு நேரம் ஆகும்?
நிபுணர்களின் கூற்றுப்படி, ஓமிக்ரான் (Omicron) பரவுவதற்கான ஆபத்து அதிகம். ஒருவருக்கு கோவிட்-19 தொற்று இருந்தால், அறிகுறிகள் தோன்ற 5-6 நாட்கள் ஆகும். சில சந்தர்ப்பங்களில், இந்த காலம் 14 நாட்களாகவும் இருக்கலாம். இருப்பினும், நோய்வாய்ப்பட்ட நபர்களால் அறிகுறிகள் தோன்றுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பும், அறிகுறிகள் தோன்றிய பின்னர் பத்து நாட்கள் வரையிலும் மற்றவர்களுக்கு தொற்று பரவும்.
உங்களை தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள்
பாதிக்கப்பட்ட நபரின் தொடர்பில் நீங்கள் வந்திருந்தால், உங்களை தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள். மற்றவர்களிடமிருந்து 10 நாட்கள் இடைவெளியைப் பேணுவதன் மூலம், மற்ற நபர்களை தொற்றுநோயிலிருந்து பாதுகாக்கலாம். இதற்கிடையில், உங்களை நீங்களே சோதித்துக்கொள்ள வேண்டும்.
நீங்கள் முழுமையாக தடுப்பூசி (Vaccination) செலுத்திக்கொண்டிருந்தாலும், அனைத்து கொரோனா நெறிமுறைகளையும் பின்பற்றினாலும், தனிமைப்படுத்தப்படுத்திக்கொள்வது அவசியமாகும். தனிமையில் இருக்கும் போது ஏதேனும் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகவும்.
இந்த பிரச்சினைகள் ஏற்பட்டால், மருத்துவர்களை தொடர்பு கொள்ளவும்:
- மூச்சு திணறல்
- தொடர்ந்து நெஞ்சு வலி அல்லது அழுத்தம்
- விழிப்பதில் அல்லது விழித்திருப்பதில் சிக்கல்
- தோல் நிறத்தில் மாற்றம்
- உதடு அல்லது நகத்தின் நிறத்தில் மாற்றம்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR