கல்லீரலைக் கெடுக்கும் உணவுகளும், அவற்றின் பாதிப்புகளும் என்ன தெரியுமா?
அன்னம் அடங்கினால் ஐந்தும் ஒடுங்கும் என்பது பழமொழி. அதேபோல் அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பதும் முதுமொழி... ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும் பொருட்களை உண்டால் உடல்நலம் கெடும், மனநிம்மதியும் கெடும்... ஆரோக்கியமான வாழ்வுக்கு தவிர்க்க வேண்டிய சில உணவுகள்..
புதுடில்லி: நமது வாழ்க்கை முறையே (lifestyle) ஆரோக்கியத்திற்கு அடிப்படை ஆகும். இதைப் பற்றி எந்த சந்தேகமும் இல்லை, இருந்தாலும் கூட, நாம் பெரும்பாலும் ஆரோக்கியமான உடலுக்கான பழக்க வழக்கங்களை புறக்கணிக்கிறோம். நமது அலட்சியமான போக்கால் நமது உடல்நலமும் உடல் பாகங்களும் பெரிதும் பாதிக்கப்படுகின்றன. கல்லீரல் (lever) உடலின் மிக முக்கியமான பகுதியாகும்.
வயிற்றில் வலி, உணவு செரிமானத்தில் சிக்கல், புளித்த ஏப்பம் வருவது, சிறுநீர் மஞ்சள் நிறத்தில் வருவது மலத்தின் நிறத்தில் மாறுபாடு தோன்றுவது போன்ற அசெளகரியம் ஏதேனும் ஏற்பட்டால், கல்லீரலில் ஏதோ பிரச்சனை இருப்பதற்கான அறிகுறிகள் (symptoms of damage lever) என்பதை புரிந்துக் கொள்ள வேண்டும்.
கல்லீரலை ஆரோக்கியமாக வைத்திருக்க, சில உணவுகளிலிருந்து நம்மை விலக்கி வைப்பதோடு, ஆரோக்கியமான உணவு மற்றும் உடற்பயிற்சியை வாழ்க்கை முறையின் ஒரு பகுதியாக மாற்ற வேண்டும். கல்லீரலை சேதப்படுத்தும் சில உணவுகளைப் பற்றி தெரிந்துக் கொள்வோம்.
மது (Alcohol)
நமது உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பொருட்களை அழிக்கும் பணியை செய்வது கல்லீரலின் வேலையாகும். மது (alcohol) உட்கொள்வதால், கல்லீரல் அந்தத் திறனை இழக்கிறது, ஏனெனில் ஆல்கஹாலில் உள்ள தீங்கு விளைவிக்கும் கூறுகள், கல்லீரலின் செயல்படும் திறனை பெருமளவில் பாதிக்கிறது. அதிக அளவில் மது அருந்துவதால், கல்லீரலில் வீக்கம் ஏற்படும். அதோடு, கல்லீரலில் உள்ள அணுக்களில் அதிக கொழுப்பு சேர்கிறது. இவை கல்லீரலின் செயல்பாட்டில் சிக்கலை ஏற்படுத்துகின்றன. காரணமாகும்.
ஃப்ரெஞ்ச் ஃப்ரைஸ் (French fries)
ஃப்ரெஞ்ச் ஃப்ரைஸ் சாப்பிடும் போக்கு குழந்தைகள் மற்றும் இளைஞர்களிடையே அதிகரித்து வருகிறது, இது அவர்களின் கல்லீரலை சேதப்படுத்தும். ஃப்ரெஞ்ச் ஃப்ரைஸில் அதிக அளவு சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட் மற்றும் saturated fat உள்ளது, இவை கல்லீரலின் செயல்திறனைக் குறைக்கின்றன.
Read Also | Fit India 2020: உடல் நலனுடன் மன நலமும் முக்கியம் என்கிறார் பிரதமர் மோடி
சீஸ் பர்கர் (Cheese burger)
சீஸ் பர்கர் கல்லீரலின் ஆரோக்கியத்தை சிதைக்கிறது. ரெஸ்டாரண்ட்களில் தயாரிக்கப்படும் சீஸ் பர்கர்களில் அதிக அளவு கொழுப்பு உள்ளது. பாலாடைக்கட்டி அதாவது சீஸில் உள்ள விலங்குகளின் கொழுப்பு கல்லீரலை சேதப்படுத்துவதோடு, அது இதய நோய்களையும் ஏற்படுத்துகிறது என அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷன் (American Heart Association) கூறுகிறது.
மருந்துகள்
மருந்துகளை அதிகமாக உட்கொள்வதும் நமது கல்லீரலை சேதப்படுத்தும். அதுமட்டுமல்ல, கல்லீரல் செயலிழப்புக்கும் மருந்துகள் காரணமாகிறது. அதுமட்டுமல்ல ஆரோக்கியத்திற்காக நாம் எடுத்துக் கொள்ளும் health supplementகளை அதிகமாக உட்கொள்வதும் கல்லீரலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.
பாஸ்தா மற்றும் வெள்ளை ரொட்டி (Pasta and White Bread)
பாலிஷ் செய்யப்பட்ட தானியங்களில் இருந்து தயாரிக்கப்படும் உணவுகளில் அதிக அளவு சர்க்கரை உள்ளது. வெள்ளை ரொட்டி, பாஸ்தா, பீஸ்ஸா, பிஸ்கட் போன்ற பலவகை உணவுகள் பாலிஷ் செய்யப்பட்ட தானியங்களிலிருந்து தயாரிக்கப்படுகின்றன. அவற்றை சாப்பிடுவதால் கல்லீரலில் கொழுப்பின் அளவு அதிகரிக்கிறது, கல்லீரலில் வீக்கம் ஏற்படும் வாய்ப்புகளும் அதிகரிக்கின்றன.
உலர் திராட்சை
உலர் திராட்சையை ஓரளவிற்கு சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு நல்லது, ஆனால் அதை அளவுக்கு அதிகமாகப் உண்டால், அது கல்லீரலை சேதப்படுத்தும். உலர் திராட்சையில் அதிக அளவு சர்க்கரை மற்றும் கலோரிகள் உள்ளன. அதிலும் உலர் திராட்சையை வேகவைத்து சாப்பிட்டால், அது மிகவும் அதிகமான ஆபத்தை ஏற்படுத்திவிடும்.
Read Also | பல்லை சுத்தம் பண்ணினா போதாது, வயிற்றையும் சுத்தம் பண்ணனும்னு நினைச்சிருப்பாரோ..!!!!