பால் குடிக்க சரியான நேரம்: உடலுக்கு ஆரோக்கியம் அளிக்கும் உணவுகளின் வரிசையில் பாலுக்கு முக்கிய இடம் உள்ளது. பால் ஒரு முழுமையான உணவாக கருதப்படுகிறது. பாலில் உள்ள ஊட்டச்சத்து மிக அதிகம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பால் குடிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். பாலுக்கு ஒவ்வாமை உள்ளவர்கள் மட்டும் இதிலிருந்து விலகி இருக்கிறார்கள். 


புரதம், கால்சியம், துத்தநாகம், மெக்னீசியம் ஆகியவற்றுடன் பாலில் பல நுண்ணூட்டச்சத்துக்களும் காணப்படுகின்றன. பலர் பாலை சூடாக குடிக்க விரும்புகிறார்கள், சிலரோ அதை குளிர்ச்சியாக குடிக்க விரும்புகிறார்கள். சிலர் சர்க்கரையுடன், சிலர் சர்க்கரை இல்லாமல் பாலை உட்கொள்கிறார்கள். 


ஆனால், பாலை எப்படி குடித்தால் நல்லது? அதை சூடாக குடிக்க வேண்டுமா, அல்லது, குளிர்ச்சியாக குடிக்க வேண்டுமா? பாலை காலையில் குடிப்பது மிக நல்லதா? அல்லது, இரவில் குடிப்பது மிக நல்லதா? பால் தொடர்பாக இப்படி பல கேள்விகள் பலரது மனங்களில் இருக்கும். இவற்றுக்கான பதில்களை தற்போது தெரிந்துகொள்ள முயற்சி செய்யலாம். 


மேலும் படிக்க | அன்னாசிப்பழம் சாப்பிடுவது நீரிழிவு நோயாளிகளுக்கு உதவுமா? 


பருவத்திற்கு ஏற்ப பால் குடிக்கும் முறையை மாற்றவும்


பாலை குளிர்ச்சியாக குடிக்க வேண்டுமா அல்லது சூடாக குடிக்க வேண்டுமா என்ற கேள்விக்கான பதிலை அனைவரும் அறிய விரும்புகிறார்கள். இரண்டுமே நன்மை பயக்கும் என்று சுகாதார நிபுணர்கள் நம்புகிறார்கள். இருப்பினும், நீங்கள் அந்த முறையை பருவத்திற்கு ஏற்ப மாற்றலாம். 


கோடையில் பாலை குளிர்ச்சியாக குடிக்கலாம், ஆனால், பகலில் மட்டுமே அப்படி செய்ய வேண்டும். வெயில் காலத்தில் பாலை குளிர்ச்சியாக உட்கொண்டால், வெப்பத்தில் இருந்து நிவாரணம் கிடைக்கும். அதே நேரத்தில், குளிர்காலத்தில் இரவில் சூடான பாலை குடித்தால், அது நன்மை பயக்கும்.


இந்த நேரத்தில் குழந்தைகளுக்கு பால் கொடுங்கள்


ஆயுர்வேதத்தின் படி, தூங்குவதற்கு முன் பால் குடிப்பதே சரியான முறையாகும். இரவில் அதிக சுறுசுறுப்பு இல்லாவிட்டால், உங்கள் உடல் அதிக கால்சியத்தை உறிஞ்சிவிடும். அதே நேரத்தில், குழந்தைகள் காலையில் பால் குடிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். ஒன்று முதல் இரண்டு கப் பால் நாள் முழுவதும் போதுமானதாக கருதப்படுகிறது.


பால் என்னும் பொக்கிஷம்:


- பால் குடிப்பதால் பல நன்மைகள் உள்ளன, இதில் உள்ள கால்சியம் பற்கள் மற்றும் எலும்புகளை வலிமையாக்குகிறது.


- பாலில் உள்ள பொட்டாசியம் இதய ஆரோக்கியத்திற்கு நல்லது.


- பாலில் உள்ள வைட்டமின் டி இயற்கைக்கு மாறான செல் வளர்ச்சியைத் தடுக்கிறது. இதனால் புற்றுநோய் அபாயம் குறைகிறது.


- பால் குடிப்பதால், மகிழ்ச்சியுடன் தொடர்புடைய செரோடோனின் என்ற ஹார்மோனின் சுரப்பு தூண்டப்படுகிறது. இது பதற்றத்தை குறைக்கிறது.


- பால் குடிப்பதால், உடலுக்கு இயற்கையான கொழுப்பு கிடைக்கிறது. இது உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். இதனால் உடலில் தேவையற்ற கொழுப்பு அதிகரிக்காது.


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன்னர் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ஜீ மீடியா இந்த தலவல்களுக்கு பொறுப்பேற்காது.)


மேலும் படிக்க | ரொம்ப ஹேங் ஓவரா... வீட்டில் இருக்கும் பொருள்களை வைத்தே ஓரங்கட்டுங்க 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR