உலகத்தில் இருக்கும் மக்களில் கிட்டத்தட்ட 99 சதவீதத்தினர் மது அருந்துகின்றனர். அதிலும் வார இறுதி நாள்களில் பார்ட்டிக்கு செல்வதை ஒரு கலாசாரமாகவே பெரு நகரங்களில் பார்க்கின்றனர். அப்படி பார்ட்டிக்கு செல்பவர்கள் அடுத்த இரண்டு நாள்களுக்கு விடுமுறைதானே என்ற நினைப்பில் அளவுக்கு அதிகமாக மது அருந்துவார்கள்.
அப்படி மது அருந்துபவர்களுக்கு அந்த சமயம் கொண்டாட்டமாக இருந்தாலும் அடுத்த நாள் திண்டாட்டமாக ஆகிவிடும். ஹேங் ஓவர் ஏற்பட்டு நிற்கவும் முடியாமல், நடக்கவும் முடியாமல், எதையும் சாப்பிடவும் முடியாமல் அந்த ஹேங் ஓவரை கடப்பதற்குள் அவர்களுக்கு போதும் போதும் என்றாகிவிடும். எனவே ஹேங் ஓவரை வீட்டில் இருக்கும் பொருள்களைக் கொண்டே எளிதாக சமாளிக்கும் முறையை பார்க்கலாம்.
ஹேங் ஓவரைப் போக்க தக்காளி ஜூஸ் குடிக்கலாம். அதில் இருக்கும் பிரக்டோஸ் தேனில் உள்ள சர்க்கரையின் மற்றொரு உருவம். இது ஹேங் ஓவரை குறைக்கிறது,
அதேபோல், இஞ்சியும் ஹேங் ஓவரைப் போக்குவதற்கு உகந்த வழியாகும். இஞ்சியானது பொதுவாக செரிமானத்திற்கு உதவுவதால் அவை வயிற்றை மென்மையாக்கி ஹேங் ஓவரிலிருந்து விரைவான விடுதலையை வழங்குகிறது.
மேலும் படிக்க | Weight Loss: உடல் எடையை குறைக்க உதவும் டயட் உணவு முறை
அதுமட்டுமின்றி தேனும் ஒரு நல்ல தீர்வாகும்.அதில் இருக்கும் பொட்டாசியம் அளவு அதிகமாக மது அருந்துவதால் உடலில் ஏற்படும் எதிர்மறை விளைவுகளை குறைக்க உதவுகிறது. தேனில் பிரக்டோஸ் உள்ளது, சர்க்கரை வகையைச் சேர்ந்த இது ஹேங் ஓவரை தடுக்கிறது.
இவை எதுவுமே முடியாவிட்டால் ஹேங் ஓவரை போக்குவதற்கு நிறைய தண்ணீர் குடிக்கலாம். அதிகப்படியான மது அருந்துவதால் நம் உடலானது டிஹைட்ரேட் ஆகும் (நீரிழப்பு). அதனால் தலைவலி, சோர்வு, தலை சுற்றல் போன்ற பிரச்னைகளை அது உருவாக்குகிறது.
எனவே ஆல்கஹாலால் ஏற்படும் நீரிழப்பை சரி செய்ய, சீரான இடைவெளியில் தண்ணீர் குடித்தால் தேவையான் நீர்ச்சத்து கிடைத்து ஹேங் ஓவரை ஓரங்கட்டும்.
மேலும் படிக்க | காலை உணவை இப்படி சாப்பிட்டால் எந்த வயதிலும் தொப்பை வராது!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR