WHO on Monkeypox Transmission: மற்ற ஆண்களுடன் உடலுறவு கொள்ளும் ஆண்களுக்கு மட்டுமே குரங்கம்மை பரவுகிறது என்பது தவறானது என்று உலக சுகாதார அமைப்பு விளக்கம் அளித்துள்ளது. பாதிப்பு ஏற்பட்டவர்களில் பெரும்பாலானவர் ஆண்களுடன் உடலுறவு கொள்ளும் ஆண்களாக உள்ளனர், ஆனால் அவர்களுக்கு மட்டுமே குரங்கம்மை பாதிப்பு இருக்கும் என்று சொல்ல முடியாது என்று WHO டைரக்டர் ஜெனரல் டெட்ரோஸ் கூறுகிறார். சில நாடுகளில் சமூக பரவலாக மாறியிருக்கும் இந்த நோய்த்தொற்று பெண்களையும் பாதித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

WHO இன் மூத்த அதிகாரி ஒருவர் குரங்கு பாக்ஸ் நோய்த்தொற்று தொடர்பான தவறான நம்பிக்கைகளைக்  குறித்து எச்சரிக்கை தெரிவித்தார். குரங்கு அம்மை நோய், இப்போது PHEIC (சர்வதேச அக்கறையின் பொது சுகாதார அவசரநிலை) என வகைப்படுத்தப்பட்டுள்ளது.


மேலும் படிக்க | குரங்கு அம்மை நோய் பரவல் உலகளாவிய சுகாதார அவசரநிலையாக அறிவிப்பு: WHO


ஜெனீவாவில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய உலக சுகாதார அமைப்பின் குரங்கு நோய்க்கான தொழில்நுட்ப முன்னணி டாக்டர் ரோசாமுண்ட் லூயிஸ், நோய்க்கு எதிரான போராட்டத்தில் தவறான தகவல்கள் பாதிப்பை ஏற்படுத்தும் என்று தெரிவித்தார்.  


நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்த, குரங்கு காய்ச்சலின் ஒவ்வொரு வழக்குகளையும் அவற்றின் தொடர்புகளையும் கண்டறியுமாறு பாதிக்கப்பட்ட நாடுகளை உலக சுகாதார அமைப்பின் Tedros Adhanom Ghebreyesus வலியுறுத்தியுள்ளார்.


 ஆண்களுடன் உடலுறவு கொள்ளும் ஆண்களுக்கு நோயின் அறிக்கைகள் அதிகமாக இருப்பதாகக் கூறினார்.  பாதிப்பு ஏற்பட்டவர்களில் பெரும்பாலானவர் ஆண்களுடன் உடலுறவு கொள்ளும் ஆண்களாக உள்ளனர், ஆனால் அவர்களுக்கு மட்டுமே குரங்கம்மை பாதிப்பு இருக்கும் என்று சொல்ல முடியாது என்று WHO டைரக்டர் ஜெனரல் டெட்ரோஸ் கூறுகிறார். 


மேலும் படிக்க | குரங்கு அம்மைக்கு பெரியம்மை தடுப்பூசி - ஐரோப்பிய ஒன்றியம் ஒப்புதல்


WHO இன் கூற்றுப்படி, குரங்கு பாக்ஸ் பொதுவாக இரண்டு முதல் நான்கு வாரங்கள் வரை நீடிக்கும், அதன்பிறகு தன்னைத்தானே கட்டுப்படுத்திக் கொள்ளும்.


குழந்தைகள், கர்பிணிகள் மற்றும் பலவீனமான நோயெதிர்ப்பு அமைப்பு உள்ளவர்களுக்கு குரங்கம்மை நோய் ஆபத்தானது. பொதுவாக ஆறு முதல் பதின்மூன்று நாட்கள் வரை பாதிப்பு இருக்கும் என்றாலும், முழுமையாக குணமாக 21 நாட்கள் வரை ஆகலாம்.


இந்த ஆண்டு, 75 க்கும் மேற்பட்ட நாடுகளில் 16,000 க்கும் மேற்பட்டவர்களுக்கு குரங்கு அம்மை பாதிப்புகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன, உண்மையான எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம் என்றும் உலக சுகாதார அமைப்பு அச்சம் தெரிவித்துள்ளது.


எவ்வாறாயினும், விரைவாக பரவி வரும் குரங்கு காய்ச்சலை உரிய நடவடிக்கைகளால் தடுத்து நிறுத்த முடியும் என உலக சுகாதார அமைப்பு கூறுகிறது.


மேலும் படிக்க | 95 சதவீதம் குரங்கு அம்மை இதன் மூலம்தான் பரவுகின்றன! வெளியாகிய அதிர்ச்சி தகவல்


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ