குரங்கு அம்மைக்கு பெரியம்மை தடுப்பூசி - ஐரோப்பிய ஒன்றியம் ஒப்புதல்

Monkeypox : பெரியம்மைக்கான தடுப்பூசியை குரங்கு அம்மைக்குப் பயன்படுத்த ஐரோப்பிய ஒன்றியம் ஒப்புதல் அளித்துள்ளது. 

Written by - Chithira Rekha | Last Updated : Jul 25, 2022, 07:13 PM IST
  • குரங்கு அம்மைக்கு பெரியம்மை தடுப்பூசி
  • ஐரோப்பிய ஒன்றியம் அனுமதி
  • இரு வைரசுக்கும் ஒற்றுமை இருப்பதாகத் தகவல்
 குரங்கு அம்மைக்கு பெரியம்மை தடுப்பூசி - ஐரோப்பிய ஒன்றியம் ஒப்புதல் title=

உலகம் முழுவதும் குரங்கு அம்மை தொற்று வேகமாகப் பரவி வருகிறது. இதுவரை 75-க்கும் மேற்பட்ட நாடுகளில் 16 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு குரங்கு அம்மைத் தொற்று ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் கேரளாவில் 3 பேர், டெல்லியில் ஒருவர், தெலங்கானாவில் ஒருவர் என 5 பேருக்கு குரங்கு அம்மை பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

குரங்கு அம்மையை சர்வதேச சுகாதார அவசர நிலையாக உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது. இதனிடையே, பெரியம்மைக்கான தடுப்பூசியை குரங்கு அம்மைக்கு பயன்படுத்த ஐரோப்பிய ஒன்றியம் அனுமதி அளித்துள்ளது. இதுகுறித்து ஐரோப்பிய ஆணையத்தின் மருந்து கண்காணிப்பு பிரிவான பவேரியன் நார்டிக் வெளியிட்டுள்ள அறிக்கையில், டென்மார்க்கை சேர்ந்த மருந்து நிறுவனத்தின் இம்வானெக்ஸ் பெரியம்மை தடுப்பூசியை குரங்கு அம்மைக்கு எதிராகப் பயன்படுத்த அனுமதி அளிக்கப்படுவதாகத் தெரிவித்துள்ளது. 

மேலும் படிக்க | குரங்கு அம்மை நோய் பரவல் உலகளாவிய சுகாதார அவசரநிலையாக அறிவிப்பு: WHO

அனைத்து ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிலும், ஐஸ்லாந்து, நார்வே, லிச்டென்ஸ்டைன் ஆகிய நாடுகளிலும் இந்த உத்தரவு செல்லுபடியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இம்வானெக்ஸ் தடுப்பூசிக்கு ஐரோப்பிய ஒன்றியம் கடந்த 2013-ம் ஆண்டு அனுமதி அளித்தது. 

குரங்கு அம்மை வைரஸுக்கும், பெரியம்மை வைரஸுக்கும் ஒற்றுமை உள்ளதாகக் கருதுவதால், இந்த தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்த பிறகு குரங்கு அம்மை கட்டுக்குள் கொண்டு வரப்படும் என நிபுணர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க | 95 சதவீதம் குரங்கு அம்மை இதன் மூலம்தான் பரவுகின்றன! வெளியாகிய அதிர்ச்சி தகவல்

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News