இந்த சின்ன சைஸ் விதை இத்தனை அற்புதங்களை செய்யுமா..
Mustard Seeds Benefits: கடுகு எண்ணெயில் செய்யப்பட்ட உணவு எப்போதும் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் என்று கருதப்படுகிறது. அதேசமயம் நாம் சமையலில் தாளிக்க பயன்படுத்தும் கடுகு விதைகள் வெறும் சுவையை மட்டும் தருவதோடு ஏராளமான நன்மைகளையும் நமக்கு வழங்குகிறது.
கடுகு விதைகளின் நன்மைகள்: வடமாநிலத்தில் பெரும்பாலான வீடுகளில் கடுகு எண்ணெயில் மட்டுமே உணவுகள் தயாரிக்கப்படுகின்றன. அதேபோல் தென்னியாவில் நாம் சமையலில் தாளிக்க கடுகு விதைகளை பயன்படுத்துகிறோம். இவை சுவையை மட்டும் தருவதோடு ஏராளமான நன்மைகளையும் நமக்கு வழங்குகிறது. கடுகு விதைகளில் ஏராளமான விட்டமின்கள் மற்றும் தாதுக்கள் காணப்படுகிறது. இந்திய உணவுகளில் கடுகு விதைகளை அதிகமாக பயன்படுத்துவது உண்டு. மேலும் அவற்றில் கால்சியம் மற்றும் பொட்டாசியம் நிறைந்துள்ளது. பண்டைய காலங்களில், கடுகு விதைகள் பல வகையான மருந்துகளின் வடிவத்திலும் பயன்படுத்தப்பட்டன. சுகாதார நிபுணர்களின் கூற்றுப்படி, கடுகு விதைகள் மிகப்பெரிய நோயை அழிக்கும் திறன் கொண்டவை. அதேபோல் கடுகு விதைகள் இரத்த சர்க்கரை அளவை குறைத்து, நோய் மற்றும் தொற்றில் இருந்து பாதுகாப்பு அளிக்க உதவுகிறது. இப்படி இன்னும் என்னென்ன நன்மைகளை கடுகு விதைகள் தருகிறது என அறிவோம்.
சிறுநீரக ஆரோக்கியத்திற்கு கடுகு விதைகள் எவ்வாறு பயனுள்ளதாக இருக்கும்?
கடுகு விதைகளில் சோடியம் மற்றும் உப்பு அளவு மிகவும் குறைவு. நேஷனல் லைப்ரரி ஆஃப் மெடிசினில் வெளியிடப்பட்ட ஆய்வின்படி, உணவில் உப்பு குறைவாக உட்கொள்வது சிறுநீரக செயலிழப்பு அபாயத்தையும் குறைக்கிறது. குறிப்பாக நீண்டகாலமாக சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகள்.
மேலும் படிக்க | Peanut Butter: ஒரு ஸ்பூன் வேர்க்கடலை வெண்ணெயில் முட்டையை விட அதிக புரதம்!
சிறுநீரக கற்கள் பிரச்சனை உள்ளவர்களுக்கு உப்பு குறைவாக சாப்பிட மருத்துவர்கள் எப்போதும் பரிந்துரைக்கின்றனர். ஆரோக்கியமான சிறுநீரகங்கள் அதிகப்படியான திரவங்களை அகற்றி, சோடியம் மற்றும் திரவங்களை சமநிலையில் வைத்திருக்கின்றன. அதே நேரத்தில், நோய் காரணமாக, உங்கள் சிறுநீரகம் கூடுதல் திரவங்களை வெளியேற்ற முடியாது, இது உடலில் மன அழுத்தத்தை அதிகரிக்கும். குறிப்பாக இதயத்தில்.
எலும்புகள், பற்கள் மற்றும் ஈறுகளை வலுவாக்குகிறது
கடுகு விதைகள் எலும்புகள், பற்கள் மற்றும் ஈறுகளை வலுவாக்குகிறது. இதில் எலும்புகளை வலிமையாக கும் செலினியம் உள்ளது. இந்த செலினியம் சத்து நகங்கள், முடி மற்றும் வலுப்படுத்த உதவுகிறது. கடுகு விதைகளில் ஆன்டி ஆக்ஸிடன்கள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. அவை ஈறுகள், எலும்புகள் மற்றும் பற்களின் வலியைப் போக்க உதவுகிறது.
கடுகு விதையில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன
கடுகு விதைகளில் பினாலிக் கலவைகள் அதிகம் உள்ளன, அவை உடலில் உள்ள ஃப்ரீ ரேடிக்கல்களுடன் வினைபுரிந்து அவற்றின் தீங்கு விளைவிக்கும் விளைவுகளைத் தடுக்கின்றன.
மூட்டுவலி வலி நிவாரணம்
கடுகு விதைகள் முடக்கு வாதத்தின் அறிகுறிகளில் நிவாரணம் அளிக்கவும் வேலை செய்கின்றன. இவற்றில் செலினியம் மற்றும் மெக்னீசியம் உள்ளது, இவை இந்தப் பிரச்சனையைக் குறைக்கும்.
இரத்த சர்க்கரை அளவு குறைவாக உள்ளது
மருத்துவர்களின் கூற்றுப்படி, கடுகு விதைகளை தினசரி உட்கொள்வது டைப்-2 நீரிழிவு நோயில் இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க உதவுகிறது. அதனால் சர்க்கரை வியாதி உள்ளவர்கள் இந்த விதையை உபயோகிக்கலாம்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்ளும் முன் மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE NEWS அதை உறுதிப்படுத்தவில்லை.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ