முகம் பளிச்சுனு ஆக கொஞ்சம் வெண்ணெய் இருந்தா போதும்..! இதோ டிப்ஸ்
முகம் பளிச்சுனு ஆக கொஞ்சம் வெண்ணெய் இருந்தால் போதும். எப்படி உங்கள் முகத்தை பளிச்சினு மாற்றுவது என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
வெண்ணெய் மருத்துவம்
வெண்ணை சமையலுக்கு பயன்படும் ஒரு உணவு பொருள்னு எல்லோருக்கும் தெரியும். ஆனால் அது ஒரு இயற்கை அழகு சாதன பொருள்னு எவ்வளவு பேருக்கு தெரியும். முகத்தில் இருக்கக் கூடிய இறந்த செல்களை நீக்க ரெண்டு டேபிள் ஸ்பூன் வெண்ணெயுடன் சிறிதளவு உப்பு சேர்த்து நன்கு கலந்து வைத்துக் கொள்ளுங்கள். இதை மசாஜ் செய்து ஃபேஸ் பேக்காக போட்டு 15 நிமிடம் கழித்து காட்டன் துணியால் துடைத்து எடுத்தால் இறந்த செல்கள் நீங்கி விடும்.
மேலும் படிக்க | Summer Fruit: பார்க்கவும் அழகு! ஆரோக்கிய பண்பிலும் ஏ ஒன்! லிச்சிக்கு நிகர் லிச்சியே
ஆலிவ் எண்ணெய் சேர்ப்பு
சுத்தமான வெண்ணை வாங்கி வெண்ணை இரண்டு டேபிள் ஸ்பூன் அளவிற்கு எடுத்து அதில் ஒரு டேபிள் ஸ்பூன் ஆலிவ் ஆயில் சேர்த்து நன்கு கலந்து வைக்க வேண்டும். இந்த கலவையை முகம் முழுவதும் தடவி 15 நிமிடம் உலர விட்டு, பின்னர் துடைத்து எடுத்தால் இன்ஸ்டன்டாக உங்களுடைய முகம் பளிங்கு போல மின்னும். முகம் அடிக்கடி வறண்டு போனால் பப்பாளி பழத்தை கூழ் போல செய்து அதனுடன் ஒரு டேபிள் ஸ்பூன் பட்டர் சேர்த்து கிரீம் போல முகத்தில் தடவி உலர விட்டு துடைத்தால் நல்ல ரிசல்ட் தெரியும், எப்போதும் ஈரப்பதத்துடன் இருக்கும்.
முகம் பளிச்சுனு ஆகும்
அதிகப்படியான எண்ணெய் சருமத்தில் ஊறினால் ஒரு பாவக்காயை மிக்ஸியில்அடித்து கூழாக்கி கொள்ளுங்கள். அதனுடன் தேவையான அளவிற்குவெண்ணெயை சேர்த்து கலந்து முகத்தில் தடவி, உலர விட்டால் சருமபிரச்சனைகள் பலவும் தீரும். எண்ணெய் பிசுக்கு கொஞ்சம் கூட இருக்காது. அதிகப்படியாக முகத்தில் எண்ணெய் வழிவதை கட்டுப்படுத்த பாலில் ஒரு டேபிள்ஸ்பூன் வெண்ணெய் கலந்து கிரீம் போல கலந்து வைத்துக் கொள்ளுங்கள். இந்தகிரீமை முகம் முழுவதும் தடவி அப்ளை செய்து பின் துடைத்து எடுத்தால்ஆரம்பத்தில் முகத்தில் எண்ணெய் ஒட்டிக் கொண்டிருப்பது போலதோன்றினாலும், சிறிது நேரத்தில் நல்ல ரிசல்ட் தெரியும். வாரம் இரண்டு முறைஇதை செய்யலாம்.
மேலும் படிக்க | உடல் பருமன் கரைய... ‘இந்த’ சத்தான பிரெட்கள் உங்கள் டயட்டில் இருக்கட்டும்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ